Advertisment

பிளாக் ஷீப் ப்ளான்ஸ்!

/idhalgal/cinikkuttu/black-sheep-plans

ற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூ டியூப் சேனலாக இருப்பது "பிளாக் ஷீப்.' ஆர்.ஜே. விக்னேஷ், அரவிந்த் உள்பட பல இளங்கலைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

Advertisment

bsl

"எல்லாருக்கும் நல்லாருக்கும், என்ற வாக்கியத்தோடு "பிளாக் ஷீப்' குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது. புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை "பிளாக

ற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூ டியூப் சேனலாக இருப்பது "பிளாக் ஷீப்.' ஆர்.ஜே. விக்னேஷ், அரவிந்த் உள்பட பல இளங்கலைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

Advertisment

bsl

"எல்லாருக்கும் நல்லாருக்கும், என்ற வாக்கியத்தோடு "பிளாக் ஷீப்' குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது. புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை "பிளாக் ஷீப்' அறிமுகப்படுத்தியது. இதன் துவக்க விழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் "பிளாக் ஷீப்' தளத்தில் வெற்றிகரமாக இயங்கிவரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தினார்கள். சிறப்பு விருந்தினர் களாக கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ, நடிகரும் டாக்டருமான சேதுராமன், "விஜய் டி.வி.' புகழ் கோபிநாத், அசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ்: சிஎஸ்கே அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் ஹர்பஜன் சிங் திருவள்ளுவராக நடிக்கும் வலைத்தொடர் ஒன்றை உமஉஊ விக்கியின் இயக்கத்தில் தயாரிக்க உள்ளது. இந்த வலைத்தொடரின் 12 பகுதிகளைக் கொண்ட முதல் சீசன் பிப்ரவரி 2, 2020-ஆம் தேதிமுதல் ஒளிபரப்பாகவுள்ளது.

Advertisment

தமிழ் டிஜிட்டல் தளத்தில் இயக்கும் திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தனித்துவமான விருதினை வழங்கிக் கௌரவப்படுத்திட விருது வழங்கும் விழா.

"ஆண்பாவம்: ஒரு ஆண் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளை வேடிக்கையான முறையில் விவாதிக்க வரும் நிகழ்ச்சி. "கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப் படத்தின் கதாநாயகனான டாக்டர் சேதுராமன் நடிப்பில், "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப் படத்தின்மூலம் தன் முத்திரையை பதித்த கார்த்திக் வேணு கோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகயிருக்கிறது. 12 பகுதிகளைக்கொண்ட இந்த தொடரின் முதல் சீசன் பிப்ரவரி 2-ஆம் தேதிமுதல் வெளியாக இருக்கிறது.

cini311219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe