ஜினியின் "பேட்ட'-யை (இந்தியாவைத் தவிர) உலகம் முழுவதும் வெளியிட மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. மலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30-ஆம் தேதியில் நடைபெற்ற "DRIFT Challenge 2018' கார் ரேஸில் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ் (19) இந்த ரேசில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

Advertisment

petta

மலேசியாவிலுள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

ரேஸ் காரில் "பேட்ட' படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், மலேசியா முழுவதும் பல கார்களில் "பேட்ட' படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.