கமல் கோவின்ராஜ் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம் "புறநகர்'. இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். இ.எல். இந்திரஜித் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 29-ஆம் தேதி நடைபெற்றது.
விழாவில் தருண்கோபி பேசும்போது...
""தயவுசெய்து சாதியைச் சொல்லிப் படம் எடுக்காதீர்கள். அப்படி சாதியைச் சொல்லி எவனாவது இனி வந்தா செருப் பால அடிப்பேன். எங்களுக்கு என்ன சாதின்னு தெரியாமதான் வளர்ந்தோம். ஆனால் இப்போது சாதியை அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள்'' என்றார்.
கே. பாக்யராஜ் பேசும் போது...
""ஸ்டண்ட் மாஸ்டர் படம் இயக்குவது ரொம்ப அரிது. ஆனால் "மின்னல் முருகன்' படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்கள் அடிக்கிற சீனில் கலக்கிவிடுவார்கள். ஆனால் டயலாக் பேசணும் என்றால் கலங்கிவிடுவார்கள்.
நான் சாதியைச் சொல்லி அப்பவே படம் எடுத்துள்ளேன். டீக்கடையில் ஒருகாலத்தில் தனி க்ளாஸ் வைத்து டீ குடுத்தார்கள். எனக்கு கஷ்டமாக இருந்தது. வெள்ளாங்கோவில் என்ற ஊரில் அப்படி கொடுமை இருந்தது. "ஒரு கை ஓசை' என்ற படத்தில் இந்த விஷயத்தை அதே ஊரில் சென்று எடுத்தேன். அப்போது எல்லாம் இந்தளவுக்கு சாதிப் பிரச்சினை இல்லை. இப்போது சினிமா உள்பட பல இடங்களில்'' என்றார் வேதனையுடன்.