Advertisment

களத்தில் கவர்ச்சிக் கலக்கல்!

/idhalgal/cinikkuttu/charm-field

சுமலதா

su

கோலிவுட்முதல் பாலிவுட் வரை இந்திய சினிமாவின் எல்லா பக்கங்களிலும் முக்கிய ஹீரோக் களுடன் ஜோடிபோட்டவர் நடிகை சுமலதா. கன்னட சினிமாவின் மிக முக்கிய நடிகரான அம்பரீஷு டன் சேர்ந்து நடித்த கால கட்டத்தில் அவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சென்ற ஆண்டு அம்பரீஷ் உடல்நலக்குறைவால் மறைந்து விட்ட நிலையில், தற்போது சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார்.

Advertisment

அவர் போட்டியிடும் அதே தொகுதியில்தான் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி களமிறங்குகிறார். தனது அரசியல் என்ட்ரியை இங்கிருந்துதான் தொடங்க வேண்டுமென்று விரும்பிய நிகிலுக்கு, எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சுமலதா. அவருக்காக தர்ஷன், யாஷ் போன்ற முன்னணி ஹீரோக்கள் இப்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

சுயேட்சை சுமலதா வுக்கு எதிர்காலம் எப்படி இருக்கோ?

ஊர்மிளா மடோன்கர்

ut

பாலிவுட் திரையுல கைக் கலக்கியவர். சென்ற ஆண்டு இந்தியில் வெளியான "ப்ளாக் மெயில்' படத்தில் வரும் ஒரு பாடலில் கவர்ச்சிக் குத்து போட்டார் ஊர்மிளா. தற்போது திரைத்துறையில் இருந்து விலகி யிருக்கும் அவர், திடீரென்று காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறி

சுமலதா

su

கோலிவுட்முதல் பாலிவுட் வரை இந்திய சினிமாவின் எல்லா பக்கங்களிலும் முக்கிய ஹீரோக் களுடன் ஜோடிபோட்டவர் நடிகை சுமலதா. கன்னட சினிமாவின் மிக முக்கிய நடிகரான அம்பரீஷு டன் சேர்ந்து நடித்த கால கட்டத்தில் அவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சென்ற ஆண்டு அம்பரீஷ் உடல்நலக்குறைவால் மறைந்து விட்ட நிலையில், தற்போது சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார்.

Advertisment

அவர் போட்டியிடும் அதே தொகுதியில்தான் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி களமிறங்குகிறார். தனது அரசியல் என்ட்ரியை இங்கிருந்துதான் தொடங்க வேண்டுமென்று விரும்பிய நிகிலுக்கு, எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சுமலதா. அவருக்காக தர்ஷன், யாஷ் போன்ற முன்னணி ஹீரோக்கள் இப்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

சுயேட்சை சுமலதா வுக்கு எதிர்காலம் எப்படி இருக்கோ?

ஊர்மிளா மடோன்கர்

ut

பாலிவுட் திரையுல கைக் கலக்கியவர். சென்ற ஆண்டு இந்தியில் வெளியான "ப்ளாக் மெயில்' படத்தில் வரும் ஒரு பாடலில் கவர்ச்சிக் குத்து போட்டார் ஊர்மிளா. தற்போது திரைத்துறையில் இருந்து விலகி யிருக்கும் அவர், திடீரென்று காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்து விட்டு, ராகுல்காந்தி முன்னிலையில் இணைந்தார். அவருக்கு மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் போட்டி யிடுவதற்கான வாய்ப்பையும் வழங்கி யிருக்கிறது காங்கிரஸ் கட்சித் தலைமை.

இதைப் பொறுக்காத எதிர்க்கட்சி யான பா.ஜ.க. வினர், ஊர்மிளா மடோன்கரின் விக்கிபீடியா பக்கத்தைத் தேடிப் பிடித்து, அதில் அவரது பெயரை மரியம் அக்தர் மிர் என்று மாற்றினர். அதற்குக் காரணம் காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமியர் மொஹ்ஷின் அக்தர் மிர்ரை அவர் திருமணம் செய்து கொண்டது தானாம். ஏம்பா... உங்க ஆட்சி யில, மக்களுக்கு நல்லது பண்றீங் களோ இல்லையோ. இந்த மாதிரி வேலையெல்லாம் கரெக்டா பண்றீங்க என்று அரசியல் பன்ச் கொடுத்து பிரச்சாரத் தில் கலக் குகிறார் ஊர்மிளா.

பன்ச் எல்லாம் ஓ.கே. பவர் எலக் ஷன்ல தெரிஞ்சி டுமே!

நவ்நீத் கவுர்

nam

தமிழில் "அம்பாசமுத்திரம் அம்பானி' என்ற படத்தின்மூலம் அறிமுக மாகி அட்ரஸ்ஸே இல்லாமல் போனவர் நவ்நீத் கவுர். தெலுங்கு, கன்னடம் என பல மொழி களில் கலக்கியவருக்கு அது அஸ்தமன காலம். சரியான சமயம் பார்த்து சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, ஆந்திரா வைச் சேர்ந்த ரவி ராணா என்ற அரசியல்வாதியைத் திருமணம் செய்துகொண்டார். இந்த ரவி ராணா, யுவ ஸ்வபிமான் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார்.

அவர் எம்.எல்.ஏ. வும் கூட.

தற்போது, தனது கணவரின் மூலமாக, நவ்நீத் கவுர் மேற்கு மகாராஷ்டிரா வின் அம்ராவதி என்ற மக்கள வைத் தொகுதியில் வேட்பாள ராக களமிறங்குகிறார். இதே தொகுதியில் ஐந்துமுறை தொடர்ந்து வெற்றிபெற்ற சிவசேனா வேட்பாளர் அனந்த்ராவ் அத்சுல் என் பவரைத்தான் நவ்நீத் எதிர்கொள்ளப்போகிறார். இருந்தாலும், ""தேசியவாத காங்கிரஸின் ஆதரவு எங்களுக்கு இருக்கு. நிச்சயம் நாங்க ஜெயிச்சுக் காட்டு வோம்'' என கெத்தாக சொல்லிக்கொண்டிருக்கி றார்கள் ரவிராணாவும், நவ்நீத்தும்!

குடும்பமே கட்சி; கட்சியே குடும்பம்!

ரொம்பக் கெத்துதான்!

மாதுரி தீக்ஷித்

mad

""ஏக் தோ தீன்'' என்ற இந்தி நம்பர் வரிசை பாடலில் கவர்ச்சிக் குத்து போட்டதன்மூலம் உலகப் புகழ் பெற்றவர். 90-களின் பாலிவுட் சினிமாவில் மிகமுக்கியமான நடிகையாக இருந்த இவர், தற்போது திரைத்துறையில் தயாரிப்புப் பிரிவை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் மாதுரி தீக்ஷித் புனே மக்களவைத் தொகுதியில், பா.ஜ.க. சார்பில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகின. அப்படியா... மாதுரி புனேவுக்கு வர்றாங்களா என்று அவரது முன்னாள், இன்னாள் ரசிகர்கள் வாய்பிளக்க, ""அதெல்லாம் இல்லப்பா. நான் எந்தக் கட்சி சார்பிலையும், எந்தத் தேர்தல்லையும் போட்டிப் போடல. எனக்கு வேற வேலை இருக்கு. இதைப் பத்தி நான் எத்தனை தடவைதான் சொல்றது'' என்று விளக்கம் கொடுத்துவிட்டார் மாதுரி.

90-களின் இளசுகளுக்கு இந்தி கத்துக்கொடுத்த பெருந்தகையே என்று போஸ்டரே ஒட்டிட்டாய்ங்களாம்!

ஜெயசுதா

தெலுங்கு சினிமாவில் முத்திரை பதித்த நடிகை ஜெயசுதா. 80-களின் முக்கிய கதாநாயகி அவர். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் குதித்தார்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செகந்தராபாத் தொகுதியில் 2014 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதன் பிறகு, காங்கிரஸில் இருந்து விலகியவர், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் 2016-ல் இணைந்தார்.

அதைத் தொடர்ந்து பெரிய அரசியல் நகர்வு கள் எதையும் மேற் கொள்ளாதவர், தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிர ஸில் இணைந்திருக்கி றார். ""இப்போதுதான் நான் ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருப்பதாக உணர்கிறேன். தெலுங்குதேசம் கட்சியில் எங்களை வழிநடத்த சரியான ஆட்கள் இல்லை.

ஜெகன் அந்த இடத்தை மிகச்சரியாக செய்வார். அவர் தான் ஆந்திராவின் அடுத்த முதல்வராக வரப்போகிறார்'' என்று அடித்துச் சொல்லுகிறார் ஜெயசுதா.

ஜெயபிரதா

தமிழில் "மன்மத லீலை' படத்தின்மூலம் அறிமுக மானவர் நடிகை ஜெயபிரதா.

அதன்பிறகு இந்திய சினிமா வையே ஒரு கலக்கு கலக்கி னார். படவாய்ப்புகள் குறைந்த பிறகு 1994-ல் தெலுங்குதேசம் கட்சியில் இணைந்து, 1996-ல் ராஜ்யசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் சந்திரபாபு நாயுடு இடையிலான முரண்பாட்டின் காரணமாக தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். பின்னாளில் அந்தக் கட்சியில் இருந்தும் விலகியது வேறு கதை.

தற்போது தன்னை சமாஜ்வாதி கட்சியில் இணைத்து விட்ட ஆசம் கானை எதிர்த்து ராம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் ஜெயபிரதா. தனது பிறந்த தினத்தன்று சிவப்பு நிற புடவை உடுத்தி கோவில், மசூதி என பல இடங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயபிரதா, ""பி.ஜே.பி. போன்ற பெரிய கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுவது உற்சாகம் அளிக்கிறது'' என்றார். அவரை சமாஜ்வாதிக்கு அறிமுகம் செய்து வைத்த ஆசம்கான், ஒன்பதுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்து, தற்போது முதன்முறையாக எம்.பி. தேர்தலில் போட்டியிடுகிறார்.

இப்படியெல்லாம் பேசுமுன்னு தெரிஞ்சி ருந்தா அறிமுகப்படுத்தியிருப்பாரா ஆசம்கான்?

மாஜி கவர்ச்சி ஹீரோயின்களால் அக்னி வெய்யிலிலும் குளுகுளுன்னு இருக்கு தேர்தல் களம்.

-மதி

cine160419
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe