"பிக் பாஸ்' சீசன்-3 மூலம் புகழின் உச்சத்துக்குச் சென்ற சாக்ஷி அகர்வால், பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின்மூலம் action அவதாரம் எடுக்கவிருக்கிறார்.

Advertisment

"களிறு' என்ற படத்தை இயக்கிய ஜி.ஜே சத்யா இயக்கும் இந்தப் படத்துக்காக சாக்ஷி சிறப்பு சண்டைப் பயிற்சிகள் எடுத்துவருகிறார்.

Advertisment

ss

விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர், ""ஜி.ஜே. சத்யா "பிக் பாஸ்' நிகழ்ச்சியில் சாக்ஷி பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் திடமான மனவுறுதியை வெளிப்படுத்தினார். அந்த மனவுறுதியும், திடமும் என் கதையின் நாயகி அவரே என தீர்மானிக்க உதவியது.

அவரை அணுகியபோது சற்றே தயங்கினாலும், பின்னர் முழுமனதுடன் ஒப்புக்கொண்டார். நாயகியின் பாத்திரத் தன்மைக்கு ஏற்ப தீவிர சண்டைப் பயிற்சியில் ஈடுப்பட்டு தன் திறமையை மெருகேற்றிக் கொண்டார். இந்த அர்ப்பணிப்பு இவரை மேன்மேலும் உயர்த்தும் என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கை'' என புளகாங்கிதத்துடன் சொன்னார்.