சூர்யா- கே.வி. ஆனந்த்- ஆர்யா- சாயிஷா சைகல் காம்பினேஷனில் தயாராகும் "காப்பான்' படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட கதையாம். இதற்காக தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் பத்து ஏக்கர் நெல்வயல் எரிந்து நாசமாகும் சீனை பிரம்மாண்டமாகப் படமாக்கியிருக்கார் டைரக்டர் கே.வி. ஆனந்த்.
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் "டக்கால்ட்டி' படத்தின் ஷூட்டிங், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஏரியாக்களில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
விக்ரமை வைத்து "ஸ்கெட்ச்' எடுத்த டைரக்டர் விஜய் சந்தர், அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து டைரக்ட் பண்ணும் படத்தின் ஷூட்டிங் மார்ச் 3-ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது.
தனது இருமகன்களையும் கதாநாயகனாக்கிவிட்ட மயில்சாமி, மகன்களின் வளர்ச்சிக்காக, பல சினிமா கம்பெனிகளுக்கு கால்கடுக்க, ஏறி இறங்கிவருகிறாராம்.
சத்யராஜ், வரலட்சுமி ஆகியோரை வைத்து "எச்சரிக்கை' படத்தைத் தயாரித்த டைம்லைன் சினிமாஸ் தயாரிப்பாளர் சுந்தர் அண்ணாமலை, இப்போது சீனு ராமசாமி டைரக்ஷனில் படம் தயாரிக்க முடிவுசெய்து, அட்வான்சும் கொடுத்து விட்டார்.
விஷ்ணுவிஷால்- அமலாபால் காம்பினேஷனில் "ராட்சசன்' சூப்பர்ஹிட் படத்தை டைரக்ட் பண்ணியிருந்தார் ராம்குமார்.
அந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளாராம் பெல்லம் கொண்டா சுரேஷ்.
மலையாள சினிமாவில் பத்துக்கும் மேற்பட்ட ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்த அனுசித்தாரா தமிழில் என்ட்ரியாகிறார்.
"தம்பி திரைக்கள'மும், ஆர்.கே. சுரேஷின் "ஸ்டுடியோ 9' பேனரும் இணைந்து தயாரிக்கும் "அமீரா'-தான் அனுசித்தாராவின் முதல் தமிழ்ப் படம். செந்தமிழன் சீமானும் ஆர்.கே. சுரேஷும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இப்படத்தை ரா. சுப்பிரமணியன் டைரக்ட் பண்ணுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் ஒளிப்பதிவு செய்ய, கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்களுக்கு இசையமைக்கிறார் விஷால் சந்திரசேகர். அமீரா என்றால் இளவரசி என்று அர்த்தமாம்.
ரமேஷ் பி. பிள்ளையின் அபிஷேக் பிலிலிம்ஸ் பேனரில், சித்தார்த்- ஜி.வி. பிரகாஷ் காம்பினேஷனில், சசி இயக்கத்தில் பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கிறார். இப்படம் முடிவடையும் நிலையில் உள்ளதால், அடுத்ததாக எஸ். எழில் டைரக்ஷனில், ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. எழிலிலின் வழக்கமான காமெடி சப்ஜெக்ட்தானாம் இப்படமும்.
"இந்தியன்-2'-விற்காக சென்னைப் புறநகரில் இருக்கும் ஸ்டுடியோ ஒன்றில், 20 கோடி ரூபாயில் செட் போட்டுள்ளதாம் லைக்கா. செட் வேலையே மூன்று மாதங்களாக நடந்ததாம். எம்.பி. தேர்தல் பிஸியில் கமல் இருப்பதால், மற்ற கேரக்டர்களை வைத்து ஷூட்டிங் நடத்துகிறாராம் டைரக்டர் ஷங்கர்.
அதே லைக்கா சுபாஷ்கரன், "கிருமி' பட டைரக்டர் அனுசரணை வைத்து (இப்போது அனுசரண், முருகையன் ஆகிவிட்டார்) "பன்னிக்குட்டி' என்ற படத்தை ஆரம்பிக்கப் போகிறார். கருணாகரன், யோகிபாபு, திண்டுக்கல் லியோனி, சிங்கம்புலிலி, டி.பி. கஜேந்திரன் என காமெடி பட்டாளமே "பன்னிக்குட்டி'-யில் இருக்கு.
"லைஃப் அகெய்ன் இந்தியா' என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகை கௌதமி, சமீபத்தில் திருவண்ணாமலையிலுள்ள பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்தார். குழந்தைகளிடம் நீண்டநேரம் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்த கௌதமிக்கு, திருவண்ணாமலையில் கல்விமையம் ஒன்றை நிறுவும் ஆசையும் உள்ளதாம்.
சிவகார்த்திகேயன்- ராஜேஷ். எம்.- நயன்தாரா கூட்டணி சேரும் "மிஸ்டர் லோக்கல்' படத்தில் ஒரு பாடல் மட்டும்தான் ஷூட்டிங் பாக்கியுள்ளதாம். இந்தப் பாடலை தமிழ்நாட்டில் எடுக்கலாமா, வேறு மாநிலத்தில் எடுக்கலாமா அல்லது வெளிநாட்டில் எடுக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளாராம் டைரக்டர் ராஜேஷ். ""ஆமா, இந்த "மிஸ்டர் லோக்கல்' ரஜினியின் "மன்னன்' பட உல்டா வாமே- நெசமா ராஜேஷ்?''