/idhalgal/cinikkuttu/bits-bazaar-24

சென்னை இ.வி.பி. ஸ்டுடியோவில் ஆறு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான ஃபுட்பால் ஸ்டேடியம் செட் போடப்பட்டு, விறு விறுப்பாக நடந்துவருகிறது அட்லீ டைரக்ஷனில் விஜய் நடித்து வரும், இன்னும் பெயரிடப்படாத படம். பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அதி நவீன வசதிகளுடன் பிரம் மாண்ட வீடு கட்டும் பணியி லும் மும்முரமாக உள்ளாராம் விஜய்.

dபோன மாதம் ரிலீசான ஏ.எல். விஜய் டைரக்ட் பண்ணி யிருந்த "வாட்ச்மேன்', மற்றொரு படமான "குப்பத்து ராஜா'- வரை தொடர்ச்சியாக ஜி.வி. பிரகாஷூக்கு படங்கள் ஊத்திக்கொண்டன. அதனால் இப்போது வசந்த பாலன் டைரக்ஷனில் ஜி.வி. பிரகாஷ்- அபர்ணதி காம்பினேஷனில் தயாராகியிருக்கும் "ஜெயில்' படத்தை ரிலீஸ் பண்ண பெரும்பாடு பட்டு வருகிறாராம் படத்தின் தயாரிப்பாளரான விஜய்யின் மாஜி மேனேஜர் பி.டி. செல்வகுமார்.

விக்ரமை வைத்து "ஸ்கெட்ச்' டைரக்ட் பண்ணிய விஜய் சந்தர், இப்போது விஜய்சேதுபதியை வைத்து டைரக்ட் பண்ணும் "சங்கத் தமிழன்' படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து முக்கால்வாசி முடிந்துவிட்டதால், எஸ்.பி. ஜனநாதனின் "லாபம்' படத்தில் பிஸியாக இருக்கிறா

சென்னை இ.வி.பி. ஸ்டுடியோவில் ஆறு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான ஃபுட்பால் ஸ்டேடியம் செட் போடப்பட்டு, விறு விறுப்பாக நடந்துவருகிறது அட்லீ டைரக்ஷனில் விஜய் நடித்து வரும், இன்னும் பெயரிடப்படாத படம். பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அதி நவீன வசதிகளுடன் பிரம் மாண்ட வீடு கட்டும் பணியி லும் மும்முரமாக உள்ளாராம் விஜய்.

dபோன மாதம் ரிலீசான ஏ.எல். விஜய் டைரக்ட் பண்ணி யிருந்த "வாட்ச்மேன்', மற்றொரு படமான "குப்பத்து ராஜா'- வரை தொடர்ச்சியாக ஜி.வி. பிரகாஷூக்கு படங்கள் ஊத்திக்கொண்டன. அதனால் இப்போது வசந்த பாலன் டைரக்ஷனில் ஜி.வி. பிரகாஷ்- அபர்ணதி காம்பினேஷனில் தயாராகியிருக்கும் "ஜெயில்' படத்தை ரிலீஸ் பண்ண பெரும்பாடு பட்டு வருகிறாராம் படத்தின் தயாரிப்பாளரான விஜய்யின் மாஜி மேனேஜர் பி.டி. செல்வகுமார்.

விக்ரமை வைத்து "ஸ்கெட்ச்' டைரக்ட் பண்ணிய விஜய் சந்தர், இப்போது விஜய்சேதுபதியை வைத்து டைரக்ட் பண்ணும் "சங்கத் தமிழன்' படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து முக்கால்வாசி முடிந்துவிட்டதால், எஸ்.பி. ஜனநாதனின் "லாபம்' படத்தில் பிஸியாக இருக்கிறார் விஜய் சேதுபதி. "சங்கத் தமிழ'னின் கதை மதுரையில் இருந்து ஸ்டார்ட் ஆகிறதாம்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியை வைத்து குஷ்பு சுந்தர்.சி. தயாரித்த "நட்பே துணை' படம் முதலுக்கு மோசமில்லை என்பதால், மீண்டும் ஆதியை வைத்து படம் தயாரிக்கிறார் சுந்தர். சி.

d

பேய்க் கதைகளை விரும்பும் ஹீரோயின்களான நயன்தாரா, அமலாபால், த்ரிஷா லிஸ்டில் "கயல்' ஆனந்தியும் இணைந் திருக்கிறார். செம த்ரில்லிங் கான பேய்ப்படத்தில் "கயல்' ஆனந்தி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முக்கால்வாசி முடிந்துவிட்டதாம்.

காமெடி கஞ்சா கருப்பு, ஏகப்பட்ட கடனில் தத்தளித்ததால், தான் ஆசை ஆசையாய் bசென்னை வளசரவாக்கத்தில் கட்டிய பாலா- அமீர் வீட்டை இரண்டு கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டார் என்பதை பல மாதங்களுக்கு முன்பே "சினிக்கூத்து' இதழில் எழுதியிருந்தோம். இப்போது அதே வளசரவாக் கத்தில் மாதம் 30 ஆயிரம் வாடகை வீட்டில் குடியிருக்கி றார் கஞ்சா கருப்பு.

ப்போதெல்லாம் வைகைப்புயல் அவ்வளவாக சென்னையில் இருப்பதில்லை யாம். மாதத்தில் முக்கால்வாசி நாட்கள் மதுரை அருகே இருக்கும் பண்ணை வீட்டில் தான் தங்குகிறாராம். எந்தப் பட வாய்ப்புகளும் இல்லாத தால், சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் தனது அலுவல கத்தை மாத வாடகைக்கு விட்டுள்ளாராம்.

டைரக்டர் ஹரி, சிவ கார்த்திகேயனுக்காக சூப்பர் ஆக்ஷன் கதை ஒன்றை ரெடிபண்ணி வருகிறார்.

"நேற்று-இன்று-நாளை' டைரக்டர் ரவிக்குமார் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் டைரக்ட் பண்ணும் படம், இவற்றுக்கு அடுத்தபடியாக ஹரி படத்திற்கு கால்ஷீட் கொடுக்கும் ஐடியா வில் இருக்காராம் சிவா. சுப்ரமணிய சிவா- சமுத்திரகனி காம்பினேஷனில் உருவாகும் "வெள்ளை யானை', ஜெய்- ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா காம்பினேஷனில் ரிலீசுக்குத் தயாராக இருக்கும் "நீயா-2', செல்வசேகரன் டைரக்ட் பண்ணும் "வெண்ணிலா கபடிக்குழு-2', புதுமுக இயக்குநர் ராஜா முகமது கனி டைரக்ட் பண்ணும் "உற்றான்' உட்பட ஏழெட் டுப் படங்களில் சின்ன வேடங் கள் என்றாலும், ரசிகர்களின் கவனம் ஈர்க்கும்படி நடித்துவருகிறார் ராண்டில்யா சோழன்.

ma

னீஷா யாதவ், நட்டி என்ற நட்ராஜுடன் ஜோடி போட்டுள்ள "சண்டிமுனி' படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாம். இதற் கடுத்ததாக சில முன்னணி டைரக்டர்களிடம் கதை கேட்டுள்ளாராம் மனீஷா. "வழக்கு எண் 18/9' மூலம் மனீஷாவுக்கு நல்ல ஸ்கோப் கொடுத்த பாலாஜி சக்திவேல் டைரக்ஷனில், மீண்டும் நடிக்க வேண்டும் என்பது மனீஷாவின் ஆசையாம். அப்புறம் முக்கிய மான சங்கதி என்னன்னா, மலைப்பிரதேசமான கோத்த கிரியில் மனீஷாவுக்கு சொந்த மாக டீ எஸ்டேட்டும், பெரிய பண்ணை வீடும் உள்ளதாம். அக்னி வெய்யிலை சமாளிப் பதற்காக கோத்தகிரியில் இருக்கும் அந்த குளுகுளு வீட்டில்தான் டேரா போட்டுள்ளாராம் மனீஷா யாதவ்.

ஆர். கண்ணன் கை வண்ணத்தில் வெளிவந்த பரத்- தமன்னாவுக்கு ஹிட் கொடுத்த "கண்டேன் காதலை' படத்தில் சந்தானத்தின் காமெடியும் கலக்கலாக இருந்தது. சமீபத்தில் அதர்வாவை வைத்து ஆர். கண்ணன் தயாரித்து டைரக்ட் பண்ணிய "பூமராங்' பலத்த அடி வாங்கியதால் சில லட்சங்களுக்கு கடனாளியானார் கண்ணன். அந்தக் கடனை சமாளிப்பதற்காக சந்தானத்தை ஹீரோவாகப் போட்டு படம் எடுக்கத் தயாராகிவிட்டார். "டகால்டி' ஷூட்டிங்கில் இருந்த சந்தானத்திற்கு பூங்கொத்து கொடுத்து, ஜூலை மாதம் படப் பிடிப்பை ஆரம்பித்து, டிசம்பர் மாதம் ரிலீஸ் பண்ணும் திட்டத்தை யும் கன்ஃபார்ம் பண்ணிவிட்டார் கண்ணன். சந்தானத் திற்கு ஜோடியாக "பூமராங்' ஹீரோயின் களான "மேயாத மான்' இந்துஜா, மேகா ஆகாஷ் ஆகிய இருவரில் ஒருவரிடம் பேசும் ஐடியாவில் இருக் காராம் கண்ணன். தனது மசாலா பிக்சர்ஸ் பேனரு டன் எம்.கே.ஆர்.பி. பேனரின் எம்.கே.ஆர். பிரசாத்துடன் கூட்டு சேர்ந்து, இப்படத்தைத் தயாரிக்கிறார் கண்ணன்.

bit

பி.எம்.ஆர். ஃபிலிம் ஃபேக்ட்ரி பேனரில் "உடுக்கை' என்னும் படம் தயாராகிறது. ஆர். சிவராமன், படத்தின் ஹீரோ விபின், என்.பி.எம். உமர், சோழன் சிவா ஆகியோர் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார்கள். எம்.ஆர். பாலமித்ரன் டைரக்ட் பண்ணும் "உடுக்கை'-யில் சஞ்சனா சிங், அங்கிதா, வலீனா, லட்சுமி என நான்கு ஹீரோயின்கள். பூஜைக்கு முன்பாக பி.ஆர்.ஓ. நிகில் முருகன் அனுப்பியிருந்த ஸ்டில்களில் நான்கு ஹீரோயின்களில் ஒருவர் படுக்கையில் படுத்த படியும், ஒருவர் வேறொரு டைப்பாக வும் செம ஹாட்டாக போஸ் கொடுத்திருந்தார்கள்.

b

முத்தையாவின் "தேவராட்ட'-த்தில் சூரியின் காமெடி சுத்தமாக எடுபடவே யில்லை. ஆனாலும் "காஞ்சனா-3' சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தில் செம ஹேப்பியாக இருக்கிறார் சூரி.

மதுரையில் சிவகார்த்தி கேயனை வைத்து புரோட்டா கடை திறந்ததுபோல், சென்னையில் விஜய் சேதுபதி, கார்த்தி அல்லது ராகவா லாரன்சை வைத்து ஓட்டல் திறக்கும் ஐடியா இருக்கிறதாம் சூரிக்கு.

cine140519
இதையும் படியுங்கள்
Subscribe