Advertisment

தம்பிக்காக தயாரிப்பாளரான அண்ணன்!

/idhalgal/cinikkuttu/brother-law

யக்குனர் இமயம் பாரதிராஜாவின் "தாஜ்மகால்', "ஈரநிலம்', "கடல்பூக்கள்', ஆகிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ஏ. குருசேகரா. பாரதிராஜாவின் பயிற்சிப் பட்டறையில் நன்றாக பட்டை தீட்டப்பட்டு, இப்போது "வளையல்' படம்மூலம் இயக்குனராக புரமோஷன் ஆகியுள்ளார். தனது குருவின் மகன் மனோஜ் கே பாரதியை வெயிட்டான கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார் க

யக்குனர் இமயம் பாரதிராஜாவின் "தாஜ்மகால்', "ஈரநிலம்', "கடல்பூக்கள்', ஆகிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ஏ. குருசேகரா. பாரதிராஜாவின் பயிற்சிப் பட்டறையில் நன்றாக பட்டை தீட்டப்பட்டு, இப்போது "வளையல்' படம்மூலம் இயக்குனராக புரமோஷன் ஆகியுள்ளார். தனது குருவின் மகன் மனோஜ் கே பாரதியை வெயிட்டான கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார் குருசேகரா. "16 வயதினிலே' டாக்டர் சத்யஜித். "அவன் இவன்' ராம்ராஜ், சாப்லிலின் பாலு ஆகியோர் நடிக்கும் வளையலிலின் ஹீரோவாக சக்திசிவன், ஹீரோயினாக பவ்யஸ்ரீ வருகிறார்கள். "ஆண்டவ பெருமாள்', "கோட்டி', விஜயநகரம், "தௌலத்' படங்களின் ஹீரோ தான் சக்திசிவன்.

Advertisment

producer

producerஎன்ன சொல்லப் போகுது உங்க "வளையல்' என டைரக்டர் குருசேகராவிடம் கேட்டோம். ""சென்னையில் எனது நண்பருக்கு நடந்த உண்மைச் சம்பவம்தான் படத்தோட கதை. ஹோலிப்லி பண்டிகை அன்னைக்கு ஒரு சிறுமியின் வளையலைத் திருடிவிடுகிறான் ஹீரோ. இதைப் பார்த்த ஹீரோயின் அவனை அடித்துவிடுகிறாள். வளையலுடன் ஓடிவிடும் அவன் மார்வாடிக் கடையில் அந்த வளையலை அடகுவைக்க வரும்போது, அதே பெண்ணிடம் மீண்டும் அடிவாங்குகிறான். ஒரு கட்டத்தில் இருவருமே காதலிலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஹீரோ முழுநேரத் திருடன் என்பது ஹீரோயினுக்குத் தெரியாது. ஹீரோயின் வாய்பேசமுடியாத மாற்றுத் திறனாளி என்பது ஹீரோவுக்குத் தெரியாது. மீதியை வெண்திரையில் காண்க'' என்று சொன்ன குருசேகரா, ""சினிமாமீது எனக்கிருந்த வெறியைப் பார்த்தும் பல ஆண்டுகளாக நான் கஷ்டப்படுவதைப் பார்த்தும் எனது அண்ணன் பிஆர். காளியப்பனே படத்தைத் தயாரிக்கிறார். இதைவிட வேறென்ன பெருமை எனக்கு வேண்டும்!

Advertisment

முழுப்படமும் முடிந்துவிட்டது. சென்சாரிலிலிருந்து "யு' சர்டிபிகேட் கிடைச்சிருக்கு. செப்டம்பர் மாதம் ரிலீஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கோம். படத்தைப் பார்த்த எங்க டைரக்டர், "ரொம்ப பிரமாதம்டா. மனோஜை நல்லாவே வேலை வாங்கியிருக்க' என மனம் திறந்து பாராட்டினார்'' என்றார் பெருமை பொங்க.

-பரமேஷ்

cine140818
இதையும் படியுங்கள்
Subscribe