Advertisment
/idhalgal/cinikkuttu/chowkar-400

"பார்த்த ஞாபகம் இல்லையோ' என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது சௌகார் ஜானகிதான். தெலுங்கில் "சௌக்காரு' என்ற படத்தில் என்.டி. ராமாராவுக்கு ஜோடியாக அறிமுகமா னார். அதன் பிறகு ஜானகி என்ற பெயருக்குமுன் "சௌக்காரு' என்ற பெயரை இணைத்து "சௌக்கார்' ஜானகி என்று அழைக்கப்பட்டார். 1952-ஆம் வருடம் "வளையாபதி' என்ற படத்தி

"பார்த்த ஞாபகம் இல்லையோ' என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது சௌகார் ஜானகிதான். தெலுங்கில் "சௌக்காரு' என்ற படத்தில் என்.டி. ராமாராவுக்கு ஜோடியாக அறிமுகமா னார். அதன் பிறகு ஜானகி என்ற பெயருக்குமுன் "சௌக்காரு' என்ற பெயரை இணைத்து "சௌக்கார்' ஜானகி என்று அழைக்கப்பட்டார். 1952-ஆம் வருடம் "வளையாபதி' என்ற படத்தின்மூலம் தமிழில் அறிமுக மானார். அதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல்; தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப் படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், நாகேஸ்வர ராவ், ஜெமினி கணேசன், நாகேஷ், ஸ்ரீகாந்த், ஏ.வி.எம்.ராஜன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஸ்ரீகாந்த் ஆகிய மூவருடன்தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

Advertisment

ccc

கமலுடன் நடித்த "ஹேராம்' படத் திற்குப்பிறகு 14 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் "வானவராயன் வல்லவ ராயன்' படத்தின்மூலம் மீண்டும் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய "சௌகார்' ஜானகி தற்போது ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இது இவருக்கு 400-ஆவது படமாகும்.

தனது இயக்கத்தில் "சௌகார்' ஜானகி நடித்ததையும் அவருடன் ஏற்பட்ட அனுபங்களையும் பற்றி இயக்குநர் கண்ணன் கூறியதாவது:-

Advertisment

""என் படத்தில் சந்தானத்துடன் இணைந்து நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதால் அவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

மிகப்பெரிய நடிகை 70 ஆண்டு களாக பல பெரிய நாயகர்களுடன் நடித்திருந்தாலும், இந்த வயதிலும் நடிப்பின்மீதிருந்த ஆர்வமும் அர்ப் பணிப்பும் சிறிதும் குறையவில்லை. மேலும், அவரிடம் எனக்கு வியப்பை யும், மரியாதையையும் ஏற்படுத்திய விஷயம் அவருடைய நினைவுத் திறன் தான்'' என்கிறார்.

cini191119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe