/idhalgal/cinikkuttu/chandru

ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜ ரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் "சத்ரு.'

chandru

கதாநாயகனாக கதிர், கதாநாயகி யாக சிருஷ்டி டாங்கே, பொன் வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி,

ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜ ரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் "சத்ரு.'

chandru

கதாநாயகனாக கதிர், கதாநாயகி யாக சிருஷ்டி டாங்கே, பொன் வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

"ராட்டினம்' படத்தில் நடித்த லகுபரன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- நவீன் நஞ்சுண்டான்.

இந்தப் படம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்...

""இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படம். விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படம்... ஆக்‌ஷன், ரொமான்ஸ் கலந்த படம். இந்தப் படத்தைப் பார்த்த மைல்ஸ்டோன் மூவிஸ் ஏ. டில்லிபாபு சார் படத்தை ரிலீஸ் செய்கிறார். தரமான படங்களான வெற்றிப் படங்களான "மரகத நாணயம்', "ராட்சசன்' என பார்த்துப் பார்த்து தயாரிக்கும் டில்லிபாபு "சத்ரு' படத்தை வெளியிடுகிறார் என்றால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். குற்றவாளிகளாக, யார் கண்ணுக்கும் தெறியாமல் வாழும் வில்லன்கள் ஐந்துபேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலீஸ் அதிகாரி எப்படி மடக்கிப் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்துகிறார் என்பது தான் "சத்ரு.' படம் மார்ச் 1-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது'' என்றார் நவீன் நஞ்சுண்டான்.

cine260219
இதையும் படியுங்கள்
Subscribe