Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazzar-2

மாதவன்- ரித்திகா சிங் நடித்த ஹிட் படமான "இறுதிச்சுற்று'-வின் டைரக்டர் சுதா கொங்கரா, சூர்யாவை வைத்து எடுக்கும் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் ஆரம்பமாகிறது.

Advertisment

bits

சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்த "ரெமோ'-வை டைரக்ட் பண்ணிய பாக்யராஜ் கண்ணன், அடுத்ததாக கார்த்தியுடன் கமிட்டாகி அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்.

"சண்டக்கோழி-2'-வின் ஒரு சீனை மதுரை ஏர்போர்ட்டில் எடுக்க அனுமதி கிடைக்கத் தாமதமானதால், பாண்டிச்சேரி ஏர்போர்ட்டில் மதுரை ஏர்போர்ட் போர்டை மாட்டி சீனை எடுத்திருக்கிறார்கள்.

வன்னியர் இனத் தலைவரான ராமசாமி படையாச்சியை

மாதவன்- ரித்திகா சிங் நடித்த ஹிட் படமான "இறுதிச்சுற்று'-வின் டைரக்டர் சுதா கொங்கரா, சூர்யாவை வைத்து எடுக்கும் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் ஆரம்பமாகிறது.

Advertisment

bits

சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்த "ரெமோ'-வை டைரக்ட் பண்ணிய பாக்யராஜ் கண்ணன், அடுத்ததாக கார்த்தியுடன் கமிட்டாகி அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்.

"சண்டக்கோழி-2'-வின் ஒரு சீனை மதுரை ஏர்போர்ட்டில் எடுக்க அனுமதி கிடைக்கத் தாமதமானதால், பாண்டிச்சேரி ஏர்போர்ட்டில் மதுரை ஏர்போர்ட் போர்டை மாட்டி சீனை எடுத்திருக்கிறார்கள்.

வன்னியர் இனத் தலைவரான ராமசாமி படையாச்சியை ரோல்மாடலாக வைத்து மம்முட்டி ஹீரோவாக நடித்த படம் "மறுமலர்ச்சி.' அதேபோல் சம்புவராயரை ரோல்மாடலாக வைத்து சரித்திரக் கதை ஒன்றை ரா. பார்த்திபனிடம் சொல்லியிருக்காராம் "ரெட்டை வால்' டைரக்டர் சிகாமணி.

டைரக்டர் சசியின் "பூ' படம்மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் ஞானகரவேல்.

அதன்பின் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதியிருக்கிறார். இப்போது கே.வி.

Advertisment

ஆனந்த் டைரக்ஷனில் சூர்யா நடிக்கும் படத்தில் ஓப்பனிங் சாங் எழுதியிருக்காராம் ஞானகரவேல்.

நயன்தாராவை வைத்து "அறம்' எடுத்த டைரக்டர் கோபி நைனார் அடுத்ததாக அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம். "அறம்' போலவே இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கவுள்ளதாம்.

டைரக்டர் வெங்கட் பிரபுவின் "பார்ட்டி'-யில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ் போன்ற பிரபலங்கள் இருந்தும் இன்னும் விற்பனையாகாமல் தத்தளிக்கிறதாம்.

மன்னர் வகையறா' மூலம் விமலுக்கு ஹிட் கொடுத்த டைரக்டர் பூபதி பாண்டியன் விக்ரம் பிரபுவை வைத்து அடுத்த படத்தை டைரக்ட் பண்ணுகிறார்.

பத்துப் படங்களுக்கும்மேல் கைவசம் வைத்திருக்கிறார் கஞ்சா கருப்பு. கைவசம் இருக்கும் படங்களில் முக்கால்வாசி ஷூட்டிங் மதுரையைச் சுற்றியிருக்கும் ஏரியாக்களில் நடப்பதால், சொந்த ஊரான சிவகங்கையிலேயே டேரா போட்டுவிட்டதால், சென்னையில் இருக்கும் தனது வீடான பாலா- அமீர் இல்லத்தை ஷூட்டிங்கிற்காக வாடகைக்கு விட்டுள்ளாராம் கஞ்சா கருப்பு.

bits

"ஒண்டிக்கட்ட' படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணினார் இசை அமைப்பாளர் பரணி. படத்தால் பெரிய அளவு லாபம் இல்லை என்றாலும் கையைக் கடிக்காததால், அடுத்ததாக கௌதம் கார்த்திக்கை வைத்து "நூடுல்ஸ்' என்ற படத்தை ஆரம்பிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டாராம் பரணி.

சென்னை அய்யப்பன்தாங்கலிலில் இருக்கும் தனது வீட்டை நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விடுகிறாராம் நடிகை சீதா.

மெரினாவில் ஜல்லிலிக்கட்டுப் போராட்டம் தீவிரமாக இருந்தபோது, ஆர்யாவை வைத்து "சந்தனத் தேவன்' படத்தை ஆரம்பித்தார் டைரக்டர் அமீர். மதுரை ஏரியாவில் பத்து சீன் எடுத்ததோடு சரி, படம் ஸ்டாப் ஆகிப் போச்சாம்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினி படத்தில் பாம்பே டானாக வருகிறாராம் விஜய் சேதுபதி. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை பின்னி மில்லிலில் பத்து நாட்கள் இரவில் ஷூட் பண்ணியிருக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்.

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' கேமராமேன் பிரேம்குமார்தான் விஜய்சேதுபதியின் "96' படத்தின் டைரக்டர்.

cine110918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe