Advertisment

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

/idhalgal/cinikkuttu/can-not-run-and-can-not-be-illuminated

ரமான கதைக் களமும், சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களும்தான் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆணி வேர். அதை மிகத்துல்லிலியமாக உள்வாங்கிக் கொண்டு, தரமான திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார் நடிகரும் 'கிளாப்போ

ரமான கதைக் களமும், சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களும்தான் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆணி வேர். அதை மிகத்துல்லிலியமாக உள்வாங்கிக் கொண்டு, தரமான திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார் நடிகரும் 'கிளாப்போர்ட் புரொடக்ஷன்' நிறுவனத்தின் நிறுவனருமான வி. சத்தியமூர்த்தி. இவரது தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படப்பிடிப்பு 45 நாட்களில் நிறைவு பெற்றுள்ளது.

Advertisment

omom

அறிமுக இயக்குநர் "எருமசாணி' புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி இருக்கிறார்.

'மெட்ராஸ் சென்ட்ரல்' புகழ் கோபி - சுதாகர், 'எரும சாணி' புகழ் விஜய் ஹரிஜா, 'புட் சட்னி' புகழ் அகஸ்டின், 'டெம்பில் மங்கிஸ்' புகழ் ஷாரா அப்துல் மற்றும் "இஊஐஒசஉரஞஞஉந' புகழ் வி ஜே ஆஷிக் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள்வரை அனைவருமே 21 வயதிற்குக்கீழ் இருப்பதுதான் இந்தப் படத்தின் தனிச்சிறப்பு.

இளம் கலைஞர்களின் தனித்துவமான படைப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஜோஷ்வா ஓ பெரேஸ் (அறிமுகம்), இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் (அறிமுகம்), படத்தொகுப்பாளராக தோபிக் கணேஷ் (அறிமுகம்) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe