"பேட்ட' கார்த்திக் சுப்புராஜின் "இறைவி'-யில் நடித்தவர் பூஜா தேவரியா. தியேட்டர் ஆர்ட்டிஸ்டான இவர் அமெரிக்கா, லண்டன், மலேசியா, பெங்களூர் என பறந்துகொண்டே இருப்பார். தனது சொந்தக் கதை ஒன்றை "லைட்ஸ் கேமரா வுமன்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார் பூஜா தேவரியா. நடிகைக்குள்ளும் ஒரு எழுத்தாளினி.

கேத்தரின் தெரசா. இவரும் அடிக்கடி அமெரிக்காவுக்குப் பறக்கிறவர்தான். ஆனா பறக்கிறதெல்லாம் படிக்குறதுக் குத்தானாம். சமீபத்தில் அமெரிக்காவுக்குப்போய் "பாப்பிங் லாக்கிங் டான்ஸ்' என்ற டிப்ளமோ கோர்ஸை முடித்து விட்டுத் திரும்பியுள்ளார். தாயகம் திரும்பிய சூட்டோடு "தெறி'-யின் தெலுங்கு ரீமேக்கில் பிஸியாகி விட்டார் கேத்தரின் தெரசா.

bits

Advertisment

ஏ.சி. முகில் டைரக்ஷனில் பிரபுதேவா- நிவேதா பெத்துராஜ் ஜோடிபோடும் "பொன்.மாணிக்கவேல்' படத்தின் கடைசிக் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மைசூர் அரண்மனையில் பிரபுதேவா- நிவேதா பெத்துராஜின் டூயட் சாங் ஒன்று சமீபத்தில் படமாகியுள்ளது.

"கே. 13' என்ற டைட்டிலிலில் ஒரு படத்தை டைரக்ட் பண்ணி வருகிறார் அறிமுக இயக்குநர் பரத் நீலகண்டன். வீட்டின் டோர் நம்பரான கே. 13 என்பதை அடிப்படையாக வைத்து செம த்ரில்லர் படமாக தயாராகி, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. அருள்நிதி- ஸ்ரத்தா ஸ்ரீநாத் காம்பினேஷனில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா மியூஸிக் போட, அரவிந்த்சிங் கேமராமேனாகப் பணியாற்றுகிறார்.

bits

Advertisment

பயோடெக்னாலஜியில் மாஸ்டர் டிகிரியும், ஸ்டெம்செல் பயாலஜியில் பி.எச்.டி. பட்டமும் பெற்ற அறிவாளி நடிகை வித்யா பிரதீப். இவர் யாருன்னா ஏ.எல். விஜய்யின் "சைவம்', பாண்டிராஜின் "பசங்க-2' படங்களில் நடித்தவர்.

ஹாலிலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரான் டைரக்ஷனில் வெளியான "டைட்டானிக்' உலகம் முழுவதும் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. அந்த டைட்டானிக்கின் ஹீரோ லியானர்டோ டி கேப்ரியோவின் அதிதீவிர ரசிகையாம் நம்ம ஊரு கீர்த்தி சுரேஷ். டி கேப்ரியோ நடித்த அனைத் துப் படங்களின் டிவிடிக்களையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறாராம் கீர்த்தி சுரேஷ்.

bits

"சண்டி முனி' என்ற படத்தில் நட்டி(எ) நட்ராஜ் ஹீரோவாகவும், மனீஷா யாதவ் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். திருநெல்வேலியைச் சேர்ந்த மில்கா செல்வகுமார் இந்தப் படத்தின் டைரக்டராக அறிமுகமாகிறார். மில்காவும் சூரியும் சேர்ந்து "சன் டி.வி.' யில் "மில்கா- புல்கா' என்ற காமெடி ஷோவை நடத்தியிருக்கிறார்கள்.

""ரொம்ப வருட போராட் டத்துக்கப்புறம் இந்த "சண்டி முனி' சான்ஸ் கிடைச்சிருக்கு'' என சந்தோஷமாகச் சொன்னார் மில்கா செல்வகுமார்.

கௌதம் கார்த்திக்கின் புதுப் படத்திற்கு "செல்லப்பிள்ளை' என டைட்டில் வைத்திருக்கிறார் கள். இப்படத்தில் சூரிக்கு வெயிட்டான கேரக்டராம். சந்திரா ஆர்ட்ஸ் இசக்கிதுரையும், ஒயிட்லைன் புரொடக்ஷன் அன்பழகனும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் கதை- திரைக்கதை- வசனம்- பாடல்கள்- இயக்கம் எல்லாமே அறிமுக இயக்குநர் அருண் சந்திரன். ஒளிப்பதிவு சுகுமார், எடிட்டிங் தினேஷ் பொன்ராஜ், ஆர்ட் டைரக்டராக துரைராஜ் ஆகியோர் பணியாற்ற, இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார் தீசன்.

bits

வரிசையாக சந்தித்த தொடர் தோல்விகளால், தனது சொந்தப் பேனரில் படம் தயாரிப்பதை தற்காலிலிகமாக நிறுத்தி வைத்திருக்காராம் விஜய் ஆன்டனி. பிரபுதேவா, ஜீவா, ஆர்.ஜே. பாலாஜி ஆகியோரை வைத்து தலா ஒரு படம், மேலும் இரண்டு படங்கள் என ஒரே நேரத்தில் ஐந்து படங்களைத் தயாரித்துவருகிறார் வேல்ஸ் யுனிவர்சிட்டியின் வேந்தரான ஐசரி கணேஷ். இதில் எந்தப் படத்தின் ஷூட்டிங்கை கண்டினியூ பண்றது, எந்தப் படத்தின் ஆடியோவை முதலிலில் ரிலீஸ் செய்வது, எந்தப் படத்தை முதலிலில் ரிலீஸ் செய்வது என்ற பெரும் குழப்பத்தில் இருக்கிறாராம் ஐசரி கணேஷ்.

அருண்குமாரை வைத்து "டீல்', விஜய்சேதுபதியை வைத்து "றெக்க' படங்களை டைரக்ட பண்ணிய ரத்னசிவா, இப்போது ஜீவாவை வைத்து டைரக்ட் பண்ணிவரும் படத்திற்கு "சீனு' என்ற டைட்டில் வைத்திருக்கிறார்.

"கத்துக்குட்டி' படத்தின் டைரக்டர் சரவணன், அடுத்ததாக த்ரிஷாவை வைத்து பேய்ப்படம் எடுப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

டைரக்டர் டி.பி. கஜேந் திரனுக்குச் சொந்தமான லாட்ஜ் ஒன்று சென்னை சாலிலிகிராமம் அருணாச்சலம் ரோட்டில் உள்ளது. இந்த லாட்ஜில் தங்க கஸ்டமர்களை அழைத்துவரும் சினிமாக்காரர்களுக்கு கைநிறைய கமிஷன் கொடுத்து குஷிப்படுத்து கிறாராம் கஜேந்திரன்.

"தர்மபிரபு' படத் திற்குப்பின் மீண்டும் ஒரு காமெடிப் படத்தில் நடிக்கிறார் யோகிபாபு. மெட்ராஸ் என்டர் பிரைசஸ் நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்தை பாலமுருகன் டைரக்ட் பண்ணுகிறார்.

ஒன்றிரண்டு படங்களைத் தவிர கைவசம் படங்கள் இல்லாததால் சூரியின் மார்க்கெட் டல்லடிக்கிறதாம். மதுரையில் பரோட்டா கடை ஆரம்பித்ததுபோல், சென்னையிலும் பரோட்டா கடை ஆரம்பிக்கும் ஐடியாவில் இருக்காராம் சூரி.

மறைந்த இயக்குநர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் தயாரிப்பாளராகவும் டைரக்டராகவும் அறிமுகமான படம் "களவாணி மாப்பிள்ளை.' தினேஷ் நடித்த இந்தப் படம் பப்படம் ஆகிவிட்டது. சமீபத்தில் காந்தி மணிவாசகத்தைச் சந்தித்த அவரது உறவினர்கள், ""தம்பி, அப்பா மாதிரி நீ படம் பண்ணி ஜெயிக்காட் டாலும் பரவாயில்ல. அவர் சேர்த்துவச்ச சொத்தைக் காப்பாத்துனா போதும்'' என அட்வைஸ் பண்ணினார்களாம்.

பதினைந்து வருடங்களுக்குமுன்பு "ஜெயம்'ரவியை வைத்து "தாஸ்' படத்தை டைரக்ட் பண்ணிய பாபு யோகேஸ்வரன், நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் ஆன்டனியை வைத்து "தமிழரசன்' படத்தை ஆரம்பித்துள்ளார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.