Advertisment

சினிமாவுல "அது' இருக்கு! இளம் ஹீரோயின் ஒப்பன் டாக்!

/idhalgal/cinikkuttu/cinema-its-young-heros-done

கேப்டன் விஜயகாந்தை வைத்து "உளவுத்துறை' படத்தை டைரக்ட் பண்ணிய ரமேஷ் செல்வனின் "வஜ்ரம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சமீரா. அதற் கடுத்து "வென்று வருவான்' படத்தின் ஹீரோயினும் இவர் தான். அந்த இரண்டு படங் களும் சுமார் ரிசல்ட் என்றா லும், அவ்வளவாக பாப்புலராக வில்லை சமீரா.

Advertisment

ஆனால், இப்போது சமீரா சாய் என்ற பெயருடன் களமிறங்கியிருக்கிறார். வாராகி டைரக்ஷன்- தயாரிப்பில் ஷூட்டிங் முடிவடையும் கட்டத் தில் இருக்கும் "அகம்பாவம்' படம் தனக்கு நிச்சயம் திருப்புமுனை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருக்கும் சமீரா சாய்யை ஒரு மதிய வேளையில் சந்தித் தோம்.

Advertisment

d

பார

கேப்டன் விஜயகாந்தை வைத்து "உளவுத்துறை' படத்தை டைரக்ட் பண்ணிய ரமேஷ் செல்வனின் "வஜ்ரம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சமீரா. அதற் கடுத்து "வென்று வருவான்' படத்தின் ஹீரோயினும் இவர் தான். அந்த இரண்டு படங் களும் சுமார் ரிசல்ட் என்றா லும், அவ்வளவாக பாப்புலராக வில்லை சமீரா.

Advertisment

ஆனால், இப்போது சமீரா சாய் என்ற பெயருடன் களமிறங்கியிருக்கிறார். வாராகி டைரக்ஷன்- தயாரிப்பில் ஷூட்டிங் முடிவடையும் கட்டத் தில் இருக்கும் "அகம்பாவம்' படம் தனக்கு நிச்சயம் திருப்புமுனை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருக்கும் சமீரா சாய்யை ஒரு மதிய வேளையில் சந்தித் தோம்.

Advertisment

d

பார்க்க பளிச்சுன்னு லட்சணமா இருக்கீங் களே, யூ ஆர் ஃப்ரம் மும்பை?

ஹலோ சார் தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழச்சிங்க நான். "சிகப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்'னு வடிவேல் படத் துல வர்ற காமெடி மாதிரி சிகப்பா இருந்தா மும்பையான்னு கேட்கு றீங்களே, இது உங்களுக்கே நியா யமா? தமிழச்சிகளை வாழ்த்தி வரவேற்பு கொடுங்க சார்.

வாழ்க தமிழ், வளர்க தமிழச்சிகள் என்று வாழ்த்திவிட்டு அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

இந்தப் படத்துல நமீதாங்கிற பெரிய ஆர்டிஸ்ட் இருக்காங் களே, உங்களோட கேரக்டர் எப்படி?

பத்திரிகை ரிப்போர்ட்டரா நமீதா மேடம் வர்றாங்க. நான் காலேஜ் ஸ்டூடண்டா வர்றேன். பத்திரிகை செய்தி சம்பந்தமா நான் அவுங்களுக்கு ஹெல்ப் பண்றேன். மத்தபடி எனக்கு நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டரைத்தான் டைரக்டர் வாராகி கொடுத்திருக்காரு. லவ் சீன்களில் வசனத்தைவிட எமோஷனலைத்தான் அதிகம் எதிர்பார்த்தார் டைரக்டர்.

அவரின் எதிர்பார்ப்பை ஓரளவு நிறைவேத்திருக்கேன்னு நம்புறேன்.

d

சரி, இந்தக் கம்பெனி எப்படி? டைரக்டர் வாராகி எப்படி?

இந்தப் படத்துல கமிட் ஆனதுமே "அய்யய்யோ... அந்தக் கம்பெனியா, வாராகியா, ரொம்ப கோபக்கார ஆளு'ன்னு ரொம்பவே பயமுறுத்து னாங்க. ஆனா அதற்கு நேரெதிராத்தான் எல்லாமே இருந்துச்சு. ஏற்காடு பக்கத் துல ஒரு கிராமத்துல ஷூட்டிங். செல்போன் டவர்கள் அவ்வளவாக ரீச் ஆகாத ஊரு. அப்படிப் பட்ட ஊர்லயே எல்லா ஏற்பாடுகளை யும் சிறப்பாகவே செய்திருந்தார் வாராகி சார். ஷாட்ல கோபப்படு வாரு. ஆனா 15 நிமிஷத் துலே கோபத்தை மறந்து ஜாலி மூடுக்கு மாறிடுவாரு. எல்லாருக்கும் ஒரே மாதிரியான, தரமான- சுவையான சாப்பாடு தான். சுருக்கமாச் சொன்னா எங்க அம்மா- அப்பா எப்படி என்னைக் கவனிச்சுக்குவாங்களோ அப்படிக் கவனிச் சுக்கிட்டார் வாராகி சார்.

ரொம்ப முக்கியமான கேள்வி இது.

சினிமா ஹீரோயின்னா அட்ஜெஸ்ட் மென்ட் பண்ணனும் என்கிறார்களே அதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

எல்லா ஹீரோயின்களும் அட்ஜெஸ்ட் பண்ணுகிறார்கள்னு சொல்லமுடியாது.

அதே நேரத்துல இப்ப வர்ற சில பொண் ணுங்க, அந்த மேட்டருக்கு ஓ.கே.ன்னு கேஷுவலா சொல்லிலி சம்பாரிக்கத்தான் செய்றாங்க என்பதையும் மறுப்பதற் கில்லை.

உங்களுக்கு அந்த அனுபவம் ஏற்பட்டதா?

ஏற்படப் பார்த்துச்சு... ஆனா நான் தப்பிச் சிட்டேன். பெரிய ஹீரோக்கள், ஹீரோ யின்களை வைத்து டைரக்ட் பண்ணிய பெரிய டைரக்டர் அவர். அவரோட ஒரு படத்திற்கு ஹீரோயினா என்னை கமிட் பண்ணி ஆபீசுக்கு வரச் சொன்னார். நானும் எனது அம்மாவும் அவரோட ஆபீசுக்குப் போனோம். நன்றாக உபசரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவர், "ஏம்மா கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாமா?'ன்னு கேட்டதும் நான் ஆடிப்போய்ட்டேன். அந்தப் பட சான்ஸே வேணாம்னு எங்க அம்மா சொல்லிட் டாங்க. நாம் இடம் கொடுத்தாத்தானே தப்பு நடக்கும்?

-ஈ.பா. பரமேஷ்வரன்

ஸ்டில்ஸ்: எஸ்.பி.சுந்தர்

cine070519
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe