மூன்றுபேரின் ஹோப்!
இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாகிறது "உச்சகட்டம்.' சுனில்குமார் தேசாய் டைரக்ட் பண்ணும் இப்படத்தின் நான்கு மொழிகளிலும் தாகூர் அனூப்சிங்தான் ஹீரோ. ஆனால் மொழிக்கேற்ற மார்க்கெட்டுக்குத் தகுந்தபடி, சாய்தன்ஷிகா, தான்யா ஹோப், ஸ்ரத்தா தாஸ், ஹர்சிகா பூஞ்ஞா என ஹீரோயின் கள் வரிசை கட்டுகிறார்கள். இந்தப் பட ரிலீசையும், ஹிட் ரிசல்டையும் ரொம்பவே எதிர்பாத்திருக்கிறார்கள் "தடம்' ஹீரோயின் தான்யா ஹோப்பும் "கபாலி' சாய்தன்ஷிகாவும் ஸ்ரத்தா தாஸும்.
எப்பங்க ரிலீசாகும்?
தெலுங்கில் தாறுமாறு ஹிட் அடித்த "அர்ஜூன் ரெட்டி'தான் ஷாலினி பாண்டேவுக்கு சூப்பர் அடையாளம். அந்த "அர்ஜுன் ரெட்டி'தான் தமிழில் "100% காதல்' என ரீமேக்காகியிருக்கு. தமிழிலும் ஷாலினி பாண்டேதான் ஹீரோயின். இப்படத்தின் ஹீரோவான ஜி.வி. பிரகாஷின் இப்போதைய மார்க்கெட் நிலவரம் கலவரமாக இருப்பதால், "100% காதல்' பிஸ்னெஸ் ரொம்பவே டல்லடிக்குதாம். இந்தப் படம் ரிலீசாச்சுனா தமிழில் ஒரு ரவுண்டு வரலாம், ஆனா படம் எப்ப ரிலீசாகும்னு தெரியலையே என ரொம்பவே ஃபீல் பண்றாராம் ஷாலினி பாண்டே.
ஆனாலும் இந்த கவலை ஃபீலிங்கையெல்லாம் ஓரங்கட்டி வச்சுட்டு, இந்தியின் மெகா டைரக்டரான அனுராக் காஷ்யப் படத்தில் கமிட் ஆகிவிட்டாராம் ஷாலினி. இந்தியில் ஏற்கெனவே "மெரி நிமோ', "ஹெலிகாப்டர் ஈலா' போன்ற படங்களில் நடித்தவர்தான் ஷாலினி பாண்டே.
தெலுங்கில் செம ஹிட் அடித்த "கீதா கோவிந்தம்' என்ற ஒரே படம் மூலம் பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா.
தெலுங்குல ஹிட் கொடுத்துட்டா அப்புறம் என்ன தமிழ் சினிமாதானே டார்க்கெட்.! ராஷ்மிகாவின் அந்த டார்க்கெட்டும் சக்சஸ் ஆகிப்போச்சு. ஆமா, எஸ்.ஆர். பிரபு தயாரிக்க, பாக்யராஜ் கண்ணன் டைரக்ஷனில் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ராஷ்மிகாதான் கார்த்திக்கு ஜோடி. டோலிவுட்டில் என்ட்ரியாவதற்கு முன்னால், ""தமிழ் ஹீரோக்களில் விஜய்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்''னு சொல்லிக் கிட்டிருந்தவர், இப்ப என்னடான்னா, கார்த்தி, சிவகார்த்தி, விஷால், சூர்யான்னு பெரிய பட்டிலையே வாசிக்கிறாராம். பொழைக்கத் தெரிஞ்ச பாப்பாதான்.
எல்லாரும் ஒண்ணுதான்!
சமீபத்தில் மும்பையில் நடந்த ஃபேஷன் ஷோ ஒன்றில் ரேம்ப் வாக் செய்து பட்டயக் கிளப்பியிருக்கிறார் "பேட்ட' மாளவிகா மோகனன்.
நடிப்பிலும் செம சுட்டியான இவர், இப்போது "காக்காமுட்டை' படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த அண்ணாமலை டைரக்டராக அறிமுகமாகி, தெலுங்கு ஹீரோவான விஜய் தேவர ஹொண்டாவை வைத்து தமிழில் எடுக்கும் "ஹீரோ'வின் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். ""மலையாள ஃபீல்டுல கேரவன்லாம் கிடையாது. ஷூட்டிங் போற இடத்துல ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிச்சு அங்க தான் எல்லாரும் தங்குவோம். ஹீரோ, ஹீரோயின், லைட்மேன் அப்படிங்கிற வித்தியாசமெல்லாம் கிடையாது. எல்லாரையும் ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்ணுவாங்க'' என உண்மையச் சொல்கிறார்.
ஆனால் மத்த சினிமா ஃபீல்டு இருக்கே, அம்புட்டுப் பேரும் ரொம்பத் தான் அழிச் சாட்டியம் பண்ணு வாய்ங்க.