புகழ்பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின்மூலம் கலிபோர்னிய மக்களைத் தன் வசம் வைத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரின் பூர்வீகம் கர்நாடகம்! வயசு 14 தான்.

Advertisment

hariya

இவரின் பாடல்களை வலைத் தளத்தில் கண்டுரசித்த "குவியம் மீடியா ஒர்க்ஸ்' யோகேந்திரன் ஹிதாவை அணுகி சென்னையில் ஒரு பாப் இசை நிகழ்ச்சி நடத்தித் தருமாறு கோரிக்கை வைத்தார். அதை ஏற்று கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி சென்னையில் மகேந்திரா சிட்டி பின்புறம் உள்ள மகரிஷி ஸ்கூல் கிரவுண்டில் தனது நிகழ்ச்சியை ஒசநடஒதஊஉ இவ ஐஒபஐஆ என்ற பெயரில் நடத்தினார். இந்தியாவிற்கு அறிமுகமில்லாத இவரை ரசிகர்கள் எப்படி ஏற்கப் போகிறார்கள் என்று பெரிய சந்தேகமே இருந்தது.

ஆனால், யாரும் எதிர் பாராத வகையில் இரண்டாயிரத் துக்கும் அதிகமானோர் அங்கு இசை நிகழ்ச்சியைக் காண கூடியிருந்தனர்.

ஹிதா கடைசியாகப் பாடிய நான்கு பாடல்களுக்கு குழந்தை களும் ஆட்டம்போடத் தொடங்கி விட்டனர். ஹிதாவை தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான இசையமைப்பாளர்களின் இசையில் பாட வைப்பதற்கான வேலைகள் நடக்குதாம்.