Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazar-0

மீண்டும் சங்கீதா இரண்டு வருடங் களுக்குமுன்பு ரிலீசான "நெருப்புடா' படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்திருந்த சங்கீதா, இப்போது பாபு யோகேஸ்வரன் டைரக்ஷனில் விஜய் ஆன்டனி, ரம்யா நம்பீசன், மலையாள ஹீரோ சுரேஷ்கோபி ஆகியோர் நடிக்கும் "தமிழரசன்' படத்தில் கமிட் ஆகியுள்ளார். ""இந்தப் படத்தில் மிகப்பெரிய மருத்துவமனையை நிர்வகிக்கும் டாக்டர் வேடம் எனக்கு.

Advertisment

இந்த கேரக்ட

மீண்டும் சங்கீதா இரண்டு வருடங் களுக்குமுன்பு ரிலீசான "நெருப்புடா' படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்திருந்த சங்கீதா, இப்போது பாபு யோகேஸ்வரன் டைரக்ஷனில் விஜய் ஆன்டனி, ரம்யா நம்பீசன், மலையாள ஹீரோ சுரேஷ்கோபி ஆகியோர் நடிக்கும் "தமிழரசன்' படத்தில் கமிட் ஆகியுள்ளார். ""இந்தப் படத்தில் மிகப்பெரிய மருத்துவமனையை நிர்வகிக்கும் டாக்டர் வேடம் எனக்கு.

Advertisment

இந்த கேரக்டர் மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கும், பரபரப்பாகப் பேசப்படும்'' என்கிறார் சங்கீதா. விஜய் ஆன்டனி வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சிகளை சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோவின் அருகில் இருக்கும் ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் செட் போடாமலேயே படமாக்கியிருக்கிறார்கள். தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவருகிறது.

Advertisment

b

கட்சி எப்போது?

ரஜினி- ஏ.ஆர். முருகதாஸ்- லைக்கா கூட்டணி இணையும் படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் தொடங்குகிறது. இதனால்தான் எம்.பி. தேர்தலில் போட்டி யில்லை, யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்த ரஜினி, சட்டமன்றத் தேர்தலின் போது கட்சிப் பெயரை அறிவித்துவிட்டு அரசியலில் இறங்கு வேன் எனச் சொல்லியிருந்தார். ஆனால் இப்போது இன்னொரு டைரக்டரிடம் கதை கேட்டு ஓ.கே.சொல்லி, அடுத்த படத்துக்கும் தயாராகிவிட்டார் ரஜினி.

அஜீத்தை வைத்து "நேர் கொண்ட பார்வை' படத்தை டைரக்ட் பண்ணிவரும் எச். வினோத் ரஜினி படத்தின் அடுத்த டைரக்டர்.

அப்படின்னா தலைவர் கட்சி ஆரம்பிக்கப் போறது எப்போன்னு அவரது ரசிகர்கள் கவலையுடன் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

b

ரகசியம் பரம ரகசியம்

அஜீத்தின் "விஸ்வாசம்' ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்தபோது, படத்தின் கதையும் சீன்களும் லீக்கானது. அந்தப் படத்தைப் பற்றிய அப்டேட் சங்கதிகளை முதன்முதலில் "சினிக்கூத்து'தான் தொடர்ந்து எழுதிவந்தது. ஆனால் இப்போது போனிகபூர் தயாரிப்பில் அஜீத், வித்யா பாலன் நடித்துவரும் "நேர்கொண்ட பார்வை' படத்தைப் பற்றி எந்த நியூசும் வெளிவராமல் பாதுகாக்கிறார் களாம். படத்தின் ஷூட்டிங் அதே ராமோஜிராவ் ஸ்டுடியோவில்தான் நடக்கிறதா; இல்ல மும்பையில் செட் போட்டு எடுக்கிறார்களா என்பது ஃபெப்சி தொழிலாளர்களுக்கே தெரியவில்லையாம்.

cine020419
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe