Advertisment

குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை...

/idhalgal/cinikkuttu/childrens-family

குழந்தைகளைக் கவரும்வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந் தாலும், நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள்முதல் குடும்ப உறுப்பினர்கள்வரை அனைவரையும் திருப்திப்படுத்தும்விதமாக உருவாகியிருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள "கொரில்லா' திரைப்படம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

Advertisment

விழாவில் நடிகர் ர

குழந்தைகளைக் கவரும்வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந் தாலும், நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள்முதல் குடும்ப உறுப்பினர்கள்வரை அனைவரையும் திருப்திப்படுத்தும்விதமாக உருவாகியிருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள "கொரில்லா' திரைப்படம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

Advertisment

விழாவில் நடிகர் ராதாரவி பேசியதாவது, ""ஜீவாவிற்கு யாரும் காம்படிஷனே கிடையாது. அது அவரது பெரியபலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்துவருகிறேன். மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார் கள்.''

jeeva

ஆர்.பி. சௌத்ரி

""ட்ரைலர் பார்த்தேன், ரொம்ப நல்லாருந்தது. இந்தப் படத்தின் தயாரிப் பாளர் பெரிய லக்கி. படத்தை இப்போதே விற்பனை செய்துவிட்டார். கண்டிப்பா இந்தப் படம் வெற்றிப்படமாக இருக் கும். ஜீவாவிற்கு இப்படம் திருப்பு முனையாக அமையும்.''

இயக்குநர் ராஜு முருகன் ""ஜீவா மாதிரி ஒரு ஆர்டிஸ்ட் இல்லையென்றால் என்னால் "ஜிப்ஸி' எடுத்திருக்க முடியாது. "கொரில்லா' படம் டோட்டல் கான்ட்ரஸ்ட் அதிலும் கலக்கி இருக்கிறார்.''

இயக்குநர் டான் சாண்டி

""ஜீவா சாரை நான் "கற்றது தமிழி'-ல் இருந்து பார்த்து வருகிறேன். அவர் இல்லை யென்றால் இந்தப்படம் இல்லை.

இந்தப்படத்தில் அவர் நிறைய உதவி பண்ணியிருக்கிறார்.''

ஜீவா

"கொரில்லா' படம் ஒரு எக்ஸ்ட்றாடனரி எக்ஸ்பீரியன்ஸ். ஏன் இந்தப்படத்தை தாய்லாந்தில் எடுத்தோம் என்றால், இந்தக் குரங்கு ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்த குரங்கு அதனால்தான். இந்தக் குரங்கு நல்ல ப்ரண்ட்லியா ஆகிவிட்டது. தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவிற்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன். "கொரில்லா' மாதிரி ஒருபடம் பண்ணுவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை.''

விஜய் ராகவேந்திரா

இந்தப் படத்தை பண்ணும் போது "குரங்கை வைத்து பண் ணாமல் சிம்பன்ஸியை வைத்து எடு' என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொன்னார். சாண்டி சிறப்பாக படத்தை எடுத்திருக்கி றார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.''

cine110619
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe