Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazaar-23

ரிசையாக மூன்று படங்கள் ஊத்தியதால் வருத்தத்தில் இருக்கும் விஜய் ஆண்டனி, ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் கைகோர்த்திருக்கும் "கொலைகாரன்' படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்.

Advertisment

t

டைரக்டர் ஆண்ட்ரூ ஏகாம்பரம் கடுமையாக உழைத்திருக்கிறாராம். இந்தப் படத்தின் ஹீரோயினாக ஆஷிமா நர்வால் அறிமுகமாகிறார்.

Advertisment

"கொலைகாரன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. ஹீரோயின் ஆஷிமா ஜில்லுன்னு வந்தார்.

விஜய் சேதுபதியை வைத்து "புறம்போக

ரிசையாக மூன்று படங்கள் ஊத்தியதால் வருத்தத்தில் இருக்கும் விஜய் ஆண்டனி, ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் கைகோர்த்திருக்கும் "கொலைகாரன்' படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்.

Advertisment

t

டைரக்டர் ஆண்ட்ரூ ஏகாம்பரம் கடுமையாக உழைத்திருக்கிறாராம். இந்தப் படத்தின் ஹீரோயினாக ஆஷிமா நர்வால் அறிமுகமாகிறார்.

Advertisment

"கொலைகாரன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. ஹீரோயின் ஆஷிமா ஜில்லுன்னு வந்தார்.

விஜய் சேதுபதியை வைத்து "புறம்போக்கு' எடுத்த டைரக்டர் எஸ்.பி. ஜனநாதன், இப்போது "லாபம்' படத்தை ஆரம்பித்துள்ளார். விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்க்கையையும் தனது பாணியில் லாபத்தில் பதிவு செய்கிறார் ஜனநாதன். விஜய் சேதுபதிக்கு ஜோடி யாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வருகிறார் ஸ்ருதி ஹாசன். "லாபம்' படத்தை தனது சொந்த பேனரில் தயாரிக்கிறார்

விஜய் சேதுபதி. படத்தின் ஷூட்டிங், விஜய் சேதுபதியின் சொந்த ஊரான ராஜபாளையத்தில் ஆரம்பமாகியுள்ளது.

கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் காம்பினேஷனில் முத்தையா டைரக்ஷனில் தயாராகியிருக்கும் "தேவராட்டம்' படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

அந்த விழாவில் பேசிய டைரக்டர் முத்தையா, ""தேவர்மகன்'னு கமல் படம் எடுத்தா கம்முன்னு இருக்கிறார்கள். "பருத்திவீரன்'னு அமீர் படம் எடுத்தா கண்டுக்க மாட்டேங்குறாங்க. ஆனா என்னோட படங்கள் மட்டும் குறிப்பிட்ட ஒரு ஜாதியை உயர்த்திப் பிடிப்பதா கோபப் படுகிறார்கள். இந்த "தேவராட்டம்' படம் என்பது ஒரு ஆட்டக் கலையைப் பற்றியது'' என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய "ஆதித்யா' டி.வி. புகழ் அகல்யா அமர்க்களமாக வந்திருந்தார்.

a

"எங்கேயும் எப்போதும்' படத்தின் டைரக்டர் சரவணன், இப்போது மோகன்லால்- த்ரிஷா காம்பினேஷனில் ஒரு படம் டைரக்ட் பண்ணிவருகிறார். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ராஜ்கிரண் வீடு அருகே இருக்கும் ஒரு பங்களாவில் ஷூட்டிங் நடந்துவருகிறது.

ரா. பார்த்திபனின் "ஒத்த செருப்பு' படத்தின் டப்பிங் வேலைகள், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள நடிகை லிலிஸிக்குச் சொந்தமான லிமேஜிக் லாண்டர்ன் ஸ்டுடியோவில் நடந்துவருகிறது. படத்தில் ஒரே ஒரு பாடல்தானாம். ஆனாலும் ஆடியோ மற்றும் டீசர் ரிலீஸ் விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளாராம் பார்த்திபன்.

ms

சுதா கொங்கரா டைரக்ஷனில் சூர்யா நடிக்கும் "சூரரைப் போற்று' படத்தின் மொத்த கதைக்களமும் மதுரைதானாம். இதனால் படத்தின் நேட்டிவிட்டிக்காக மதுரைக்காரர்களை மட்டுமே நடிக்கவைக்க முடிவுசெய்து ஆடிஷன் நடத்திவருகிறாராம் சுதா கொங்கரா.

cine070519
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe