Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazaar-3

சூரி டார்ச்சர், சந்தானம் சீட்டிங், மியூஸிக் கலெக்ஷன்

oviya

"""களவாணி-2' எடுக்கப்போறேன், ஃபர்ஸ்ட் பார்ட் மாதிரி இதுலயும் நீங்க இருக்கணும், கலக்கணும். சம்பளம் எவ்வளவுன்னு சொல்லிட்டீங்கன்னா தோதாயிருக்கும்'' என காமெடி சூரியிடம் பேசியிருக்கிறார் டைரக்டர் சற்குணம். ""அதுக்கென்னண்ணே.

Advertisment

oviyaதாராளமா பண்ணலாம். சம்பளத்தப் பத்தி அப்புறமா பேசிக்கலாம்.

சூரி டார்ச்சர், சந்தானம் சீட்டிங், மியூஸிக் கலெக்ஷன்

oviya

"""களவாணி-2' எடுக்கப்போறேன், ஃபர்ஸ்ட் பார்ட் மாதிரி இதுலயும் நீங்க இருக்கணும், கலக்கணும். சம்பளம் எவ்வளவுன்னு சொல்லிட்டீங்கன்னா தோதாயிருக்கும்'' என காமெடி சூரியிடம் பேசியிருக்கிறார் டைரக்டர் சற்குணம். ""அதுக்கென்னண்ணே.

Advertisment

oviyaதாராளமா பண்ணலாம். சம்பளத்தப் பத்தி அப்புறமா பேசிக்கலாம். மத்த வேலைகளைக் கவனிங்கண்ணே'' என உருகியிருக்கிறார் சூரி. "களவாணி-2'-விற்கும் விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன் போன்றவர்களைக் கமிட் பண்ணிவிட்டு, சூரியி டம் போனபோது எக்குத்தப்பாக சூரி சம்பளம் கேட்டதால் "ஆள விடு சாமி' என ஓட்டம் எடுத்த சற்குணம், புதுமுகம் ஒருவரை காமெடியனாக அறிமுகப்படுத்தும் காரியத்தில் இறங்கி விட்டார். சூரி மதுரையில் நடத்தும் புரோட்டாக் கடையும் காத்து வாங்குதாம்.

Advertisment

எப்பவோ ரிலீசாக வேண்டிய சந்தானத்தின் "சர்வர் சுந்தரம்' ஒருவழியாக ஜூலை 6-ஆம் தேதி ரிலீசாகிறது. சீனுக்கு சீன் தன்னை மெகா ஹீரோவாக பில்ட் அப் பண்ணும் கதைகளுடன் வரும் புதுமுக டைரக்டர்களை தடபுடலாக வரவேற்கும் சந்தானம் என்னோட சொந்த பேனரிலேயே படத்தைத் தயாரிக்கிறேன் என வாயில் சீனி ஒழுகப் (வந்தவருக்குத்தான்) பேசுவாராம். கதை கேட்டு முடித்ததும், ரெண்டு வருஷம் கழிச்சு தயாரிப்பாளர் ஒருத்தரப் புடிச்சிட்டு வாங்க படம் பண்ணலாம் என்றதும் கிறுகிறுத்துப் போய்விடுகிறார்களாம் கதை சொல்ல வந்தவர்கள். போன மாசம் வரைக்கும் எட்டு பேர் கிறுகிறுத்திருக்கிறார் களாம். ஹீரோ ஆசையால் ஏழு கோடி ரூபாய் கடன்பட்டதுதான் சந்தானம் கண்ட பலன்.

"சண்டிவீரன்', "கோலி சோடா' படங்களின் மியூஸிக் டைரக்டர் எஸ்.என். அருணகிரி.

இவர் தன்னிடம் பாட்டெழுத சான்ஸ் கேட்டோ, பாடுவதற்கு சான்ஸ் கேட்டோ வருபவர்களிடம் "டெபாஸிட் எவ்வளவு கட்டுவீங்க?' என்கிறாராம். இது என்ன டாஸ்மாக் சூப்பர்வைசர் வேலையா டெபாஸிட் கட்டுவதற்கு என்றால் "நம்மகிட்ட அப்படித்தான். போட்ட டெபாஸிட் திரும்ப வராது' எனச் சொல்லிலியே கலெக்ஷனில் தூள் கிளப்புகிறாராம் அருணகிரி.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe