தீபாவளிக்கு ரிலீசான "கைதி' பம்பர் ஹிட் அடித்திருக்கும் சந்தோஷத்துடன் நிருபர்களிடம் கார்த்தி பேசியது-

Advertisment

karthi

"" "கைதி' படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும்போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டு மென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஒட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக்கொள்ள வேண்டும். லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இடது- வலது என்று வளைத்து ஓட்டுவது மிகவும் கடினம். லாரியில் பயணம் செய்பவர்களைவிட எல்லா வகையிலும் ஓட்டுநருக்குதான் ஆபத்து அதிகம். மற்ற வாகனங் களைவிட லாரி ஓட்டுவதற்கு மட்டுமல்ல; லாரியில் இறங்கி ஏறுவதற்குகூட அதிகமான சக்தி வேண்டும். லாரி ஓட்டுநர்களின் பெருமை இப்போதுதான் புரிகிறது. தனது நிறுவனத்திற்காக வும் வாழ்க்கைக் காகவும் இரவு- பகல் பாராமல் உழைக்கிறார்கள்.

அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்'' என்றார்.