Advertisment

கடத்தல்காரனான கால் டாக்சி டிரைவர்!

/idhalgal/cinikkuttu/call-taxi-driver

"கடத்தல்காரன்' படம்மூலம் ஹீரோவாக அறிமுக மாகும் கெவின், கால்டாக்ஸி டிரைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், சினிமா வில் ஹீரோவாக வேண்டும் என்ற தனது லட்சியத்தோடு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார

"கடத்தல்காரன்' படம்மூலம் ஹீரோவாக அறிமுக மாகும் கெவின், கால்டாக்ஸி டிரைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், சினிமா வில் ஹீரோவாக வேண்டும் என்ற தனது லட்சியத்தோடு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

Advertisment

மலையாளத்தில் மூன்று படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கும் எஸ். குமார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படம், ஆக்‌ஷன் கலந்த காமெடி கலாட்டாவாக உருவாகியிருக் கிறது.

kk

ஆக்‌ஷன் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நடித்திருக்கி றார் கெவின். ""இப்படத்தில் பல ரிஸ்க்குகளை எடுத் திருக்கிறேன். அதனால், எனக்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார் கெவின்.

கெவினுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரேணு சௌந்த ருக்கு தமிழ் சினிமாவில் இதுதான் முதல் படம் என்றாலும், மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

எப் 3 பிலிம்ஸ் சார்பில் ஃபிரயா, ஃபெனி, பெலிக்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத் திற்கு எஸ். ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எல்.வி. கணேஷ் மற்றும் ஜுபின் இசையமைக்க, ஆர். சுதர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். மணிபாரதி கலையை நிர்மாணிக்க, ரன் ரவி ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். முத்துவிஜயன், கௌசல்யன் ஆகியோர் பாடல்கள் எழுத, கூல் ஜெயந்த் மற்றும் இம்தியாஷ் நடனம் அமைத்திருக்கிறார்கள்.

cini170320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe