ர்.பி. பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரிப்பில் உருவாகி யிருக்கும் திரைப்படம் "அகோரி.

Advertisment

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். இவர்களுடன் நடிகர் மைம் கோபி, ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி. ஜி. முத்தையா, தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார், படத்தின் தயாரிப்பாளரும் வசனகர்த்தாவுமான ஆர்.பி. பாலா, இணைத் தயாரிப்பாளர் சுரேஷ் கே. மேனன், இயக்குநர் டி.எஸ். ராஜ்குமார், ஒளிப்பதிவாளர் வசந்த், நடிகர்கள் சித்து, வெற்றி, கார்த்திக், ஷரத், விளம்பர வடிவமைப்பாளர் பவன் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் டேஞ்சர் மணி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisment

ad

"பாரதியார்' படத்திற்குப் பிறகு நடிகர் ஷாயாஜி ஷிண்டே இந்தப் படத்தில் "அகோரி'யாக டைட்டில் ரோலில் நடித்திருக்கிறார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில்...

""தமிழக மக்களை நினைத்தால்தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! எந்தக் கட்சிக்காரன் காசு கொடுத்தா லும் வாங்கிக்கொண்டு, சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். ஆனால், ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணியெண்ணியே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியல. ஆனா இங்கே பேசிய கஸ்தூரி ஒரு ஏதோ ஒரு முடிவுடன்தான் இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது'' என்றார்.

Advertisment