அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக டி.சிவா தயாரித்துக்கொண்டிருக்கும் "பார்ட்டி' படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.
இதைத் தொடர்ந்து டி. சிவா தயாரிக்கும் படம் "சார்லிலி சாப்ளின்- 2.'
இந்தப் படத்தின் முதல் பாகமான "சார்லிலி சாப்ளின்' தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி பெங்காலிமற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூலில் சாதனை புரிந்தது.
முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக நிக்கி கல்ராணி, இன்னொரு நாயகியாக அதாசர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிறார் ஷக்தி சிதம்பரம்.
""இது முதல் பாகம் மாதிரியே கலகலப்பான படம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் "சூப்பர் சிங்கர்' போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி ஜோடி முதன் முறையாக சினிமாவில் பாடிய ""சின்ன மச்சான் செவத்த மச்சான் சின்ன புள்ள செவத்த புள்ள'' என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவு செய்யப்பட்டது. இந்த பாடல் செந்தில் கணேஷ்- ராஜலஷ்மி ஜோடியால் தமிழகம் முழுவதும் கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் பாடப்பட்டு பாப்புலரான பாட்டை அவர்களை வைத்தே சினிமாவில் பாட வைத்தோம். அவர்கள் திரைக்காக முதன்முதலாக பாடியது குறிப்பிடத்தக்கது.