/idhalgal/cinikkuttu/bits-bazaar-38

"சாது' படத்தில் அர்ஜுனுக்கு ஜோடி போட்டார் இந்தி நடிகை ரவீணா டாண்டன். மும்பைத் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். குழந்தைகள் வளர்ந்தபின் டி.வி. டாக் ஷோக்களில் பிஸியாக இருந்த ரவீணா "கே.ஜி.எஃப்-2' கன்னட சினிமாவின்மூலம் நீண்ட இடைவெளிக்குப்பிறகு தென்னக சினிமாவை நோக்கி தனது கவனத்தைத் திருப்பியிருக்கிறார். கன்னட சினிமாவின் இளம் ஹீரோவான யஷ் நடித்து, பிரசாந்த் நீல் டைரக்ட் பண்ணிய "கே.ஜி.எஃப்' முதல் பாகம் எக்குத்தப்பாக ஹிட் அடித்தது.

vv

இந்தியில் பிஸியான நடிகையாக இருந்தபோதே கிரிக்கெட் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கைக் கல்யாணம் செய்துகொண்டார் கீதா பஸ்ரா. இந்தி சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ள கீதா பஸ்ரா, மற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் நாவல்களையும் தேடித் தேடி வாங்கி வாசிப்பதில் ஆர்வமுள்ளவராம். சமீபத்தில் சினிமாவிற்கு ஸ்கிரிப்ட் எழுதுவது குறித்து லண்டனில் கோர்ஸ் முடித்துள்ள கீதா பஸ்ரா, விரைவில் டைரக்டராக

"சாது' படத்தில் அர்ஜுனுக்கு ஜோடி போட்டார் இந்தி நடிகை ரவீணா டாண்டன். மும்பைத் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். குழந்தைகள் வளர்ந்தபின் டி.வி. டாக் ஷோக்களில் பிஸியாக இருந்த ரவீணா "கே.ஜி.எஃப்-2' கன்னட சினிமாவின்மூலம் நீண்ட இடைவெளிக்குப்பிறகு தென்னக சினிமாவை நோக்கி தனது கவனத்தைத் திருப்பியிருக்கிறார். கன்னட சினிமாவின் இளம் ஹீரோவான யஷ் நடித்து, பிரசாந்த் நீல் டைரக்ட் பண்ணிய "கே.ஜி.எஃப்' முதல் பாகம் எக்குத்தப்பாக ஹிட் அடித்தது.

vv

இந்தியில் பிஸியான நடிகையாக இருந்தபோதே கிரிக்கெட் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கைக் கல்யாணம் செய்துகொண்டார் கீதா பஸ்ரா. இந்தி சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ள கீதா பஸ்ரா, மற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் நாவல்களையும் தேடித் தேடி வாங்கி வாசிப்பதில் ஆர்வமுள்ளவராம். சமீபத்தில் சினிமாவிற்கு ஸ்கிரிப்ட் எழுதுவது குறித்து லண்டனில் கோர்ஸ் முடித்துள்ள கீதா பஸ்ரா, விரைவில் டைரக்டராகிறார்.

நயன்தாரா பாணியைக் கையில் எடுத்துள்ளார் த்ரிஷா. தான் நடிக்கும் படங்களின் புரமோவிற்குப் போவதில்லை என்பதை ஸ்ட்ரிக்ட் பாலிலிஸியாக வைத்திருக்கிறார் நயன். அதைத்தான் சமீபத்தில் கையில் எடுத்தார் த்ரிஷா. அவர் நடித்த "பரமபதம் விளையாட்டு' படத்தின் புரமோவிற்கு வராததால் "20 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கணும்'என கொடி பிடித்திருக்கார் தயாரிப்பாளர் டி. சிவா.

vv

"மாயவன்' படம்மூலம் தமிழில் என்ட்ரியானார் லாவண்யா திரிபாதி. அதற்கடுத்து "பிரம்மன்' படத்தில் சசிகுமாருக்கு ஜோடி போட்டார். மேற்படி இரு படங்களும் சரியாகப் போகாததால் தெலுங்குப் பக்கம் ஒதுங்கினார். அங்கேயும் இதே கதைதான். ""தெலுங்கில் வரிசையாக சான்ஸ்கள் வரத்தான் செய்யுது. ஆனா படம்தான் ஓடமாட்டேங்குது. இதனால என்மீது ராங் சென்டிமென்டை பரப்பி, பொழப்பைக் கெடுக்கி றார்கள்'' என புலம்பு கிறாராம் லாவண்யா திரிபாதி.

கையில படமும் இல்ல, பணமும் இல்லன்னா "ரோஜாக்கூட்டம்' ஸ்ரீகாந்த் என்னதான் பண்ணுவார்? அவரும் "ப்ளேபாய்' ரேஞ்சுக்கு இறங்கி அடிக்க ஆரம்பிச்சுட்டார். "உன்காதல் இருந்தால்' படத்தில் சந்திரிகா ரவியுடன் கட்டி உருளும் கிளுகிளு ஸ்டில்களை ரிலீஸ் பண்ணி, மார்க்கெட்டை ‘கேட்ச்’ பண்ண கோதாவில் குதித்துவிட்டார் ஸ்ரீகாந்த். இந்தப் படத்திற்காக மொத்தம் 1,000 சிகரெட்டுகளை ஊதித்தள்ளிவிட்டாராம் "கடாரம் கொண்டான்' புகழ் லெனா. இந்த மேட்டர் டாக்டர் ஐயாவுக்குத் தெரிஞ்சா டங்குவார் அந்து போயிருமே!

நயன்தாராவின் மாஜி மேனேஜர் ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் பேனருடன் கைகோர்த்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் "அயலான்' படம் பாதிக்குமேல் முடிந்துவிட்டது. மூன்றாம் கட்ட ஷூட்டிங் கோவாவில் நடந்துவருகிறது. சி.கா.வுக்கு ஜோடியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகனின் பெர்ஃபாமென்ஸ் படத்தில் பட்டையைக் கிளப்பியுள்ளதாம். "கோலமாவு கோகிலா' படத்தின் டைரக்டர் நெல்சன்தான் அயலானை இயக்கியுள்ளார். படத்தை சன் டி.வி. பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாம்.

vv

உதயா-—விதார்த் காம்பினேஷனில் தயாராகும் "அக்னி நட்சத்திரம்' படத்தின் ஷூட்டிங், வேலூரிலுள்ள நூறாண்டு பழமையான மருத்துவமனையில் நடந்தது. வேலூரின் பல்வேறு பகுதிகளில் ஒரு மாதம் தொடர்ந்து ஷூட்டிங் நடந்து முடிந்து, இப்போது ஆரணியில் கடைசிக்கட்ட ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ளது. ஜேசன் ஸ்டுடியோ மற்றும் கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ் சார்பில் சிவதாஸ் மணிகண்டன் தயாரிக்கும் "அக்னி நட்சத்திரத்'-தை எஸ்.டி. ஷரண் டைரக்ட் பண்ணுகிறார். ஸ்மிருதி வெங்கட், ஸ்ரீபல்லவி என இரு ஹீரோயின்களுடன் சின்ன கலைவாணர் விவேக்கும் இருக்கிறார்.

vv

ஹேமந்த் மதுக்கர் டைரக்ஷனில் மாதவன்- அனுஷ்கா இணையும் "நிசப்தம்' படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. ஐந்து மொழிகளில் ஏப்ரல் 2-ஆம் தேதி ரிலீசாவதால், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்துவருகின்றன. அமெரிக்க வாழ் இந்தியர் களின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு உருவாகும் இப்படத்தில், அங்கு நடைபெறும் ஒரு குற்றச்சம்பவம் ஒவ்வொரு வரின் வாழ்கையையும் எப்படி புரட்டிப் போடுகிறது என்பதுதான் கதை. வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக ‘நிசப்தத்தில் நடித்து அசத்திருக்காராம் அனுஷ்கா. அஞ்சலிலி, ஷாலிலினி பாண்டே என பிரபல ஹீரோயின்களும் படத்தில் உள்ளனர்.

சமீபத்தில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டடித்த "ஓ மை கடவுளே' படம் தெலுங்கில் ரீமேக்காகிறது. தமிழின் அஷ்வத் மாரிமுத்துதான் தெலுங்கிலும் டைரக்ட் பண்றார். தெலுங்கில் தான் நடித்த முதல் படம் ஹிட் ஆனதால், அங்கேயும் தன்னுடைய மார்க்கெட்டை ஸ்டெடி பண்ண, "ஓ.மை.க.'-வில் செகண்ட் ஹீரோயினாக நடித்த வாணிபோஜன், தெலுங்கு ரீமேக்கில் மெயின் ஹீரோயினாக நடிக்க, அஷ்வத் மாரிமுத்துவிடம் பேச்சுவாத்த்தை நடத் திவருகிறாராம்.

vv

குஷ்புவின் அவ்னி சினிமேக்கர்ஸ் தயாரிபில், ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் ஜோடிபோட்ட "நான் சிரித்தால்' படம் ஹிட் (அப்படின்னு சொல்லிக்கிட்டாங்க) டானதால் ஹேப்பியாக இருக்கார் ஐஸ்வர்யா மேனன். இப்போது கோலிவுட்டிற்கு புதுசாக இளசாக ஹீரோயின்கள் வந்துகொண்டேயிருப்பதால், இருக்கும் இடத்தைத் தக்கவைக்கப் போராடுகிறார் ஐஸ்வர்யா மேனன்.

cini100320
இதையும் படியுங்கள்
Subscribe