Advertisment
/idhalgal/cinikkuttu/bits-bazaar-14

சூப்பர் ஸ்டார் ரஜினியின் "பேட்ட', தல அஜீத்தின் "விஸ்வாசம்' ஆகிய ரெண்டு படங்களின் டப்பிங் வேலைகளும் ஒரே நேரத்தில் ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்துவருகிறது. ரெண்டுமே மதுரை ஏரியா கதை என்பதால், மதுரைக்காரய்ங்களே டப்பிங் பேசுறாய்ங்களாம்.

Advertisment

rajini

பிரபு சாலமனின் "கும்கி-2'-வில் டைரக்டர் லிங்குசாமியின் சகலை மகன்தான் ஹீரோவாம்.

Advertisment

"றெக்க' சிவா டைரக்ஷனில் ஜீவா ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மாயவரத்தில் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.

bits

"வரலட்சுமி பாம்பாகவும், ராய்லட்சுமி மனுஷியாகவும், ஹீரோவாக ஜெய்யும் நடிக்கும் "நீயா-2' ஷூட்டிங் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் தினத்தந்தி கார்டனில் பொம்மை பாம்புடன் நடந்துவருகிறது.

சூர்யாவை வைத்த

சூப்பர் ஸ்டார் ரஜினியின் "பேட்ட', தல அஜீத்தின் "விஸ்வாசம்' ஆகிய ரெண்டு படங்களின் டப்பிங் வேலைகளும் ஒரே நேரத்தில் ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்துவருகிறது. ரெண்டுமே மதுரை ஏரியா கதை என்பதால், மதுரைக்காரய்ங்களே டப்பிங் பேசுறாய்ங்களாம்.

Advertisment

rajini

பிரபு சாலமனின் "கும்கி-2'-வில் டைரக்டர் லிங்குசாமியின் சகலை மகன்தான் ஹீரோவாம்.

Advertisment

"றெக்க' சிவா டைரக்ஷனில் ஜீவா ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மாயவரத்தில் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.

bits

"வரலட்சுமி பாம்பாகவும், ராய்லட்சுமி மனுஷியாகவும், ஹீரோவாக ஜெய்யும் நடிக்கும் "நீயா-2' ஷூட்டிங் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் தினத்தந்தி கார்டனில் பொம்மை பாம்புடன் நடந்துவருகிறது.

சூர்யாவை வைத்து "சிங்கம்-3' எடுத்த டைரக்டர் ஹரி, அடுத்ததாகவும் சூர்யாவை வைத்துத்தான் படம் ஸ்டார்ட் பண்ணப் போறாராம். திருநெல்வேலி ஏரியாவில் கதை நடக்கிறதாம்.

"காற்றின் மொழி' ஹிட்டால் செம ஹேப்பியாக இருக்கும் ஜோதிகா, இப்போது கடமை உணர்வுள்ள ஆசிரியையாக ஒரு படத்தில் நடித்துவருகிறார்.

விஜய்யின் 63-ஆவது படத்தை கல்பாத்தி அகோரத்தின் ஏ.ஜி.எஸ். தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக railakshmiமூன்றாவதுமுறை கமிட்டாகியிருக்கிறார் நயன்தாரா. விஜய்யுடன் மூன்றாவதுமுறையாக இணைகிறார் டைரக்டர் அட்லீ. இதெல்லாம் தெரிஞ்ச சங்கதிதான். ஸ்போர்ட்ஸ் த்ரில்லர் கதைதான் படம் என்றா லும், அரசியல் மசாலா தூக்கலாக இருக்கவேண்டும் என அட்லீயிடம் சொல்லியிருக்கிறாராம் விஜய்.

"திமிரு பிடிச்சவன்' படமும் கவுத்தியதால் ஏகப்பட்ட கடனில் மாட்டி கண்ணுமுழி பிதுங்குகிறதாம் விஜய் ஆண்டனிக்கு. கதை கேட்பதிலிருந்து எல்லாவற்றிலும் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா தலையிடுவதால்தான் இந்தப் பிரச்சினையே. இப்போது அர்ஜுனுடன் நடித்துவரும் "கொலைகாரனும்' காலை வாரினால் விஜய் ஆண்டனியின் பாடு ரொம்பவே திண்டாட்டமாகிவிடும் என்கிறார்கள் விஜய் ஆண்டனியின் நட்பு வட்டாரத்தினர்.

சென்னை கோயம்பேடு ஏரியாவைச் சுற்றித்தான் "தேள்' பட ஷூட்டிங் நடந்துவருகிறது. இரவெல்லாம் வேலை செய்துவிட்டு, பகலில் ஓய்வெடுக்கும் காய்கறி மார்க்கெட் தொழிலாளர்களைத்தான் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளாக்கியிருக்கிறார் டைரக்டர்.

"பற' படத்தின் ஷூட்டிங் முடிவடையும் நிலைக்கு வந்தபோதும் தனது சம்பளப் பாக்கி 2 லட்ச ரூபாய் வராததால், ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்-அப் போட மறுத்துவிட்டாராம் சமுத்திரகனி. விஷயம் கேள்விப்பட்டு, பதறியடித்துக்கொண்டு, இரண்டு லட்சத்துடன் தயாரிப்பாளர் வந்தபிறகே மேக்-அப் போட்டாராம் கனி.

ஜீத்தை வைத்து "ஆழ்வார்' படத்தை எடுத்த டைரக்டர் செல்வா, நீண்ட இடைவெளிக்குப்பிறகு "நீச்சல்' என்ற படத்தை ஆரம்பிக்கப் போகிறார்.

சினிமா பி.ஆர்.ஓ. ஒருவர் ஆரம்பித்த "கள்ளன்' என்ற படம் பாதியிலேயே நின்றுவிட்டதால், செம கடுப்பில் இருக்கிறார் படத்தின் டைரக்டர் கரு. பழனியப்பன்.

"ராட்சசன்' ஹிட்டால் ஹேப்பியாக இருக்கும் விஷ்ணு விஷால், மற்ற சில படங்களில் பிஸியாக இருப்பதால், தனது சொந்தத் தயாரிப்பான "கவரிமான் பரம்பரை'-க்கு சின்ன பிரேக் விட்டுள்ளாராம்.

"வாழ்க விவசாயி' படத்தின் ஹீரோ அப்புக்குட்டிக்கு சம்பளம் 15 லட்சமாம்.

ajith

டைரக்டரும் தனுஷ் ரசிகர் மன்ற மாநிலச் செயலாளருமான சுப்பிரமணிய சிவா, மனநலம் பாதித்தவர்களை எங்கு, எப்போது பார்த்தாலும் அவர்களின் கையில் ஒருவேளை உணவுக்கு பணம் கொடுத்துவிட்டுத்தான் செல்வாராம்.

"திருட்டுப்பயலே', "நான் அவனில்லை' ஹீரோ ஜீவனை வைத்து "ஜெயிக்கிற குதிரை' படத்தை ஆரம்பித்தார் டைரக்டர் ஷக்தி சிதம்பரம். பதினைந்து நாட்கள் ஷூட்டிங் முடிந்த நிலையில், ஜீவனைத் தேடினால், தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விட்டாராம் பார்ட்டி. பார்த்தார் ஷக்தி சிதம்பரம், பிரபுதேவா- நிக்கி கல்ராணி காம்பினேஷனில் "சார்லி சாப்ளின் -2'-வை செம ஸ்பீடாக எடுத்துவிட்டார்.

இதனால் தயாரிப்பாளர் டி. சிவாவுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

cine111218
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe