Advertisment

குடிமகன் -விமர்சனம்

/idhalgal/cinikkuttu/citizen-review

து ஒரு சின்ன கிராமம். கந்தன்- செல்லக்கண்ணு தம்பதிகளுக்கு ஆகாஷ் என்கிற மகன். கந்தனின் நண்பர்கள் சிலர், தினசரி சரக்கு அடித்தாலும் கந்தன் மட்டும் விலகியே இருக்கிறார். இந்தநிலையில் ஊருக்குள்ளேயே டாஸ்மாக் கடையைத் திறக்கிறார் ஆளுங்கட்சி கவுன்சிலர்.

Advertisment

கடையைத் திறக்கக் கூடாது என ஊர்த்தலைவர் பவாசெல்லதுரை

து ஒரு சின்ன கிராமம். கந்தன்- செல்லக்கண்ணு தம்பதிகளுக்கு ஆகாஷ் என்கிற மகன். கந்தனின் நண்பர்கள் சிலர், தினசரி சரக்கு அடித்தாலும் கந்தன் மட்டும் விலகியே இருக்கிறார். இந்தநிலையில் ஊருக்குள்ளேயே டாஸ்மாக் கடையைத் திறக்கிறார் ஆளுங்கட்சி கவுன்சிலர்.

Advertisment

கடையைத் திறக்கக் கூடாது என ஊர்த்தலைவர் பவாசெல்லதுரையுடன் சேர்ந்து ஊர்மக்கள் போராடுகிறார்கள். ஒரு மாதத்தில் கடையை மாற்றிவிடுவதாக கவுன்சிலர் உறுதியளித்ததும் போராட்டமும் வாபஸ் ஆகிறது. இந்த ஒரு மாதத்தில் ஊரிலிருக்கும் முக்கால்வாசி ஆண்கள் குடிக்கு அடிமையாகிவிடுகிறார் கள், கந்தன் உட்பட. கணவன் கந்தனின் குடியால் நிலைகுலைந்த செல்லக்கண்ணு என்ன முடிவெடுக்கிறாள் என்பதுதான் குடிமகனின் க்ளைமாக்ஸ்.

c

கந்தனாக வரும் ஜெயக்குமார் (கலைமாமணி அய்யா கலைஞானத்தின் பேரன்) இயல்பாக நடித்து நம்மை ஈர்க்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப்பின் செல்லக்கண்ணுவாக நடித்திருக்கும் ஜெனிபர், பாந்தமான குடும்பத் தலைவியாக வந்து வசீகரிக்கிறார் கள். இவர்களின் மகனாக வரும் ஆகாஷ்தான் படத்திற்கு பெரும்பலம். மற்றபடி கந்தனின் நண்பர்களாக வரும் வீரசமர், மாமாவாக வரும் கிருஷ்ணமூர்த்தி, பாலாசிங் என அனைவருமே குறைந்த சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்றாலும் நடிப்பில் ரொம்பவே நிறைவு.

ஆர்ப்பாட்டமான காட்சி அமைப்புகள் இல்லை. கருத்தாழ மிக்க சண்டைக் காட்சிகள் இல்லை. பிரம்மாண்ட செட்டிங் சீன்கள் இல்லை. இப்படி பல இல்லைகள் இருந் தாலும் "குடிமகன்' படத்தில் கதையின் அழுத்தம் இருக்கிறது.

குறைந்த பட்ஜெட் டில் சிறந்த படத் தைக் கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சத்தீஷ்வரனை தாராளமாக பாராட்ட லாம். இந்த மாதிரி படங்களுக்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்க தயாரிப் பாளர்கள் சங்கமும் சப்போர்ட்டா இருந்தாத்தான் நல்ல சினிமாக்களும் சினிமாவும் நல்லா இருக்கும்.

cine160419
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe