சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு "சண்டி முனி' என்று பெயரிட்டுள்ளனர்.

Advertisment

chandimuniகதாநாயகனாக நட்ராஜ் நடிக்கிறார்... கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிகமிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார்.

இவர்களுடன் மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர், அஞ்சலி தேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் மில்கா. எஸ். செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் "முனி- 3', "காஞ்சனா- 2' படத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். இவர் இயக்கும் முதல் படம் இது.

படப்பிடிப்பு இம்மாதம் 27-ஆம் தேதி பழனியில் துவங்குகிறது. தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று முடிவடைய உள்ளது.

Advertisment

படம் பற்றி இயக்குநர் மில்கா எஸ் செல்வகுமார்-""இது ஒரு ஹாரர் படம். சண்டி என்கிற சிவில் இஞ்சினியர் வேடத்தில் நடிக்கிறார் நட்ராஜ் .

ராதிகா என்கிற ஆசிரியையாக மனிஷா யாதவ் நடிக்கிறார். முழுக்க முழுக்க ஹாரர் காமெடியுடன் பேமிலி சப்ஜெக்ட்டாக "சண்டி முனி' உருவாகிறது'' என்கிறார்.