Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazzar-6

விஜய்யின் 64-ஆவது படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். சென்னை நசரத்பேட்டையிலுள்ள இ.வி.பி. ஸ்டுடியோவில் தொடர்ச்சியாக 22 நாட்கள் ஷூட்டிங் முடித்து விட்டு, இப்போது டெல்லியிலுள்ள பிரபல கல்லூரியான ஸ்ரீராம் ஆர்ட்ஸ் & சைன்ஸ் காலேஜில் ஷூட்டிங் செம விறுவிறுப்பாக நடக்கிறதாம்.

Advertisment

bbbb

லோகேஷ் கனகராஜின் ஸ்பிரிட்டையும் ஸ்பீடையும் பார்த்து அசந்து விட்டாராம் விஜய். போட்ட பட்ஜெட்டைவிட கம்மியாகவே படத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார் என தயாரிப்பாளரிடம் உற்சாகமாகச் சொல்லியிருக்கார் விஜய். ஹீரோயின் மாளவிகா மோகனன்- விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளும், வில்லன் விஜய் சேதுபதி- விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் டெல்லியிலும் சென்னையிலும் படமாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் டெல்லியில் காற்று மாசுவ

விஜய்யின் 64-ஆவது படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். சென்னை நசரத்பேட்டையிலுள்ள இ.வி.பி. ஸ்டுடியோவில் தொடர்ச்சியாக 22 நாட்கள் ஷூட்டிங் முடித்து விட்டு, இப்போது டெல்லியிலுள்ள பிரபல கல்லூரியான ஸ்ரீராம் ஆர்ட்ஸ் & சைன்ஸ் காலேஜில் ஷூட்டிங் செம விறுவிறுப்பாக நடக்கிறதாம்.

Advertisment

bbbb

லோகேஷ் கனகராஜின் ஸ்பிரிட்டையும் ஸ்பீடையும் பார்த்து அசந்து விட்டாராம் விஜய். போட்ட பட்ஜெட்டைவிட கம்மியாகவே படத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார் என தயாரிப்பாளரிடம் உற்சாகமாகச் சொல்லியிருக்கார் விஜய். ஹீரோயின் மாளவிகா மோகனன்- விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளும், வில்லன் விஜய் சேதுபதி- விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் டெல்லியிலும் சென்னையிலும் படமாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் டெல்லியில் காற்று மாசுவால் சென்னை திரும்பிவிட்டார் விஜய். டெல்லி சீன்கள் மங்களுருவில் செட் போடப்பட்டு வரும் வாரம் ஷூட்டிங் ஆரம்பம்.

Advertisment

"அசுரன்' படத்தைத் தமிழிலேயே பார்த்துவிட்டு அசந்துவிட்டாராம் தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு. படத்தின் டைரக்டர் வெற்றிமாறனை ஃபோனில் தொடர்புகொண்டு பாராட்டித் தள்ளிவிட்டாராம்.

bbb

"அசுரனி'ன் தெலுங்கு ரீமேக்கில் மகேஷ் பாபுவிற்கு நடிக்க ஆசை என்றாலும், வேறு படங்கள் கையில் இருப்பதால் நடிக்க முடியவில்லையாம். இதனால் தெலுங்கு "அசுரனாக' வரப்போகிறார் வெங்கடேஷ். இதேபோல் இந்தியிலும் ரீமேக்காகிறான் "அசுரன்.' இரண்டு மொழி ரீமேக் ரைட்சிலும் லம்பாக ஒரு தொகை பார்த்துவிட்டாராம் தமிழ்த் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. தமிழில் மஞ்சு வாரியார் நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் அல்லது ரம்யா கிருஷ்ணன் நடிக்கலாம் என்கிறார்கள்.

நிஜமான குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், "இறுதிச்சுற்று' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நிஜத்தில் வீராங்கனைக்கான உடல்வாகு இருந்தாலும் அழகான- அம்சமான முக அமைப்பால் அனைவரையும் வசீகரித்தார்.

bb

ஆனால் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட வேண்டு மென்ற அவரது ஆசை இன்னும் நிறைவேற வில்லை. இப்போது தமிழில் அருண் விஜய்யுடன் "பாக்சிங்' படத்திலும், அசோக்செல்வனுடன் "ஓ மை கடவுளே' என்ற படத்திலும் மற்றும் "வணங்காமுடி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். அவ்வப்போது கிளாமர் ஸ்டில்களையும் ரிலீஸ் பண்ணி வரும் ரித்திகா சிங், சினிமாவில் நடித்துக்கொண்டே, குத்துச்சண்டை போட்டி யில் கலந்துகொள்ள தீவிர பயிற்சி எடுத்துவருகிறார்.

"பரியேறும் பெருமாள்' என்ற ஒரே படத்தின்மூலம் பல திசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தியவர் டைரக்டர் மாரி செல்வராஜ். இப்போது அதைவிட பவர்ஃபுல் கதையுடன் தனுஷை டைரக்ட் பண்ணப் போகிறார். இப்படத்தைத் தயாரிப்பதும் கலைப்புலி தாணுதான்.

bits

படத்தின் செம வெயிட்டான கேரக்டர் ஒன்றில் "சண்டக் கோழி' லாலும், ஹீரோயினாக மலையாளத்தின் இளம் ஹீரோயி னான ரஜிஷா விஜயனும் கமிட் ஆகியிருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங், டிசம்பரில் ஆரம்பமாகிறதாம்.

மலாபாலை வைத்து "ஆடை' படத்தை எடுத்து பரபரப்புக் கிளப்பியவர் டைரக்டர் ரத்னகுமார். "மேயாத மான்'-தான் இவருக்கு முதல் படம் என்றாலும் "ஆடை'-தான் அதிரடி கிளப்பியது.

vbb

இந்த "ஆடை'-யை இந்தியிலும் தெலுங்கிலும் ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கிவிட்டார் ரத்னகுமார். இந்தியில் கங்கனா ரணவத்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. "மேயாத மான்' படத்தில்தான் அறிமுகப்படுத்திய இந்துஜாவை "ஆடை' மூலம் தெலுங்கு வாடை காட்டலாமா என்ற யோசனையில் உள்ளாராம் ரத்னகுமார்.

"இந்தியன்-2'-வின் ஷூட்டிங் இப்போது வடமாநிலங்களில் செம விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங், இந்துஜா என மூவர் இருந்தாலும் யாருக்கு என்ன கேரக்டர் என்பது ரகசியமாகவே உள்ளது. ஆனால், காஜல் அகர்வாலுக்கு பாட்டி வேடம் என நியூஸ் கிளம்பியதும் ""ஆத்தாடி அப்படியெல்லாம் கிடையாது.

bb

தற்காப்புக் கலை தெரிந்த பெண்ணாக வருகிறேன். மற்றபடி என்னோட வயது என்னன்னு இப்போதைக்கு என்னால சொல்லமுடியாது'' என்கிறார் காஜல் அகர்வால். "இந்தியன்-2'-வின் அடுத்த கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தைவான் நாட்டில் நடக்கிறது.

cini261119
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe