பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் ஆனைமலையைச் சேர்ந்தவர் நவீன். இன்ஜினீயரிங் படித்த இவருக்கு ஆசை, லட்சியம
பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் ஆனைமலையைச் சேர்ந்தவர் நவீன். இன்ஜினீயரிங் படித்த இவருக்கு ஆசை, லட்சியமெல்லாம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதுதான். "கூத்துப்பட்டறை'-யில் நான்கு மாதப் பயிற்சி முடித்து, டைரக்டர் எம்.எல். ராஜின் "உறங்காப் புலி' படத்தின்மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.
அதே எம்.எல். ராஜின் "மெரினா புரட்சி'-யிலும் இவர்தான் ஹீரோ. அந்த "மெரினா புரட்சி'தான் சென்சாரில் சிக்கி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரச்சினை ஒருபக்கம் இருந்தாலும், தனது தளராத முயற்சியால் பல டைரக்டர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார் நவீன்.