சில்லாக்கி டும்மா' படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா ஏவி எம் ஸ்டுடியோவிலுள்ள கார்டனில் நடை பெற்றது .

Advertisment

pic

'அட்டு' படத்தில் நாயகனாக நடித்த ரிஷி ரித்விக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகி மோனிகா, யோகி பாபு, மைனா நந்தினி, அபிஷேக் , சரவண சக்தி, தீனா, ஜார்ஜ் விஜய் டிவி. பிஜ்ஜி ரமேஷ் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு உதயசங்கர். எடிட்டிங்- எலிசா. இயக்கம் மாறன் கந்தசாமி.

படம் பற்றி இயக்குநர் மாறன் கந்தசாமி பேசும்போது, ""மூன்று கேங்ஸ்டர்களுக்கிடையே ஒரு நாளில் நடக்கும் கதை. படத்தின் தலைப்பைப் பார்த்து யாரும் அடல்ட்ஸ் படமாக நினைத்துவிடக்கூடாது. அப்படி யாரும் தவறாக நினைத்துவிடாதீர்கள். இது எல்லாருக்கும் பிடிக்கும்படியான கதையாக இருக்கும்'' என்கின்றனர்.

இப்படத்தை டீக்கடை சினிமா க்ரவுட் பண்டிங் புரொடக்ஷன் மற்றும் அருவி பிலிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கின்றன.