எமிஜாக்சனின் லவ் என்னாச்சோ தெரியல, திடீர்னு லண்டன் மாடல் அழகியான நீலம் கில்லுடன் பச்சக்குன்னு ஒட்டியிருக்கும் ஃபோட்டோவை ரிலீஸ் பண்ணி, என்னோட ஹஸ்பண்டுன்னு சொல்லிலி ஏகப்பட்ட பேரை கிறுகிறுக்க வச்சுட்டாரு எமி.
"உள்ளே- வெளியே-2' எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிவிட்டார் ரா. பார்த்திபன். முற்றிலும் புதுமுகங்களுடன் களத்தில் இறங்கும் பார்த்திபன், டைரக்டர் சமுத்திரக்கனிக்கு வெயிட்டான ரோல் கொடுத்துள்ளாராம். "உள்ளே- வெளியே-2' எடுக்க உள்ளும் வெளியேயும் வேலைகள் முடிவதற்கு முன்பாக வெப் சீரியல் ஒன்றை முடிப்பதில் முனைப்பு காட்டி வருகிறாராம் பார்த்திபன்.
விஷ்ணுவிஷால் தனது அடுத்த தயாரிப்பாக "கவரிமான் பரம்பரை'-யை ஆரம்பிக்கிறார். தனக்கு ஜோடியாக புதுமுகத்தை கமிட் பண்ணியிருக்கும் விஷ்ணுவிஷால் காமெடிக்கு சூரியிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். வருகிற ஜூலை மாதம் மதுரையில் ஷூட்டிங் ஆரம்பிக்கிறது.
""டிராஃபிக் ராமசாமி வாழ்க்கைக் கதையை ரஜினி சாரை வச்சு எடுக்கலாம்னு இருந்தேன். அதற்குள் எங்க டைரக்டர் எஸ்.ஏ.சி. முந்திக்கிட்டாரு. "வட போச்சே' கதையாகிப் போச்சு'' என சரடு விடுகிறார் ஷங்கர்.
"""தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் நடிக்கும்போது, என்னிடம் வந்து "இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு
எமிஜாக்சனின் லவ் என்னாச்சோ தெரியல, திடீர்னு லண்டன் மாடல் அழகியான நீலம் கில்லுடன் பச்சக்குன்னு ஒட்டியிருக்கும் ஃபோட்டோவை ரிலீஸ் பண்ணி, என்னோட ஹஸ்பண்டுன்னு சொல்லிலி ஏகப்பட்ட பேரை கிறுகிறுக்க வச்சுட்டாரு எமி.
"உள்ளே- வெளியே-2' எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிவிட்டார் ரா. பார்த்திபன். முற்றிலும் புதுமுகங்களுடன் களத்தில் இறங்கும் பார்த்திபன், டைரக்டர் சமுத்திரக்கனிக்கு வெயிட்டான ரோல் கொடுத்துள்ளாராம். "உள்ளே- வெளியே-2' எடுக்க உள்ளும் வெளியேயும் வேலைகள் முடிவதற்கு முன்பாக வெப் சீரியல் ஒன்றை முடிப்பதில் முனைப்பு காட்டி வருகிறாராம் பார்த்திபன்.
விஷ்ணுவிஷால் தனது அடுத்த தயாரிப்பாக "கவரிமான் பரம்பரை'-யை ஆரம்பிக்கிறார். தனக்கு ஜோடியாக புதுமுகத்தை கமிட் பண்ணியிருக்கும் விஷ்ணுவிஷால் காமெடிக்கு சூரியிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். வருகிற ஜூலை மாதம் மதுரையில் ஷூட்டிங் ஆரம்பிக்கிறது.
""டிராஃபிக் ராமசாமி வாழ்க்கைக் கதையை ரஜினி சாரை வச்சு எடுக்கலாம்னு இருந்தேன். அதற்குள் எங்க டைரக்டர் எஸ்.ஏ.சி. முந்திக்கிட்டாரு. "வட போச்சே' கதையாகிப் போச்சு'' என சரடு விடுகிறார் ஷங்கர்.
"""தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் நடிக்கும்போது, என்னிடம் வந்து "இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்குமா'ன்னு கேட்பார் விஜய்சேதுபதி. "உனக்கென்னப்பா ராசா, லட்சணமா இருக்கே, நல்லா வருவே' ன்னு வாழ்த்தினேன். இப்ப விஜய்சேதுபதி தயாரித்த "ஜூங்கா'-வில் நடித்து, அவர் கையால சம்பளம் வாங்கியதை நினைக்கும்போது, ஒரு தாய் தனது மகனின் வளர்ச்சியைப் பார்த்து எப்படி கர்வப்படுவாளோ, அப்படித்தான் எனக்கும் இருக்கு'' என மிக நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் பேசுகிறார் சரண்யா பொன்வண்ணன்.
""அரசின் உளவுத்துறை சிற்றெறும்பைக்கூட சந்தேகிக்கும். இங்கே நான் இப்போது பேசுவதுகூட கண்காணிக்கப்படும். முதலமைச்சர் சார்பான செய்திகளை மட்டும் கொண்டு சேர்ப்பது உளவுத்துறை வேலையல்ல, விமர்சனத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும்'' ஒரு சினிமா விழாவில் இப்படி அரசியல் பேசினார் கவிப்பேரரசு வைரமுத்து.
சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடி, "சண்டக் கோழி'யில் விஷாலுக்கு ஜோடி, "சாமி-2'-வில் விக்ரமுக்கு ஜோடி என கீர்த்தி சுரேஷ், செம பிஸியாக இருந்தாலும் சிவகார்த்திகேயனின் நட்புக்காக "சீமராஜா' வில் கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதித்துள்ளார். "ரஜினி முருகன்', "ரெமோ' ஹிட் சென்டிமென்டுக்காகத்தான் கீர்த்தி சுரேஷை விரும்பி அழைத்தாராம் சிவகார்த்திகேயன்.
"வெண்ணிலா கபடிக் குழு'-வில் கபடி, "ஜீவா'வில் கிரிக்கெட் விளையாட்டுக்களை மையப்படுத்திய டைரக்டர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு "சாம்பியன்.' ஃபுட்பாலை மையப்படுத்தும் இந்தக் கதைக்கு ரோஷன் என்கிற புதுமுகத்தை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். ஹீரோயினாக மிருணாளினி அறிமுகமாகிறார். தெரிந்த முகங்களாக "அஞ்சாதே' நரேன், ஜெயப்பிரகாச், ஜி.கே. ரெட்டி ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள்.
சாயன்ஸ் பிடிப்பதற்காக ஹீரோயின் களெல்லாம் செம தூக்கலான கவர்ச்சி ஸ்டில்ஸ் எடுத்து உலவ விடுவார்கள். ஆனால் "காளி' படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடிபோட்ட அம்ரிதாவோ சேலையிலும் கிக்காக காட்ட முடியும் எனச் சொல்லியே போஸ் கொடுத்து ஸ்டில்ஸ்களை ரிலீஸ் பண்ணியிருக்கிறார்.
"மொழி' படத்தில் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியாக ஜோதிகாவின் நடிப்பை வெளிக்கொண்டுவந்த டைரக்டர் ராதா மோகன், அதே ஜோதிகாவை வைத்து, இந்தி ரீமேக்கான "துமாரி சுலுவை', தமிழில் "காற்றின் மொழி'-யாக்குகிறார். இந்தியில் வித்யா பாலன் நடித்த ரேடியோ ஜாக்கி வேடத்தில் நடிக்கிறார் ஜோதிகா. இப்படத்தில் ஜோதிகாவின் கணவராக விதார்த் நடிக்கிறார். மொத்த படத்தையும் முப்பதே நாட்களில் முடிக்கும் திட்டத்தோடு களம் இறங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் போஃப்டா தனஞ்செயன்.
"மெட்ரோ' படத்தின்மூலம் தமிழில் என்ட்ரியானவர் ஹீரோ சிரிஷ். இவரின் இரண்டாவது படம் "ராஜா ரங்குஸ்கி' ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டது. மூன்றா வது படமான "பிஸ்தா'-வும் ரெடியாகிவிட்டது. "பிஸ்தா'வில் சிரிஷுக்கு மிருதுளா முரளி, "சைத்தான்' அருந்ததி நாயர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். எடிட்டர் ரமேஷ் பாரதி "பிஸ்தா'வை டைரக்ட் பண்ணியுள்ளார். கிராமத்துப் பின்னணியில் காதலும் கலகலப்பும் கலந்து தயாராகியிருக்கிறது "பிஸ்தா'.
நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் சக்தி சௌந்தர் ராஜா டைரக்ஷனில் "ஜெயம்' ரவி நடித்த "டிக் டிக் டிக்' அடுத்த மாதம் ரிலீசாகிறது. இதற்கடுத்து பிரபுதேவாவை ஹீரோவாகப் போட்டு படத்தை ஆரம்பிக்கிறார் ஜபக். பிரபுதேவாவின் "போக்கிரி', "வில்லு' படங்களில் எழுத்தாளராகப் பணிபுரிந்த ஏ.சி. முகில்தான் ஜபக்கின் படத்தை டைரக்ட் பண்ணுகிறார்.
ரஷ்யாக்காரரை கல்யாணம் பண்ணிக்கொண்ட ஸ்ரேயா, தொடர்ந்து சினிமா சான்ஸையும் விடுவதாக இல்லைபோல. அரவிந்த்சாமியுடன் நடித்து முடித்திருக்கும் "நரகாசூரனை'-த் தொடர்ந்து பாலகிருஷ்ணாவுடன் தெலுங்குப் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 27-ஆம் தேதி தொடங்கவுள்ளது. வெங்கடேஷ், நாகார்ஜுனாவுடன் ஜோடிபோட பேசிவருகிறாராம் ஸ்ரேயா.
சகட்டுமேனிக்கு தமிழ் சினிமாவையும் தமிழக அரசியலையும் விட்டு விளாசியிருக் கும் தமிழ்ப்படம் "2.0'-வில் சிவாவுக்கு ஜோடிகள் ஐஸ்வர்யா மேனனும் திஷா பாண்டேவும்.
காமெடி சந்தானம் ஹீரோவாக நடிக்கும் "சர்வர் சுந்தரம்' ரிலீஸாகாமல் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது. எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து ஒருவழியாக ஜூலை 6-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவித்துள்ளது தயாரிப்புத் தரப்பு. "சர்வர் சுந்தர'-த்தில் சந்தானத்திற்கு ஜோடி வைபவி சாண்டில்யா.
மோகன்லால்- சூர்யா கூட்டணியை இயக்குகிறார் டைரக்டர் கே.வி. ஆனந்த். படத்தின் தயாரிப்பு லைக்கா புரொடக்ஷன்.
"கொம்பன்' முத்தையா கௌதம் கார்த்திக்கை வைத்து தனது "தேவராட்டம்' படத்தை ஆரம்பித்துவிட்டார். ஹீரோயினாக மஞ்சிமா மோகன் கமிட் ஆகியுள்ளார்.
" "சத்ரியன்' படத்துக்கு அடுத்து கிராமத்துப் பெண் வேடத்துக்காகக் காத்திருந்தேன். "தேவராட்டம்' கிடைத்ததும் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துட்டேன்'' என உற்சாகமாகச் சொல்கிறார் மஞ்சிமா மோகன்.
யு.வி. கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட படைப்பு சாஹூ. சுஜீத் டைரக்ஷனில் பிரபாஸ்- ஸ்ரத்தா கபூர் ஜோடிபோடும் இப்படத்தின் அதிரடி மெகா ஸ்டண்ட் சீன் ஒன்று சமீபத்தில் அபுதாபியில் படமாக்கப்பட்டது. அபுதாபி அரசரின் சிறப்பு அனுமதி கிடைத்த பின்தான் ஷூட்டிங் நடத்த முடிந்ததாம்.