"நம்ம ஊரு பூவாத்தா', "ராக்காயி கோயில்', "பெரிய கவுண்டர் பொண்ணு', "கட்டபொம்மன்', "நாடோடி மன்னன்', "மாப்பிள்ளை dineshகவுண்டர்' உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளது.

Advertisment

மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் "களவாணி மாப்பிள்ளை' படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் காந்தி மணிவாசகத்திடம் கேட்டோம்... ""இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் படமே "களவாணி மாப்பிள்ளை'. பெண்களின் மனோபாவமே இந்தப் படத்தின் மையக்கரு. பெண்கள் காய்கறி கடைக்குப்போனால் அரை கிலோ வெண்டைக்காய் வாங்க கால் கிலோ வெண்டையை உடைத்து உடைத்துப் பார்த்துத்தான் வாங்குவார்கள். அதேமாதிரி ஒரு புடவை வாங்க ஒரு கடையையே புரட்டிப் போட்டுவிடுவார்கள்.

அவ்வளவு பார்த்துப் பார்த்து எச்சரிக்கையாக நடந்துகொள்ளும் அவர்கள் தடுமாறும் இடமும், தடம் மாறும் இடமும் திருமண விஷயத்தில் தான்... அந்த ஒரு விஷயத்தில் மட்டும் எப்படி கோட்டை விடுகிறார்கள் என்பது மட்டும் இன்றுவரை சிதம்பர ரகசியமே.

Advertisment

அப்படித்தான் தான் ஏமாந்துபோய் கல்யாணம்செய்து கொண்டதுபோல் தன் மகளுக்கு நடந்துவிடக்கூடாது என்று நினைத்து ஏங்கும் ஒரு தாயின் போராட்டமும், தன் காதல்தான் முக்கியம் என்று நினைக்கும் மகளின் எண்ண ஓட்டமும்தான் படத்தின் கதையோட்டம்.'' என்கிறார்.