Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazaar-28

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரிலீசாகி, ஓரளவு கலெக்ஷனும் பார்த்திருக்கும் படம் "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு'. இதில் ஹீரோயினாக நடித்திருக்கும் ஷ்ரின் கஞ்வாலா, தமிழ் சினிமாவை ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவோடுதான் இருக்கிறார்.

Advertisment

அதற்காக விதம்விதமாக ஃபோட்டோ ஷூட் நடத்தி, மூன்று நாட்களுக்கு ஒருமுறை ரிலீஸ் பண்ணிவருகிறார். கடந்த வாரம் அரை நிர்வாண ரேஞ்சில் இருக்கும் ஃபோட்டோக்களை ரிலீஸ் பண்ணியிருக்கிறார்.

Advertisment

bb

ரஜினியின் "கபாலி'மூலம் ரித்விகாவிற்கு நல்ல பேர் கிடைத்தது.

bb

அதற்கடுத்து சதாவும் இவரும் பாலியல் தொழிலாளிகளாக நடித்த "டார்ச்லைட்' படம் சில ஏரியாக்களில் மட்டும்தான் ரிலீசானது. பல ஏரியாக்களில் படத்தை யாரும் வாங்கவே இல்லை. அதற்கடுத்து "எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு' படத்தில் வி.என். ஜானகியாக நடிக்க கமிட் ஆனார். அந்தப் படத்திற்குப் பூஜை போடப்பட்டு, இரண்டு நாளோ, மூணு நாளோ ஷூட்டிங் நடந்ததோடு சரி, அதன்பின் அந்தப் படத்தின் கதி என்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரிலீசாகி, ஓரளவு கலெக்ஷனும் பார்த்திருக்கும் படம் "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு'. இதில் ஹீரோயினாக நடித்திருக்கும் ஷ்ரின் கஞ்வாலா, தமிழ் சினிமாவை ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவோடுதான் இருக்கிறார்.

Advertisment

அதற்காக விதம்விதமாக ஃபோட்டோ ஷூட் நடத்தி, மூன்று நாட்களுக்கு ஒருமுறை ரிலீஸ் பண்ணிவருகிறார். கடந்த வாரம் அரை நிர்வாண ரேஞ்சில் இருக்கும் ஃபோட்டோக்களை ரிலீஸ் பண்ணியிருக்கிறார்.

Advertisment

bb

ரஜினியின் "கபாலி'மூலம் ரித்விகாவிற்கு நல்ல பேர் கிடைத்தது.

bb

அதற்கடுத்து சதாவும் இவரும் பாலியல் தொழிலாளிகளாக நடித்த "டார்ச்லைட்' படம் சில ஏரியாக்களில் மட்டும்தான் ரிலீசானது. பல ஏரியாக்களில் படத்தை யாரும் வாங்கவே இல்லை. அதற்கடுத்து "எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு' படத்தில் வி.என். ஜானகியாக நடிக்க கமிட் ஆனார். அந்தப் படத்திற்குப் பூஜை போடப்பட்டு, இரண்டு நாளோ, மூணு நாளோ ஷூட்டிங் நடந்ததோடு சரி, அதன்பின் அந்தப் படத்தின் கதி என்னவென்றே தெரியவில்லை. அதனால் பார்த்தார் ரித்விகா, ஃப்ரெஷ் ஃபோட்டோ ரிலீஸ்தான் ஒரே வழி என நினைத்து, கிளாமர் கொஞ்சம் கம்மியான ஸ்டில்ஸ்களை ரிலீஸ் பண்ணியிருக்கிறார்.

ஆரவ்- காவ்யா தபார் காம்பினேஷனில் "மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.' படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி முடிவடையும் கட்டத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் டைரக்டர் சரண். படத்தில் சுந்தரி பாய் என்ற கேரக்டரில் செம வில்லித் தனம் காட்டியிருக்கிறாராம் ராதிகா. இந்தக் கேரக்டருக்கு நேர்மாறாக, காது கேளாத சாந்தமான தாய் வேடத்தில் நடித்து அசத்தி யிருக்காராம் ரோகிணி.

bits

எம்.பி. தேர்தலில் தமிழகம் முழுக்க சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். பிரச்சாரத்தில் செம பிஸியாக இருந்ததால், மிஷ்கின் டைரக்ஷனில் நடித்துக்கொண்டிருந்த "சைக்கோ' படத்திற்கு சின்ன பிரேக் விட்டிருந்த உதயநிதி, கடந்த வாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடத்தி, "சைக்கோ'-வை முடித்துவிட்டார். படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி என மெகா ஹீரோயின்கள் இருக்கிறார்கள். "சைக்கோ'-வின் டப்பிங், மிக்ஸிங் வேலைகள் முடிந்ததும் "துப்பறிவாளன்-2'-வை ஆரம்பிக்கிறார் மிஷ்கின்.

bitsகல்யாணம் மற்றும் சுப காரியங்கள் நடக்காத நாட்களில், சாலிகிராமத்தில் இருக்கும் தனது கல்யாண மண்டபத்தை சினிமா மற்றும் டி.வி. சீரியல் ஷூட்டிங்குகளுக்கு வாடகைக்கு விடுகிறாராம் இளைய தளபதி விஜய்.

சுந்தர் சி. டைரக்ஷனில் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு கோவளம் கடற்கரையில் பார் செட் போட்டு ஷூட்டிங் நடந்தது. அரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டி பீதியைக் கிளப்பி போலீசில் சிக்கிய சூளைமேடு ரவுடி பினுவின் ஸ்டைலில் கேக் வெட்டும் சீனும் அந்த பார் செட்டில் படமாகியுள்ளது. டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் காமெடி கலந்த வில்லனாக படத்தில் வருகிறாராம்.

இயக்குநர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தனக்கு நெருக்கமான பிரபல இயக்குநர்கள், இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கு பிரியாணி விருந்து வைத்திருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

"தேவராட்டம்' படத்திற்கு பல திக்குகளிலிருந்தும் விமர்சனங்கள் பாய்ந்து வந்ததால், அடுத்த படத்தை சாதி அடையாளம் இல்லாமல் எடுக்கும் முடிவில் இருக்கிறாராம் முத்தையா. இதற்காக சென்டிமென்ட் + ஆக்ஷன் கலந்த கதை ஒன்றை விஜய் ஆண்டனிக்காக ரெடி பண்ணியுள்ளாராம் முத்தையா.

பதினைந்தே நாட்களில் முப்பது லட்ச ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட "ஒத்த செருப்பு' படத்தின் டப்பிங், ரீரெக்கார்டிங், மிக்ஸிங் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, படத்தின் வியாபாரத் திற்காக காத்திருக்கிறாராம் ரா. பார்த்திபன்.

அஜீத்தை வைத்து அதிக படங்களை எடுத்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. இவர் தனது மகனை ஹீரோவாக்கும் முயற்சியில் பல புதுமுக டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.

கவிப்பேரரசு வைரமுத்து வின் மகன் மதன் கார்க்கி, இப்போது பாடல்கள் எழுதுவதைவிட பெரிய பெரிய இயக்குநர்களிடம் கதை டிஸ்கஷன் செய்வதில்தான் ஆர்வம் காட்டுகிறார்.

bb

அறிமுக இயக்குநரான தேவராஜ் வித்தகக் கவிஞர் பா. விஜய்யிடம் கதை சொல்லப்போயிருக்கிறார். கதையைக் கேட்பதற்கு முன்பே தனது சம்பளம் 60 லட்ச ரூபாய் என்றிருக்கிறார் விஜய். ""சார் இந்தப் படத்துல பாட்டெழுதத்தான் உங்ககிட்ட கதை சொன்னேன். ஹீரோவாக நடிப்பதற்கு அல்ல'' எனக் கூறிவிட்டு, கடைசி வரை கதையை சொல்லவே யில்லையாம்.

சசிகுமார்- மடோனா செபஸ்டின் ஆகியோர் காம்பினேஷனில் சுந்தர பாண்டியனின் "கொம்பு வச்ச சிங்கம்டா' ஃபைனான்ஸ் பிரச்சினையால் திக்கித் திணறுகிறதாம். அதேபோல் சேரன் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் "வை ராஜா வை' படமும் ஃபைனான்ஸ் பிரச்சினையால் பாதியேலேயே படுத்துவிட்டதாம்.

சிவகங்கை எம்.பி. தொகுதியில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சாரில் போட்டியிட்டு டெபாசிட்டை பறிகொடுத்தார் கவிஞர் சினேகன். தோல்வியின் விரக்தி சினேகனை ரொம்பவே பாடாய்ப்படுத்தி விட்டது போல. பாடல் எழுதுவதற்காக டைரக்டர் யாராவது ஃபோன் பண்ணினால்கூட ""நான் அங்க இருக்கேன், இங்க இருக்கேன், பிஸியா இருக்கேன்'' என்கிறாராம்

cine020719
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe