Advertisment
/idhalgal/cinikkuttu/call-taxi

கே.டி. கம் பைன்ஸ் சார்பில், ஆர். கபிலா தயாரிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் "கால் டாக்ஸி.' தமிழகத்தில் கால் டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதன் ப

கே.டி. கம் பைன்ஸ் சார்பில், ஆர். கபிலா தயாரிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் "கால் டாக்ஸி.' தமிழகத்தில் கால் டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதன் பின்னணியிலுள்ள உண்மைச் சம்ப வத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது.

Advertisment

ca

இந்தப் படத்தில் சந் தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக "மெர்லின்', "மரகத காடு', "டக்கு முக்கு டிக்கு தாளம்', "ஜீவி' போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார்.

மேலும் "நான் கடவுள்' ராஜேந்திரன், மதன்பாப், இயக்குநர் ஈ. ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், "பசங்க' சிவகுமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, "போராளி' திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

நடனம்- இராபர்ட், இருசன்; ஸ்டண்ட்- எஸ்.ஆர். ஹரிமுருகன், எடிட்டிங்- டேவிட் அஜய், ஒளிப் பதிவு- எம்.ஏ. ராஜதுரை, பாடல் கள், இசை- பாணன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா. பாண்டியன். இப்படத் தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற்று வருகின்றன.

cini070120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe