சினிமாவில் ரொம்பவும் அனுபவம் இருந்தாலும், ஒரு படத்தில் நடிக்க இவ்வளவு நாள் ஆகியிருக்கிறது கீர்த்தி பாண்டியனுக்கு.
நடிகர், அரசியல்வாதி, சினிமா தயாரிப்பாளர் என்று பன்முகத் தன்மைகொண்ட அருண்பாண்டியனின் மகள்தான் கீர்த்தி. இசை, நாடகம் ஆகியவற்றில் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர். திரைப்படங்களை வெளிநாடுகளில் வினியோகிக்கும் வேலையையும் செய்துவந்தார்.
அற்புதமான பாலே நடனக் கலைஞரான கீர்த்தியை பல டைரக்டர்கள் நிராகரித்தார்களாம். நிறம் கருப்பா இருக்கு.
ஒல்லியாக இருக்கிறீர்கள். சினிமாவுக்கு ஏற்ற உடலமைப்பு இல்லை என்றெல்லாம் காரணம் கூறியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பிடித்திருந்தால்தான் நடிகைக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிந்த கீர்த்தி, தனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/keerthipandian.jpg)
"தும்பா' பட இயக்குநர் ஹரிஷிடம் கீர்த்தியின் தோழி அஷ்வதி அறிமுகப்படுத்தி னார். அவருக்கு கீர்த்தியை பிடித்துப்போனது. "தும்பா' படத்தின் கதையை கேட்டதுமே, இந்தப் படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்ற விஷயம்தான் முதலில் ஸ்ட்ரைக் ஆனதாம். உடனே ஒப்புக் கொண்டாராம்.
வசதியான குடும்பத்துப் பெண்ணான கீர்த்தி வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கும் கலைஞராக வருகிறார். இவருடைய பயணத்தில் தர்ஷனும், தீனாவும் இணைகிறார்கள்.
அவர்களுடைய கதையும் இந்த இடத்தில் குவிகிறது. "தும்பா' படம் சாகசக் கதையம்சம் கொண்டது.
எனக்கு "டார்ஜான்', "தி ஜங்கிள் புக்' போன்ற படங்கள் ரொம்ப பிடிக்கும். எனவே ஈடுபாட்டுடன் நடித்தேன். எனது தந்தை நடித்த படங்களில் "ஊமை விழிகள்' மிகவும் பிடிக்கும். இன்றுவரை அந்த அளவுக்கு ஒரு படம்கூட வரவில்லை. இப்போது நான் கதைகளைக் கேட்டுவருகிறேன். சமீபத்தில்தான் ஜி-5 டி.வி.க்காக முனீஸ்காந்தும் நானும் நடிக்கும் "போஸ்ட்மேன்' என்ற இணையத் தொடரில் நடித்து முடித்திருக்கிறோம்'' என்கிறார் கீர்த்தி.
பிரசாந்த் குணசேகரன் இயக்கி, சமீர்பரத்ராம் தயாரித்த "போஸ்ட்மேன்' வெப்சீரிஸ் 23 வருடங்கள் கழித்து கோமாவிலிருந்து மீண்டபின், தனது மகளுடன் ஒன்பது கடிதங்களை வழங்குவதற்கான ஒரு முடிக்கப்படாத வேலையை முடிக்கும் ஒரு தபால்காரரின் பயணத்தை சொல்கிறது. இதில் அப்பாவாக முனீஸ்காந்தும் மகளாக கீர்த்தி பாண்டியனும் நடித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/keerthipandian-t.jpg)