Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazaar-2

ஒய்யார ஓனரம்மா...

shilpareddy

.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்கள் செம சூடுபிடிக்க ஆரம்பிச்சிருச்சு. ராஜஸ்தான் ராயல் டீமின் ஓனரம்மா ஷில்பா ஷெட்டி, சம்மர் லீவுக்காக குடும்பத்துடன் மாலத்தீவுக்கு போயிட்டு, கடற்கரையில செம ஜில்லின்னு போஸ் கொடுத்து, அதை இன்ஸ்டாகிராமிலும் தட்டிவிட்டிருக்காக. இனிமே ராஜஸ்தான் ராயல் டீம் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் விளையாடுமே!

Advertisment

vikramprabhumagima-nambiyar

பிரபல கதாசிரியர் "அன்னக்கிளி' செல்வராஜின் மகன் தினேஷ் செல்வராஜின் டைரக்ஷனில் "துப்பாக்கி முனை' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபு, அடுத்ததாக ராஜ்தீப் டைரக்ஷனில் "அசுரகுரு'-வில் கமிட் ஆகியுள்ளார். ஹ

ஒய்யார ஓனரம்மா...

shilpareddy

.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்கள் செம சூடுபிடிக்க ஆரம்பிச்சிருச்சு. ராஜஸ்தான் ராயல் டீமின் ஓனரம்மா ஷில்பா ஷெட்டி, சம்மர் லீவுக்காக குடும்பத்துடன் மாலத்தீவுக்கு போயிட்டு, கடற்கரையில செம ஜில்லின்னு போஸ் கொடுத்து, அதை இன்ஸ்டாகிராமிலும் தட்டிவிட்டிருக்காக. இனிமே ராஜஸ்தான் ராயல் டீம் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் விளையாடுமே!

Advertisment

vikramprabhumagima-nambiyar

பிரபல கதாசிரியர் "அன்னக்கிளி' செல்வராஜின் மகன் தினேஷ் செல்வராஜின் டைரக்ஷனில் "துப்பாக்கி முனை' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபு, அடுத்ததாக ராஜ்தீப் டைரக்ஷனில் "அசுரகுரு'-வில் கமிட் ஆகியுள்ளார். ஹீரோவுக்கு ஈக்குவலாக ஹீரோயினுக்கும் அதிரடி சண்டைக்காட்சிகள் இருப்பதால், ஹீரோயின் மகிமா நம்பியார் புல்லட் ஓட்டுதல், வில்வித்தை, மலை ஏற்றம் என கடுமையான டிரெய்னிங் எடுக்கிறாராம்.

Advertisment

katharin

விஜய்யின் "தெறி' தெலுங்கில் ரீமேக்காகிறது. ரவி தேஜா, தமிழ் "தெறி'-யில் எமிஜாக்சன் கேரக்டருக்கு கேத்ரீன் தெரசா இப்போதைக்கு கமிட் ஆகியிருக்கிறார்கள்.

விஷாலுடன் "இரும்புத்திரை' (மே-11 ரிலீஸ்). சிவகார்த்திகேயனுடன் "சீமராஜா', விஜய் சேதுபதியுடன் "சூப்பர் டீலக்ஸ்' என தமிழிலும், ஐந்து படங்கள் தெலுங்கிலும் என கல்யாணத் திற்குப் பின்னும் செம பிஸியாக இருக்கிறார் சமந்தா. பிரதியுக்ஷா என்ற டிரஸ்ட்மூலம் அனாதைக் குழந்தைகள், ஆதரவற்ற முதியோர்களுக்கு தாராளமாக உதவி செய்கிறார் சமர்த்துப் பொண்ணு சமந்தா.

ajith

"விவேகம்' படத்தில் அஜீத்துடன் நடித்தவர் பிரான்ஸ் காரரான செர்ஜிகுரோசான். மே 1 அஜீத்தின் 47-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, "தல அஜீத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்து' என இங்கிலீஷ் கேக்கை ட்விட்டரில் போட்டு வாழ்த்து சொல்லியுள்ளார் செர்ஜியின் மனைவி. செர்ஜியின் மனைவியைப் பாராட்டு மழையிலும் அன்பு அருவியிலும் நனைத்துவிட்டார்கள் அஜீத்தின் ரசிகர்கள்.

மிழில் "காதல் சொல்ல வந்தேன்' மூலம் அறிமுகமானார் மேக்னா ராஜ். "வைதேகி காத்திருந்தாள்' படத்தில் விஜயகாந்தின் முறைப்பெண் ணாக வரும் பரிமளத்தின் மகள்தான் மேக்னா ராஜ். கவிஞர் சினேகனுடன் "உயர்திரு 420'-ல் நடித்தபிறகு கன்னடத்திலும் தெலுங்கிலும் பிஸியானார். ஐந்து வருடமாக காதலித்த கன்னட நடிகரும் நம்ம ஊரு அர்ஜூனின் (இவரும் கன்னடம்தான், ஆனா இப்போதைக்கு நம்ம ஊரு) அண்ணன் மகனுமான சிரஞ்சீவி ஷார்ஜாவை ஏப்- 30-ஆம் தேதி கிறிஸ்துவ முறைப்படியும் மே 2-ஆம் தேதி இந்து முறைப்படியும் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு மேக்னா ராஜ்.

டைரக்டர், ஹீரோ, ஹீரோயின், டெக்னீஷியன்கள் என அனைவருமே புதியவர் கள் கூட்டணியில் தயாராகிறது "சந்தோஷத்தில் கலவரம்' என்ற படம். பல விளம்பரப் படங்களையும் குறும்படங்களை யும் இயக்கி, விருதுகள் பெற்ற கிராந்தி பிரசாத் இப்படத்தின்மூலம் இயக்குனராகிறார். ஸ்ரீகுரு சினிமாஸ் பேனரில் திம்மா ரெட்டி என்ற ஆந்திரா பார்ட்டிதான் படத்தைத் தயாரிக்கிறார்.

பாகுபலிகளின் மெகா வசூல், பலரை சரித்திரப்படம் எடுக்கத் தூண்டியுள்ளது. வள்ளல் மகாபிரபு கர்ணன் கதை சினிமாவாக உள்ளது. பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டு, இப்போது கர்ணனை மீண்டும் தூசு தட்டியிருக்கிறார்கள். தமிழ், இந்தி, மலையாளத்தில் தயாராகும் இதில் கர்ணனாக சீயான் விக்ரம் நடிப்பது உறுதியாகியுள்ளது. திரைக்கதை முழுமையாக தயாரானபின், அதை சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைத்துப் பூஜை செய்திருக்கிறார் டைரக்டர் விமல்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe