Advertisment

களத்தில் கவர்ச்சிக் கலக்கல்!

/idhalgal/cinikkuttu/charm-field-0

ந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா முழுவதும் பல்வேறு கட்சிகள் களமிறக்கி இருக்கும் திரையில் கலக்கிய நடிகைகள் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில் திரிணாமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் களமிறக்கி இருக்கும் நான்கு கவர்ச்சி நடிகைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

மூன் மூன் சென்

Advertisment

இந்தியாவின் பிரதான மொழி களில், குறிப்பாகத் தமிழில் நடித்து நல்ல பெயர் எடுத்தவர் மூன் மூன் சென். ஆம், "12பி' படத்தில் ஜோதிகாவின் அம்மாவாக நடித்திருப்பார். இவர், திரிணா மூல் காங்கிரஸ் சார்பில் அசா னோல் தொகுதியில் போட்

ந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா முழுவதும் பல்வேறு கட்சிகள் களமிறக்கி இருக்கும் திரையில் கலக்கிய நடிகைகள் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில் திரிணாமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் களமிறக்கி இருக்கும் நான்கு கவர்ச்சி நடிகைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

மூன் மூன் சென்

Advertisment

இந்தியாவின் பிரதான மொழி களில், குறிப்பாகத் தமிழில் நடித்து நல்ல பெயர் எடுத்தவர் மூன் மூன் சென். ஆம், "12பி' படத்தில் ஜோதிகாவின் அம்மாவாக நடித்திருப்பார். இவர், திரிணா மூல் காங்கிரஸ் சார்பில் அசா னோல் தொகுதியில் போட்டி யிட்டபோது, அதுவரை ஒன்பதுமுறை தொடர்ச்சி யாக வெற்றிபெற்றிருந்த சி.பி.எம். எம்.பி. பாபுசேப் ஆச்சார்யாவை தோற்கடித்து மம்தா பானர்ஜியையே அதிரவைத்தவர். தற்போது, அதே தொகுதியில் தனது வேட்பு மனுத் தாக்கலை செய்துவிட்டு, அடுத்த ரவுண்டுக்காகக் காத்திருக்கிறார்.

glamour

சதாப்தி ராய்

1980-களில் பெங்காலி திரையுலகத்திற்குள் அடியெடுத்து வைத்தவர் சதாப்தி ராய். சில ஆண்டுகள் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டிருந் தவர், 1990- 2001 காலகட்டத்தில் பெங்காலி திரையுலகத்தின் தவிர்க்கமுடியாத நடிகை யாக உருவெடுத்தார். விமர்சனரீதியில் அதிகம் பாராட்டப்பட்டதோடு, வணிகரீதியிலும் வெற்றிகரமாக கொடிகட்டிப் பறந்தவர், பின்னாளில் சில படங்களை இயக்கினார். அப்படியே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர், பிர்பம் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக இரண்டுமுறைவென்று எம்.பி.யாகிவிட்டார். இந்த முறையும் அதே தொகுதியில் களமிறங்குகிறார் சதாப்தி ராய்.

நுஸ்ரத் ஜஹான்

பெங்காலி திரையுலகம் மற்றும் மாடலிங் துறையில் ரொம்பவே பிஸியாக இருந்தார் நுஸ்ரத் ஜஹான். வெறும் 29 வயதே ஆகும் இவர், இந்த ஆண்டில்தான் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி யில் தன்னை இணைத்துக் கொண்டார். எடுத்த எடுப்பிலேயே

அவருக்கு வங்காளதேசம் பார்டரில் இருக்கும் பஷீரத் தொகுதி யில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுத் திருக்கிறார் மம்தா. இந்தப் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்துவரும் நிலையில், நுஸ்ரத் வெற்றிக்கனியை பறித்தே தீருவார் என்பது மம்தாவின் கணக்கு. நுஸ்ரத்திற்கு தொகுதிப்பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மக்களோடு டான்ஸ் ஆடும் நுஸ்ரத்தின் வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மிமி சக்கரவர்த்தி

பெங்காலி டிவி சீரியல்களின்மூலம்- குறிப்பாக "கானெர் ஒஃபெரி' என்ற நாடகத்தின்வழியாக பிரபலமானவர் மிமி சக்கரவர்த்தி. இவர் அழகிய மாடலும்கூட. இவருக்கு ஜாதவ்பூர் தொகுதியைக் கொடுத்திருக்கிறார் மம்தா பானர்ஜி. இது சாதாரண தொகுதி கிடையாது. இந்தத் தொகுதியில்தான் இந்திய அளவில் அரசியல் தலைகளாகவும், அடையாளம் பெற்றவர்களுமான சோம்நாத் சட்டர்ஜி, கிருஷ்ணா போஸ், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் உறவினர், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா போன்றோர் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் கள். அந்தளவுக்கு ஸ்டார் தொகுதியான இதில், இங்கிருக்கும் இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைத்தே மிமியை இறக்கிவிட்டிருக்கிறாராம் மம்தா.

-மதி

cine230419
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe