தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான பிரபல தயாரிப்பாளர், நடிகர் சங்கிலி முருகன், சந்தானபாரதி, "ஜூனியர்' பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், "பப்ளிக் ஸ்டார்' துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "நரை.'
நெஞ்சை நெகிழவைக்கும் உருக்கமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான பிரபல தயாரிப்பாளர், நடிகர் சங்கிலி முருகன், சந்தானபாரதி, "ஜூனியர்' பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், "பப்ளிக் ஸ்டார்' துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "நரை.'
நெஞ்சை நெகிழவைக்கும் உருக்கமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக "அம்மா கிரியேசன்ஸ்' சிவா மற்றும் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ் கலந்துகொண்டனர்.
விழாவில் ஆர்.கே. சுரேஷ் பேசும் போது' ""நான் தயாரிப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமாகி ஏழு வருடங்கள் ஆகி யிருக்கிறது. அன்று நான் தயாரித்த "6 மெழுகுவர்த்திகள்' ஜெயிக்காமல் போயிருந்தால் நான் இங்கிருந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். எனது பெரியப்பா "சங்கிலி முருகன்' இப்படத்தில் நடித்திருக்கிறார். அதுவே இப்படத்தின் வெற்றியை உறுதிசெய்திருக்கிறது. இப்போதிருக்கிற சூழலில் சிறிய பட்ஜெட் படங்களை எடுத்து வெளியிடுவது என்பது சாதாரணமானது இல்லை. அந்த வகையில் இப்படி ஒரு வித்தியாசமான படத்தை துணிந்து தயாரித்திருக்கிறத் தயாரிப்பாளர் களுக்கு எனது வாழ்த்துகள். "நரை' திரைப்படம் ஜெயிக்க வேண்டும். இயக்குநர் விவி-க்கு எனது வாழ்த்துகள்'' என்றார்.
சங்கிலி முருகன் பேசியபோது, ""அந்தக் காலத்தில் திரைப்படம் பார்க்கப் போவதெல்லாம் திருவிழாவிற்குப் போவது மாதிரி. இப்போது எல்லாம் அப்படியே மாறிப்போயிருக்கிறது. பல படங்கள் ரசிகனுக்குப் புரிவதே இல்லை. சமீபத்தில்கூட ஒரு படம் வந்தது, ரசிகனை இருட்டு அறையில் குருட்டு குத்து குத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் காலகட்டத்தில் "நரை' போன்ற படம் வருவது நல்ல விஷயம்தான். இயக்குநர் வி.வி. நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார். அவர் கதை சொல்லும்போதே, அவ்வளவு அருமையாக நடித்துக்காட்டுவார். இப்படத்தில் சொல்லவேண்டியது இவர்கள் பயன்படுத்திய ஒளிப்பதிவு டெக்னிக். நிறைய செலவு இல்லாமல், மிகக் குறைந்த பொருட்செலவில் அவர்கள் செய்த லைட்டிங் அவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்திற்கும் இயக்குநர் விவி-க்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். "நரை' சந்தேகமேயின்றி வெற்றிபெறும்'' என்று என்றார் நம்பிக்கையுடன்.