Advertisment
/idhalgal/cinikkuttu/bitz-bazaar

சிவனையும் மாயர்களையும் மையமாக வைத்து பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகி வருகிறது "மாயன்.' சன் டி.வி.யில் விஷால் தொகுத்து வழங்கிய "நாம் ஒருவர்' நிகழ்ச்சியை டைரக்ட் பண்ணிய ராஜேஷ் கண்ணா தான் "மாயன்' படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணுகிறார். மலேசிய நடிகரான வினோத் மோகன் ஹீரோவாகவும், பிந்துமாதவி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். மற்ற கேரக்டர்களில் ஜான் விஜய், "ஆடுகளம்' நரேன், "தெறி' தீனா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர். மலேசியாவின் டத்தோ

சிவனையும் மாயர்களையும் மையமாக வைத்து பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகி வருகிறது "மாயன்.' சன் டி.வி.யில் விஷால் தொகுத்து வழங்கிய "நாம் ஒருவர்' நிகழ்ச்சியை டைரக்ட் பண்ணிய ராஜேஷ் கண்ணா தான் "மாயன்' படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணுகிறார். மலேசிய நடிகரான வினோத் மோகன் ஹீரோவாகவும், பிந்துமாதவி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். மற்ற கேரக்டர்களில் ஜான் விஜய், "ஆடுகளம்' நரேன், "தெறி' தீனா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர். மலேசியாவின் டத்தோ பாதுக்கா ஸ்ரீ டாக்டர் மோகன சுந்தரமும், டத்தோ கணேஷ் மோகன சுந்தரமும் இணைத் தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

Advertisment

ff

அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் விக்ரம் நடிக்கும் 58-ஆவது படத்தின் ஷூட்டிங் பாதிக்கும்மேல் முடிந்துவிட்ட நிலையில், படத்திற்கு "கோப்ரா' என டைட்டில் வைத்துள்ளனர். விக்ரமிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

"தோழர் வெங்கடேசன்' படத்தின் டைரக்டர் மகாசிவன், அடுத்ததாக விமலிடம் கதை சொல்லியுள்ளார். அதே விமலை வைத்து மலேசியத் தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கும் படத்தை ஆரம்பித்துவிட்டாரம் சற்குணம்.

Advertisment

மூன்று வெற்(று)றிப் படங்களின் விழாவை முதல்வர் எடப்பாடியை வைத்து பிரம்மாண்டமாக நடத்தினார் ஐசரி கணேஷ். அதேவிழா மேடையில் ஹீவா நடித்த "சீறு' படம் டிசம்பர் 20-ஆம் தேதி ரிலீஸ் என்றார் ஐசரி. அந்த மூன்று படங்களில் ஆர்.ஜே. பாலாஜியின் "எல்.கே.ஜி.' மட்டும் ஹிட். மத்ததெல்லாம் ஊத்திக்கொண்டன. வரவுக்கும் செலவுக்கும் சரியாகப் போய்விட்டதால் "சீறு' படத்தை 2020 பிப்ரவரிக்கு தள்ளிவைத்துவிட்டார்

cc

"ரேக்ளா ரேஸ்', "அனுபவி ராஜா', "ஸ்பாட்' போன்ற படங்களை டைரக்ட் பண்ணிய ரிஷிராஜ் இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் "கெத்துல' என்ற படத்தை டைரக்ட் பண்ணி வருகிறார்.

நகைக்கடை விளம்பரத்தில் நடிக்கும் சினேகா, சென்னையில் ஷூட்டிங் என்றால் தினசரி ஒரு லட்சமும், அவுட்டோராக இருந்தால் இரண்டு லட்சமும் வாங்கிவருகிறாராம்.

b

ஆர். கண்ணன் டைரக்ஷனில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பழைய மகாபலிபுரம் ரோட்டில் பிரம்மாண்டமாக போடப்பட்ட வீடு செட்டில் பதினைந்து நாட்கள் நடந்தது. இதற்கடுத்த ஷூட்டிங்கிற்காக அஜர்பைஜான் கிளம்பியுள்ளது படக்குழு. ""எனக்கும் அதர்வாவிற்கும் இந்தப் படம் புது அனுபவமாக இருக்கும்'' என்கிறார் கண்ணன். அஜர்பைஜான் ஷூட்டிங் முடிந்து வந்ததும்தான் படத்தின் டைட்டிலை சொல்வாராம் கண்ணன்.

bb

தனஞ்செயன் தயாரிப்பில், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி டைரக்ஷனில் சிபிராஜ், பூஜா குமார், நந்திதா நடிக்கும் "கபடதாரி' படத்தின் ஷூட்டிங் செம ஸ்பீடாக போய்க் கொண்டிருக்கிறதாம். ஜனவரி இறுதிக்குள் ஷூட்டிங்கை முடித்து, மார்ச் மாதம் ரிலீஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கிறார்.

cini070120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe