ஜெய், ஹீரோவாக நடிக்கும் "பிரேக்கிங் நியூஸ்' ஆக்ஷன் திரைப்பட இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.

Advertisment

"ஜிகுனா' படத்தைத் தயாரித்த திருக் கடல் உதயம் தனது மூன்றாவது தயாரிப்பான "பிரேக்கிங் நியூஸ்' படத்தை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை "அந்நியன்', "முதல்வன்', "சிவாஜி' போன்ற படங்களுக் குப் பணியாற்றிய அண்ட்ரோ பாண்டியன் டைரக்ட் செய்கிறார்.

Advertisment

bb

""ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷன் படம் மிகப் பிரம்மாண்டமான பொருள் செலவில் தயாராகிறது, இதில் சண்டைக் காட்சிகளில் ரோபோட் ரானிக், அனிமேட்ரோனிக் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

விஷூவல் எஃபெக்ட்ஸின் பங்கு அதிகமாக உள்ளது என்பதால், பாதிப் படத்திற்குமேல் கிரீன், புளுமேட்டி லேயே படமாக்கி வருகிறோம், காதல், எமோஷன், சென்டிமென்டுடன் கலந்த கமர்ஷியல் படமாக தயாராகிறது'' என்கிறார் இயக்குநர்.

Advertisment

அறிமுக நாயகி பானு, "சுறா' படத்தில் வில்லனாக நடித்த தேவ்கில், "வேதாளம்' படத்தில் வில்லனாக நடித்த ராகுல் தேவ், இருவரும் இந்தப் படத்தில் வில்லன் களாக வருகிறார்கள், ஜெயப்பிரகாஷ், இந்தினரஜா, சந்தான பாரதி, மோகன் ராம், பழ கருப்பையா, பி.எல். தேனப்பன் மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத் திரங்களில் நடித்திருக்கிறார்கள்.