Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazzaar

யக்குநர் இமயம் பாரதிராஜா வால் "அன்னக்கொடியும் கொடி வீரனும்' படம்மூலம் தமிழுக்கு அறிமுகமானார் "அலைகள் ஓய்வதில்லை' நாயகியான ராதாவின் மகள் கார்த்திகா. அதன்பின் கே.வி. ஆனந்த் டைரக்ஷனில் "கோ' படத்தில் ஜீவாவுக்கு ஜோடி போட்டார். முதல் படம் ஊத்தல், இரண்டாவது படம் ஹிட் என்றாலும், அதன்பின் தமிழ் சினிமாவில் கார்த்திகாவைக் காணவில்லை. மும்ப

யக்குநர் இமயம் பாரதிராஜா வால் "அன்னக்கொடியும் கொடி வீரனும்' படம்மூலம் தமிழுக்கு அறிமுகமானார் "அலைகள் ஓய்வதில்லை' நாயகியான ராதாவின் மகள் கார்த்திகா. அதன்பின் கே.வி. ஆனந்த் டைரக்ஷனில் "கோ' படத்தில் ஜீவாவுக்கு ஜோடி போட்டார். முதல் படம் ஊத்தல், இரண்டாவது படம் ஹிட் என்றாலும், அதன்பின் தமிழ் சினிமாவில் கார்த்திகாவைக் காணவில்லை. மும்பையில் இருக்கும் அப்பா- அம்மாவுடன் செட்டிலாகிவிட்டார், திருமணம் செய்துகொண்டார் என தகவல்கள் பரவின. ஆனால் சமீபத்தில் தனது பிறந்தநாளை அம்மா- அப்பா முன்னிலையில் கொண்டாடியதுடன் கிளாமர் கொஞ்சம் தூக்கலாக போஸ் கொடுத்த ஸ்டில்களை கோலிவுட் ஏரியாவில் உலவவிட்டுள்ளார் கார்த்திகா.

Advertisment

bb

விக்ரம் பிரபுவுடன் மஹிமா நம்பியார் ஜோடி போட்ட "அசுரகுரு' ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. இந்தப் படம் தனக்கு நல்ல சான்ஸ்களை வாங்கித் தரும் என்ற நம்பிக்கை மஹிமா நம்பியாருக்கு இருந்தாலும், ஃப்ரஷ் ஃபோட்டோக்களை தனது பி.ஆர்.ஓ. மௌனம் ரவி மூலம் ரிலீஸ் பண்ணி, சான்ஸ் பிடிக்கும் வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

bb

Advertisment

யக்குநர் செழியனின் "டூ லெட்' படம் பல உலக நாடுகளின் சினிமா விழாக்களில் விருதுகளையும் பாராட்டுகளையும் அள்ளியது. தமிழகத் தியேட்டர்களில் ரிலீசாகி நல்ல வசூலையும், ஏராளமான பாராட்டுகளையும் பார்த்தது "டூ லெட்'. அந்தப் படத்தில் நடுத்தரக் குடும்பத்து மனைவியாக சிறப்பாக நடித்திருந்தார் ஷீலா. அந்த ஷீலாவுக்கு சமீபத்தில் நெய்வேலியில் நடந்த புத்தகக் கண்காட்சியில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

cbb

"காதல் முன்னேற்றக் கழகம்' படத்தில் பாண்டியராஜனின் மகன் பிருத்வி ராஜனுக்கு ஜோடி போட்டிருந்தார் சாந்தினி. படத்தின் கலெக்ஷன் ரிசல்ட்டும், விமர்சன ரிசல்ட்டும் சுமார்தான் என்றாலும், அடுத்தடுத்த வாய்ப்புகளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார் சாந்தினி. அந்தப் படரிலீசுக்குமுன்பாக மீடியாவுக்கு சாந்தினி கொடுத்த சூப்பர் போஸ்கள்தான் இங்கே இருக்கு.

cine230719
இதையும் படியுங்கள்
Subscribe