cc

பார்த்தார் சாந்தினி தமிழரசன்... இழுத்துப் போத்தி நடிச்சா மார்க்கெட் சூடு பிடிக்காது போல... நாமளும் க்ளாமர் க(கு)ளத்தில் இறங்குவோம் என்ற முடிவுடன்... ஹீட் கிளப்பும் ஃபோட் டோஸ்களை தனது பி.ஆர்.ஓ. தியாகுமூலம் ரிலீஸ் பண்ணிவிட்டார். சாந்தினியின் கைவசம் ராதாமோகனின் "பொம்மை', கீராவின் "எட்டுத் திக்கும் பற' உட்பட சில படங்கள்தான் இருந்தாலும், கைநிறைய படங்களையும் பணத்தையும் சம்பாதித்தே தீருவது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். அநேகமாக அடுத்த வாரமே இன்னும் பல ஹீட் ஃபோட்டோஸ்கள், வெவ்வேறு காஸ்ட் யூம்களில், தியாகுமூலம் ரிலீசாகலாம்.

b

Advertisment

மேற்படி சாந்தினியின் பாலிசியைத்தான் கையில் எடுத்திருக்கிறார் ஸ்ருதி ரெட்டி. சொந்த ஊர் ஆந்திர மாநிலம், கடப்பா என்றாலும், தமிழ் சினிமாவில் கொடி நாட்டவேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்னையில் லேண்ட் ஆகிவிட்டார். ஒன்றிரண்டு படங்களில் சின்ன கேரக்டரில் நடித்தாலும், "ஜல்லிக்கட்டு' படம் இவருக்கு பேர் வாங்கித் தந்தது. பேர் மட்டும் வாங்குனா பத்தாது; பணமும் சேர்க்கணும் என ஸ்ருதி முடிவு செய்து, ஸ்டில்களை ரிலீஸ் செய்திருக்கிறார்.

priya

ராதா மோகனின் "பொம்மை' படப் பிடிப்பு முடிந்துவிட்டது. அருண் விஜய்யுடன் நடித்த "மாஃபியா' கடந்த 21-ஆம் தேதி ரிலீசா கிவிட்டது. அடுத்ததாக ப்ரியா பவானி சங்கர் ரொம்பவே எதிர்பார்ப்பது ஷங்கர்- கமல் காம்பினேஷனில் தயாராகிக் கொண்டி ருக்கும் "இந்தியன்-2'வைத்தான். அதேநேரம் ஒரு சோக செய்தி... கடந்த 19-ஆம் இரவு சென்னையை அடுத்துள்ள நசரத்பேட்டை இ.வி.பி. ஸ்டுடியோவில் "இந்தியன்-2' ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. ஷாட் பிரேக்கில் லைட்டிங் மாற்றும் போது ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததால் மூன்று தொழி லாளர்கள் பரிதாப மாகப் பலி யானார்கள்.

Advertisment