Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazar

த்ரிஷாவை வைத்து "கர்ஜனை' படத்தை டைரக்ட் பண்ணிய சுந்தர் பாலுவின் அடுத்த படம் "கன்னித்தீவு' தலைப்புக்குத் தகுந்தாற்போல் படத்தில் வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா என நான்கு ஹீரோயின்களை "கன்னித்தீவி'-ல் இறக்கியிருக்கிறார் டைரக்டர். கிருத்திகா புரொடக்ஷன் பேனரில் படம் தயாராகிறது.

Advertisment

bits

பேய்த்தனமாக ஹிட் அடித்த பேய்ப்படமான ராகவா லாரன்சின் "காஞ்சனா-1' படம் இந்தியில் ரீமேக்காகவுள்ளது. ராகவா லாரன்ஸ் கேரக்டரில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமார் வேடத்திற்கு பிரபல இந்தி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. முதன்முதலாக இந்திப் படத்தை டைரக்ட் செய்யப்போகும் உற்சாகத்தில் இருக்கிறார் ராகவா லாரன்ஸ். படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் ஆரம்பம்.

Advertisment

மலையாளத்திலும் தமிழிலும் ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், கதை கேட்பதில் சாய்பல்லவி ரொம்பவே பந்தா பண்ணுகிறார் என யாரோ புரளியைக் கிளப்பிவிட்டுவிட்டார்கள். ""நான் மிடில் கிளாஸ் ப

த்ரிஷாவை வைத்து "கர்ஜனை' படத்தை டைரக்ட் பண்ணிய சுந்தர் பாலுவின் அடுத்த படம் "கன்னித்தீவு' தலைப்புக்குத் தகுந்தாற்போல் படத்தில் வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா என நான்கு ஹீரோயின்களை "கன்னித்தீவி'-ல் இறக்கியிருக்கிறார் டைரக்டர். கிருத்திகா புரொடக்ஷன் பேனரில் படம் தயாராகிறது.

Advertisment

bits

பேய்த்தனமாக ஹிட் அடித்த பேய்ப்படமான ராகவா லாரன்சின் "காஞ்சனா-1' படம் இந்தியில் ரீமேக்காகவுள்ளது. ராகவா லாரன்ஸ் கேரக்டரில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமார் வேடத்திற்கு பிரபல இந்தி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. முதன்முதலாக இந்திப் படத்தை டைரக்ட் செய்யப்போகும் உற்சாகத்தில் இருக்கிறார் ராகவா லாரன்ஸ். படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் ஆரம்பம்.

Advertisment

மலையாளத்திலும் தமிழிலும் ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், கதை கேட்பதில் சாய்பல்லவி ரொம்பவே பந்தா பண்ணுகிறார் என யாரோ புரளியைக் கிளப்பிவிட்டுவிட்டார்கள். ""நான் மிடில் கிளாஸ் பொண்ணுங்க. திடீர்னு சினிமா சான்ஸ் கிடைச்சுதுங்க. யாரிடமும் நான் பந்தா பண்ணியதில்லங்க. திட்டமிட்டு யாரோ வதந்தியைக் கிளப்பிவிடுறாங்க. எனக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குதுங்க'' என புலம்பித் தள்ளுகிறார் சாய்பல்லவி.

bitsbazar

கண்பார்வை யற்ற மாற்றுத் திறனாளியாக "ராஜபார்வை' யிலும் பாம்புப் பெண்ணாக "நீயா'-விலும் இன்னும் சில படங்களில் அதிரடி ஹீரோயினாக வும் கலக்கிவரும் வரலட்சுமி "டேனி' என்ற படத்தில் காமெடியிலும் கலக்குகிறாராம்.

தனுஷுடன் "மயக்கம் என்ன', சிம்புவுடன் "ஒஸ்தி'-யில் ஜோடிபோட்ட ரிச்சா கங்கோபாத்யாவுக்கு ஜோ என்ற அமெரிக்க மாப்பிள்ளை ரெடியாகிவிட்டார்.

"பாரிஸ் பாரிஸ்' படம் முடிஞ்சு ரிலீசுக்குத் தயாரா இருக்கு. கமலுடன் "இந்தியன் -2' ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகிருச்சு. இதுபோக "கோமாளி' தெலுங்கில் "சீதா'ன்னு இந்த ஆண்டு செம பிஸியாக இருக்காரு காஜல் அகர்வால். தன் தங்கையின் குழந்தைக்கு இஷ்கான் என பெயரிட்டுள்ளார் காஜல்.

ப் ரன்வீர்சிங்- மது மந்தேனா, விஷ்ணு இந்துரி, டைரக்டர் காபீர்கான் காம்பினேஷனில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள "83' என்ற இந்திப் படம் வருகிற 2020 ஏப்ரலில் ரிலீசாகிறது.

bitsbazar

தன்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த தனசேகரன் என்பவருக்காக தனது மெட்ராஸ் டாக்கீஸ் பேனரில் படம் தயாரிப்பதோடு, தனசேகரனோடு இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தில் ஹீரோவாக ஜி.வி. பிரகாஷும் அவரது அக்காவாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கிறார்கள்.

"கடாரம் கொண்டான்' படத்தில் விக்ரமின் உடலமைப்பு, சில நடிகர்களைப் பிரம்மிக்க வைத்துள்ளது. அந்த நடிகர்களில் விக்ரமின் மகன் துருவ்வும் ஒருவர். தன் அப்பாவைப்போலவே உடம்பை ஏற்றும் முயற்சியில் ஜிம்மே கதி எனக் கிடக்கிறார் துருவ்.

bitsbazar

டைரக்டர் செல்வராகவனின் "என்.ஜி.கே.' படத்தில் கமிட்டான சூர்யா பேப்பாடு பெரும்பாடு படுகிறாராம். இரண்டு வருஷத்துக்கு மேலாகியும் தனது சோம்பேறித்தனத்தால் படத்தை முடிக்காமல் ஜவ்வாக இழுக்கிறாராம் செல்வராகவன். எடுத்த வரைக்கும் போட்டுப் பார்த்ததில் "நோட்டா' படத்தில் வந்த சீன்களில் முக்கால்வாசி இருக்காம். அதனால் ""இருபது நாள் கால்ஷீட் கொடுங்க, படத்தை முடிச்சுத் தர்றேன்'' என சூர்யாவிடம் செல்வா மண்டையைச் சொறிய, ""அதெல்லாம் முடியாது. பத்து நாள்தான் தருவேன்.

அதுக்குள்ள முடிச்சுக்கங்க, இல்லேன்னா எக்கேடு கெட்டும் போங்க'' என செம காட்டமாக டோஸ் விட்டாராம் சூர்யா. இந்த டென்ஷனையெல்லாம் தணிக்கத்தான் தனது குடும்பத்துடன் மாலத்தீவு சென்று ரிலாக்ஸ் பண்ணிவிட்டுத் திரும்பியிருக்கார் சூர்யா.

புனே, ஹைதராபாத்தில் பெண்களுக்கென பிரத்யேக ஜிம் நடத்தி வரும் ராகுல் ப்ரீத்சிங், கூடிய சீக்கிரம் சென்னையிலும் பெண்கள் ஜிம்மை ஆரம்பிக்கப் போறாராம்.

உலகப் புகழ்பெற்ற கவிஞர் சிலி நாட்டைச் சேர்ந்த பாப்லோ நெருடாவின் கவிதைகளுக்கு தீவிர ரசிகையாம் ராதிகா ஆப்தே. அதேபோல் பாப்லோவின் பேச்சுக்களை தன் செல்ஃபோனில் பதிந்து வைத்துக்கொண்டு, ஷூட்டிங் ஸ்பாட்டில் கிடைக்கும் இடைவெளியில் கேட்டு உற்சாகப்படுகிறாராம்.

மிஷ்கின் டைரக்ஷனில் வந்த "முகமூடி'-யில் ஜீவாவுக்கு ஜோடி போட்ட பூஜாஹெக்டே, அந்தப் படம் பப்படம் ஆனதால், கொஞ்ச காலம் கர்நாடகாவிலேயே இருந்துவிட்டு, இப்போது இந்தி ஃபீல்டு பக்கம் ஒதுங்கியிருக்கிறார். அக்ஷய்குமாருடன் "ஹவுஸ்ஃபுல்-4' படத்தில் நடித்துவருகிறார் பூஜா ஹெக்டே.

கவிப்பேரரசு வைரமுத்து, சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் தனது வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போது, அருகிலுள்ள மாநகராட்சிப் பூங்காவில் இருக்கும் தந்தை பெரியார் சிலையை வணங்கிவிட்டுத்தான் செல்வாராம்.

டைரக்டர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி இப்போது, நடிகர் நாகார்ஜுனா தயாரிக்கும் வெப் சீரியலில் நடித்துவருகிறாராம். கோவளம் பீச்சில் இதன் ஷூட்டிங், விறுவிறுப்பாக நடந்துவருகிறதாம்.

சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக இருந்த மகேஷ், டைரக்டராக புரொமோஷன் ஆகியுள்ள படம் தான் "தோழர் வெங்கடேஷ்.' படத்தின் ஷூட்டிங் முழுசாக முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடந்து ரிலீசுக்குத் தயாராக இருக்கிறார் "தோழர் வெங்கடேஷ்.' இந்தப் படத்தில் கவிஞர் ஜெயம் கொண்டான் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார்.

cine050219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe