நடிகர் ராதாரவி கோலோச்சும் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனுக்குள் ஏதாவது ஒரு பதவியை அடைந்தே தீருவது என கங்கணம் கட்டி, யூனியன் தேர்தலிலில் களம் இறங்கினார் சின்மயி. யூனியனின் செயலாளர் பதவிக்கு நடிகர் நாசரும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
ஆனால், தேர்தல் நடத்திய அதிகாரியோ சின்மயி, நாசர் ஆகியோரின் மனுக் களை அதிரடியாக தள்ளுபடி செய்து அதிர்ச்சி அளித்த தோடு, ராதாரவி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவித் தார். இதை கொஞ்ச மும் எதிர்பார்க்காத சின்மயி, கடந்த 5-ஆம் தேதி சென்னை சாலிலிகிராமத் தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
""என்னோட வேட்பு மனுவை மட்டுமல்ல; ராதாரவியை இத்தனை ஆண்டுக்காலம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் 23 பேரின் நாமினேஷனை ரிஜெக்ட் பண்ணி விட்டார்கள். இவர்கள் அனைவருமே சங்கத்தில் நடந்த முறைகேடுகளைத் தட்டிக்கேட்டவர்கள்.
என்னோட நாமினேஷனை டிஸ்மிஸ் பண்ணியதைக்கூட எனக்கு சொல்லலங்க. விசாரிச்சா நான் சந்தா கட்டலைன்னு சொல்றாங்க. ஆயுட்கால மெம்பரான நான் சந்தா கட்டலைன்னு சொல்றது ஏத்துக்குற மாதிரியா இருக்கு? 2016-லிருந்து 2018 ஆண்டுவரை சங்கத்திற்கு வரவைவிட செலவும் 42.50 லட்சம்னு எழுதி யிருக்காங்க. இது எப்படிங்க முடியும்? இப்படி பண்ணிட் டாங்களே...! இதை நான் சும்மாவிட மாட்டேன்! நியாயம் கேட்டு கோர்ட்டுக்குப் போவேன்'' என ரொம்பவே புலம்பினார் சின்மயி.
ஈ.பா. பரமேஷ்