Advertisment

அதிரவைக்கும் க்ளைமாக்ஸ்!

/idhalgal/cinikkuttu/climax

குடிப்பவர்கள் நிம்மதி யாக உறங்கிவிடுகிறார்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களுக் குத்தான் உறக்கம் போய் விடுகிறது என்கிற கருத்தினை மையமாகக்கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் "குடிமகன்.'

Advertisment

விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக்கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன்- செல

குடிப்பவர்கள் நிம்மதி யாக உறங்கிவிடுகிறார்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களுக் குத்தான் உறக்கம் போய் விடுகிறது என்கிற கருத்தினை மையமாகக்கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் "குடிமகன்.'

Advertisment

விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக்கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன்- செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற எட்டு வயது மகனுடன் வசித்துவருகிறார்கள்.

Advertisment

c

மகனின்மீது அதிக அன்பும், அக்கறை யும் கொண்டு வளர்த்துவருகிறார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டுவந்து பேரதிர்ச்சியைத் தருகிறார், அந்த ஊர் கவுன்சிலர்.

அதிர்ச்சியடைந்த அந்த ஊர்மக்கள், ஊர்த்தலைவரான அய்யா தலைமையில் போராட் டத்தில் இறங்குகிறார்கள். நாட்கள் செல்லச்செல்ல ஊரிலுள்ள ஆண்கள் எல்லாரும் குடிக்கு அடிமையாகி நிற்கிறார்கள். இந்த குடிமகன்களில் ஒருவனாக கந்தனும் மாறிவிடுகிறார்.

இதனால் கந்தனின் மனைவி செல்லக் கண்ணுவும், மகன் ஆகாஷும் பல கஷ்டங்களை சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்திற்குமேல் தாங்கமுடியாமல், யாருமே எதிர்பார்க்காத காரியத்தைச் செய்து ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர வைக்கிறாள் செல்லக்கண்ணு.

கந்தனாக நடிகர் ஜெய்குமார் நடிக்கி றார். இவர் தமிழ் சினிமாவின் முக்கிய மான ஆளுமைகளில் ஒருவரான பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரன் ஆவார். செல்லக்கண்ணுவாக "ஈரநிலம்' ஜெனிபர் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு- சி.டி. அருள் செல்வன், இசை- எஸ்.எம். பிரசாந்த், படத் தொகுப்பு- கே.ஆர். செல்வராஜ், பாடல் கள்- சினேகன், தை.து. இரவி அரசன், கலை- டி.ஆர்.கே. கிரண், இணைத் தயா ரிப்பு- செங்கை ஆனந்தன், ம.தனவனன்.

cine020419
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe