Advertisment

பிட்ஸ் பஜார் 2 ஆஃப் மேட்டர்

/idhalgal/cinikkuttu/bits-bazaar-2-matter

"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்று ஒரு படம் வந்து அது சுமாரா போச்சு. இந்த நேரத்தில் நடிகை வரலட்சுமி அந்தப் படத்தைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. "எச்சரிக்கை படம் புதியவர்களால் புதிய கதைக்களத்துடன் எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தை தியேட்டரில்

"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்று ஒரு படம் வந்து அது சுமாரா போச்சு. இந்த நேரத்தில் நடிகை வரலட்சுமி அந்தப் படத்தைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. "எச்சரிக்கை படம் புதியவர்களால் புதிய கதைக்களத்துடன் எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு நன்றி. அதேசமயம், படத்தைப் பற்றி தேவையில்லாமல் குறைகூறி சில விமர்சனங்கள் வந்தன. ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட இந்தப் படம் பல சிரமங்களுக்கு இடையே எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட முயற்சிகளை பாராட்ட மனமில்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாமலாவது இருக்கலாம்'' என்று வரலட்சுமி கூறியிருக்கிறார். படம் ஊத்திக்கிட்ட விஷயத்தை மறைக்க தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து வரலட்சுமியை வைத்து இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்டிருப்பதாக ஒரு டாக் ஓடுவது வேறுவிஷயம்.

Advertisment

2half

"ஆர்எக்ஸ் 100' தெலுங்குப் படத்தில் நடித்து ஓவர்நைட்டில் பாப்புலரான நடிகை பாயல் ராஜ்புத் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இரண்டு தெலுங்குப் படங்களிலும், ஒரு பஞ்சாபிப் படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். ""தெலுங்கில் டைரக்டர் பானுசந்தர் இயக்கத்தில் இதுவரை பாக்காத போல்டான கேரக்டரில் நடிக்கிறேன்'' என்கிறார். ரவுடியாகட்டும், அமைச்சராகட்டும் தப்பு பண்ணா தயங்காம தட்டிக்கேட்கிற கேரக்டராம். படத்துக்காக கபடி விளையாட்டிலும் பயிற்சி எடுத்திருக்கிறாராம். செப்டம்பர் மாதக் கடைசியில் ஷூட்டிங் ஆரம்பிக்கு தாம். இதுக்கிடையில் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ரெண்டு பஞ்சாபிப் பட சூட்டிங்கும் போயிட்டிருக்காம். தமிழில் யாரும் இந்தப் பொண்ணை கூப்புடலையோ.

Advertisment

cine180918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe