Advertisment

சீட்டிங் லவ்வரும் சீரழிந்த ஹீரோயினும்!

/idhalgal/cinikkuttu/cheating-lover-dirty-hero

பாலிவுட்டில் பிஸியாக இருந்தவர் சோபியா ஹயாத். இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் புரோக்கிராம்மூலம் மேலும் பிரபலமடைந்தார் சோபியா. பேர், புகழ், கார், பணம், பங்களா என செல்வச் செழிப்பாக, ஹாயாகத்தான் போய்க்கொண்டிருந்தது சோபியாவின் வாழ்க்கை.

Advertisment

sophiya

என்ன நடந்ததோ, எப்படி நினைத்தாரோ, திடீரென சாமியாரிணி ஆகிவிட்டார் சோபியா. ""எல்லாம் சிவமயம். எனக்குள் இருக்கு லிங்கம். நான் இனிமேல் சாமியார் அம்மா. மானிடப்பதர்களே இல்வாழ்க்கையை விட்டுவிட்டு ஆன்மிக பாதைக்குத் திரும்புங்கள். பக்

பாலிவுட்டில் பிஸியாக இருந்தவர் சோபியா ஹயாத். இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் புரோக்கிராம்மூலம் மேலும் பிரபலமடைந்தார் சோபியா. பேர், புகழ், கார், பணம், பங்களா என செல்வச் செழிப்பாக, ஹாயாகத்தான் போய்க்கொண்டிருந்தது சோபியாவின் வாழ்க்கை.

Advertisment

sophiya

என்ன நடந்ததோ, எப்படி நினைத்தாரோ, திடீரென சாமியாரிணி ஆகிவிட்டார் சோபியா. ""எல்லாம் சிவமயம். எனக்குள் இருக்கு லிங்கம். நான் இனிமேல் சாமியார் அம்மா. மானிடப்பதர்களே இல்வாழ்க்கையை விட்டுவிட்டு ஆன்மிக பாதைக்குத் திரும்புங்கள். பக்தர்களுக்கு இனிமேல் அருளாசி வழங்கப்போகிறேன். ஓம் நமச்சிவாய, சிவாய நம ஓம்'' என ஏதேதோ சொல்லி எல்லாரையும் கிறுகிறுக்க வைத்தார் சோபியா ஹயாத்.

Advertisment

இவரது ஆசிரமத்தில் பக்த கோடிகள் குவிய ஆரம்பித்தனர்.

sophiya

அஞ்சாறு வருஷம் ஆன்மிக ரூட்ல டாப்கியர்ல போய்க்கிட்டிருந்த சோபியா, திடீர்னு ஃபர்ஸ்ட் கியர் போட்டு சடக்குன்னு ரிவர்ஸ் கியர்ல லவ் ரூட்டுக்கு போக ஆரம்பிச்சாரு.

இத்தாலியின் ரோம் நகரைச் சேர்ந்த விளாட் ஸ்டானெஸ்கு என்பவரின் காதல் வலையில் வீழ்ந்தார். ""ரோம் நகரில் மட்டுமல்ல; ஐரோப்பா நாடு முழுக்க இருக்கும் அரண்மனைகளில் இன்டீரியர் டெகரேட்டர் நான். கோடி கோடியா சொத்து இருக்கு. நாப்பதம்பது கப்பல் ஓடுது, நாலஞ்சு ரயில் ஓடுது. ஏகப்பட்ட ஃப்ளைட் ஓடுது''ன்னு விளாட் சொன்னதும் விழுந்தவர்தான் சோபியா. சாமியாரிணி மேக்கப்பை கலைத்துவிட்டு, சம்சாரி ஆனார்.

"கட்டுனா இவரைத்தான் கட்டுவேன். இல்லேன்னா கல்லறைக்குப் போவேன்' என சபதமெடுத்து ஸ்டானெஸ்குவை ஸ்ட்ராங்கா கல்யாணம் பண்ணிக் கிட்டாரு.

பல லட்ச ரூபாய் தன் சொந்தக் காசை செலவு பண்ணி ஆசை ஆசையாய் கல்யாணம் பண்ணி, பல நாடுகளுக்கு ஹனிமூனும் போனார். எல்லா மேட்டரும் முடிஞ்சப்புறம்தான், சோபியாவுக்குத் தெரிஞ்சிருக்கு, விளாட் ஒரு விளங்காதவன்னு. ""இதுக்குப் பேரு தான் பேலசு, இதுல இருக்குறவய்ங்கெல்லாம் ராஜபரம்பரையைச் சேர்ந்தவய்ங்க''ன்னு அள்ளிவிட்ட விளாட் அகப்பட்டுக்கிட்டாரு. அந்தப்படுபாவி சீட்டிங் சேம்பியன் விளாட்டைப் பத்தி கண்ணீர்மல்க சொல்லி இப்போது கதறுகிறார் சோபியா.

""அரண்மனைகளின் இன்டீரியர் டெகரேட்டர்னு அயோக்கியப்பய பச்சையா பொய் சொல்லிருக்கான். அந்த அனாமத்து, அங்கிருக்கும் மளிகைக்கடையில் வேலை பார்க்குறவனாம். என்னோட பணம் எவ்வளவோ போச்சு, ஆனா அவன் சொந்த வீட்லயே திருடித் திங்கும் ஈனப்பய. ஒருநாள் என்னோட நகை, சொத்துப் பத்திரத்தையெல்லாம் தூக்கிட்டு, கம்பி நீட்டப் பார்த்தப்ப, கையும் களவுமா பிடிச்சு, செம சாத்து சாத்தி துரத்திட்டேன். அதனால ஹீரோயின் பொண்ணுகளே, நல்ல சொத்துசுகம் இருக்குறவனைப் பார்த்து கப்புன்னு கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிருங்க. இல்லேன்னா என்னோட கதிதான் உங்களுக்கும்'' என்கிறார் எச்சரிக்கையாக.

sophiya

சோபியா அப்ப சொன்னது அருளாசி, இப்ப சொல்றது நல்லாசி. நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா...

-ஈ.பா. பரமேஷ்வரன்

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe