Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazaar-32

செந்தமிழன் சீமான், ஆர்.கே. சுரேஷ் இருவரும் இணைந்து கதையின் நாயகர்களாக நடிக்கும் படம் "அமீரா.' மலையாளத்தில் bbbமம்முட்டி, திலீப்புடன் நடித்து பிரபலமான அனுசித்தாராதான் டைட்டில் ரோல் ஹீரோயினாக நடிக்கிறார்.

Advertisment

சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா. சுப்ரமணியன்தான் படத்தின் டைரக்டர்.

""இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சினைகளைப் பற்றிய கதைதான் "அமீரா.' ""40 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டோம். ஆனால் அதற்குமுன்பே முடிந்துவிடும்போல் தெரிகிறது. இதற்குக் காரணம் ஹீரோயின் அனுசித்த

செந்தமிழன் சீமான், ஆர்.கே. சுரேஷ் இருவரும் இணைந்து கதையின் நாயகர்களாக நடிக்கும் படம் "அமீரா.' மலையாளத்தில் bbbமம்முட்டி, திலீப்புடன் நடித்து பிரபலமான அனுசித்தாராதான் டைட்டில் ரோல் ஹீரோயினாக நடிக்கிறார்.

Advertisment

சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா. சுப்ரமணியன்தான் படத்தின் டைரக்டர்.

""இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சினைகளைப் பற்றிய கதைதான் "அமீரா.' ""40 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டோம். ஆனால் அதற்குமுன்பே முடிந்துவிடும்போல் தெரிகிறது. இதற்குக் காரணம் ஹீரோயின் அனுசித்தாராதான்.

அவரின் ஒத்துழைப்பை மறக்கவே முடியாது'' என்கிறார் தம்பி திரைக்களத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிக்கும.

Advertisment

"ஜெயம்' ரவியின் "அடங்கமறு' படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரும் பல்வேறு சின்னத் திரை மெகா தொடர்களின் தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய் "எஃப்.ஐ.ஆர்.' படம்மூலம் தயாரிப்பாளராக புரமோஷன் ஆகியிருக்கிறார்.

கௌதம் மேனனிடம் இணை இயக்குநராக வேலை செய்த மனு ஆனந்த் படத்தின் டைரக்டர். விஷ்ணுவிஷால் ஹீரோவாகவும், ஹீரோயின்களாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோரும் கமிட்டாகி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.

nns

உழவன் திரைக்களம் பேனரில், கவிஞர் சினேகன் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் "பொம்மிவீரன்.' ""கட்டைக் கூத்து கலைஞன் ஒருவனின் வாழ்வை அதன் பல்வேறு பரிணாமங்களை மண்ணின் மனமும் குணமும் இயல்பும் மாறாமல் விவரிக்கும் உணர்வுப்பூர்வமான படம்'' என்கிறார் சினேகன். கட்டைக் கூத்து கலைஞனாக நடிப்பதற்கு சிறப்புப் பயிற்சிகள் எடுத்திருக்கிறார் சினேகன். நாட்டியா என்னும் புதுமுகம் ஹீரோயினாக அறிமுக மாகிறார். கே. பாக்யராஜ், ஊர்வசி, சிங்கம்புலிலி, சந்தான பாரதி, கனிகா, "தாரை தப்பட்டை' ஆனந்தி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உள்ளது.

கேமராவை சாலை சகாதேவன் கையாள, தாஜ்நூர் இசையமைக்கிறார்.

விஜய் ஜாக்குவார் ஆக்ஷன் டைரக்டராகப் பணிபுரிகிறார். ரமேஷ் மகாராஜன் என்ற அறிமுக இயக்குநர் படத்தை டைரக்ட் பண்ணி முடித்திருக்கிறார்.

bits

கே.புரொடக் ஷன் பேனரில், எஸ்.என். ராஜராஜன் தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தில் ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக கமிட் ஆகியிருப்பதுடன் படத்திற்கு இசையும் அமைக்கிறார். ஜி.வி.பி.க்கு ஜோடி யாக "சீமதுரை'’ ஹீரோயின் வர்ஷா பொல்லமாவும், முக்கிய கேரக்டரில் வாகை சந்திரசேகரும் நடிக்கிறார்கள். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி டைரக்டராக அறிமுகமாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

கடந்த 12-ஆம் தேதி ஏ.வி.எம், ஸ்டுடியோவில் நடந்த படத்திற்கான பூஜையில் தயாரிப்பாளர் கலைப்புலிலி தாணு, டைரக்டர்கள் வெற்றிமாறன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, சரவணன், இளன் ஆகியோர் கலந்துகொண்டனர். ""கல்லூரி மாணவரான ஜி.வி. பிரகாஷுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து விறுவிறுப்பாகச் சொல்லிலியிருக்கிறோம்'' என்கிறார் டைரக்டர் மதிமாறன் புகழேந்தி.

cini240919
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe