ரஜினியின் "பேட்ட' பட ஷூட்டிங் உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் பரபரப்பாக நடந்துவருகிறது. கட்டிக் கொண்டிருக்கும் அடுக்குமாடி ஒன்றில் ரஜினியும் விஜய்சேதுபதியும் மோதும் துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளை மிரட்டலாக கம்போஸ் பண்ணிருக்காராம் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். ரஜினி- த்ரிஷா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை லக்னோவிலும், பல காட்சிகளை சென்னை ஸ்டுடியோவிலும் ஷூட் பண்ண ப்ளான் பண்ணியுள்ளாராம் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்.
சென்னை திருவான்மியூரில் மிகப் பிரம்மாண்ட வீட்டைக்கட்டி முடித்துள்ளாராம் தல அஜீத். மாடியில் இருக்கும் அஜீத்தின் பெட்ரூம் வரை கார் போவது மாதிரி வீடு வடிவமைக்கப் பட்டுள்ளதாம். வீடு பிரம்மாண்டமாக இருந்தாலும் தனது மகள் அனோஷ்காவை மிடில் கிளாஸ் பொண்ணு மாதிரிதான் வளர்க்கிறாராம் அஜீத்.
"தர்மதுரை'-க்குப் பிறகு டைரக்டர் சீனு ராமசாமி- விஜய்சேதுபதி கைகோர்க்கும் "மாமனிதன்' படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குகிறது. இதுவும் மதுரைக் கதைக்களம்தான்.
மணிரத்னத்திடம் அசிஸ்டென்ட் டைரக்டராக வேலை பார்த்தார் ரா. பார்த்திபனின் மகள் கீர்த்தனா. எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனைத் திருமணம் செய்துள்ள கீர்த்தனா, முன்னணி ஹீரோ ஒருவரிடம் கதை சொல்லிலி ஓ.கே. வாங்கியுள்ளாராம். விரைவில் கதை- திரைக்கதை- வசனம்- இயக்கம் கீர்த்தனா ஸ்ரீகர்பிரசாத் என்ற அறிவிப்பு வரலாம்.
சினிமா பாடல் ஆசிரியர்கள் சங்கம் என்ற பேரில் சில டூபாக்கூர் பார்ட்டிகள் கவிஞர் வைரமுத்துவைச் சந்தித்து சங்கத்தில் சேருமாறு கூறியுள்ளனர். ""யார்யா நீங்க, ஒங்க சங்க அட்ரஸ் என்னய்யா'' என வைரமுத்து கிண்டலாகக் கேட்டதும் ஜூட் விட்டுள்ளனர் டூபாக்கூர்கள்.
காமெடி யோகி பாபுவின் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டதாம். ""ஒரு நாளைக்கு 4 லட்சம் சம்பளம்னா வாங்க, இல்லேன்னா வெளியில போங்க'' என்கிறாராம் யோகி பாபு. சமீபத்தில் நடந்த "பரியேறும் பெருமாள்' ஆடியோ விழாவின் துவக்கத் திலேயே யோகி பாபு கிளம்பிவிட்டதால் கடுப்பாகிவிட்டாராம் டைரக்டர் பா. இரஞ்சித். 28-ஆம் தேதி ரிலீசாகவுள்ள "மரகதக்காடு' படத்தின் டைரக்டர் மங்களேஸ்வரன், கொஞ்ச மாதங் களுக்குமுன்பு விதார்த்- ஸ்ரீதிவ்யா ஜோடியில் "காட்டுமல்லிலி' படத்தை ஆரம்பித்து பத்து நாட்கள் ஷூட்டிங்கும் நடத்தினார். மலேசியா வைச் சேர்ந்த தயாரிப்பாளர் பாதி யிலேயே ஜூட் விட்டதால் "காட்டுமல்லிலி' அத்தோடு போச்சு. அதன்பின் அலைந்து திரிந்து "மரகதக்காடு' சான்ஸைக் கைப்பற்றியிருக்கிறார் மங்களேஸ்வரன்.
"பிரியமானவளே', "நினைத்தேன் வந்தாய்' என விஜய்யை வைத்து படங்கள் எடுத்த டைரக்டர் செல்வபாரதி, இப்போது வடபழனி முருகன் கோவில் அருகே பெட்டிக் கடை வைத்துள்ளார்.
கரூர் அருகே உள்ள தனது சொந்த ஊரான ஜவ்வாதுபட்டியில் பத்து ஏக்கர் வாழைத் தோட்டம் வாங்கியுள்ளார் மன்சூரலிகான்.
தனுஷின் "வடசென்னை'-யில் நடித்து முடித்து விட்டார் அமீர்.
"பேரன்புமிக்க பெரியோர்களே' படத்தின் டைரக்ஷனையும் முடித்துவிட்டார். இவைபோக வேறெதுவும் சான்ஸ் இல்லாததால் தர்ஹாக்களுக்கு போய்க் கொண்டிருக்கிறாராம்.
"கடைக்குட்டி சிங்கம்' செம ஹிட் அடித்ததில் இயக்குநர் பாண்டிராஜ் செம ஹேப்பி. அடுத்ததாக உதயநிதிக்கும் அருள்நிதிக்கும் கதைகள் தயாராக வைத்திருக்கிறாராம்.
எந்த புது கார் வந்தாலும் உடனே வாங்கிவிடுவாராம் நயன்தாரா. அடுத்த மாடல் வந்தால் இருக்கும் கார்களில் சிலவற்றை விற்றுவிடுவாராம். அந்தவகையில் நயனிடம் 15 கார்கள் இருக்காம். அடி ஆத்தாடியோவ் இம்புட்டு காரா?
"பரியேறும் பெருமாள்' ஆடியோ விழாவிற்கு கண்டிப்பாக சேலை கட்டித்தான் வரவேண்டும் என "கயல்' ஆனந்தியிடம் சொல்லிவிட்டாராம் பா. இரஞ்சித். ""நமக்கு கைல இருக்குறதே ஒண்ணு ரெண்டு படம். இந்த மாதிரி ஃபங்ஷனுக்கு சிக்குன்னு கிக் காஸ்ட்யூமில் வந்தா தானே அடுத்தடுத்து சான்ஸ் கிடைக்கும். இப்படி சேலை கட்டி வரச்சொல்லிலி நோகடிச்சுட்டாரே'' என இப்ப வரை புலம்புகிறாராம் "கயல்' ஆனந்தி.
பிரபுதேவா- ஹரிகுமார் காம்பினேஷனில் "தேள்' என்ற படம் தயாராகிவருகிறது. ஏற்கெனவே இதே டைட்டிலிலில் ஒரு உப்புமா படம் வந்ததை பிரபுதேவா விடம் சிலர் சொல்ல, டைட்டிலை மாற்றலாமா என டைரக்டரிடம் கேட்கிறாராம் பிரபுதேவா.
ஒளி ஓவியர் தங்கர்பச்சான், தனது மகனை ஹீரோவாகக் களம் இறக்குகிறார். மகனுக்காக ஸ்பெஷல் கதை ஒன்றைத் தயார் செய்துவிட்டு, தயாரிப்பாளருக்காகக் காத்திருக்கிறாராம் தங்கர்.
"தனிமை' என்ற படத்தில் சோனியா அகர்வாலுக்கும் கஞ்சா கருப்புவுக்கும் வெயிட்டான கேரக்டர்களாம்.
பட விஷயம், விளம்பர விஷயம் எதுவாக இருந்தாலும் மாலை ஆறுமணிக்கு மேல் வடபழனி க்ரீன்பார்க் ஓட்டலைத் தான் மீட்டிங் ஸ்பாட்டாக வைத்துள்ளார் அமலா பால். எந்தப் பட புரோமஷனுக்கு வருவதாக இருந்தாலும் கறாராக கரன்சியைப் பேசி வாங்கிவிட்டுத்தான் வருகிறாராம் கே. பாக்யராஜ்.
சமுத்திரக்கனி யிடம் கதை சொல்லப் போகும் புது இயக்குநர்கள், முதலில் சமுத்திரக் கனியின் படத்தில் வேலை பார்க்க வேண்டும். பட வேலைகள் முடிந்ததும் புரொடியூசர் யாரும் சிக்கல எனச்சொல்லி அவர்களைக் கழட்டி விட்டு விடுவாராம் கனி.
அஜீத்தை வைத்து "ஆழ்வார்' படம் டைரக்ட் பண்ணிய செல்லா இப்போது "நீச்சல்' என்ற படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல் கள் ரெக்கார்டிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது.
டைரக்டர் பாரதிராஜா நடித்துள்ள "ஓம்', சாருஹாசன் நடித்துள்ள "தாதா 87' படங்கள் வியாபாரம் ஆகாமல் முடங்கியுள்ளன.